Monday, July 4, 2016

ராம்குமார் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்?

நெல்லையில் இருந்து பலத்த காவலுடன் சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமாருக்கு வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குற்றத்திற்கான காரணங்கள், தன்மை போன்றவை அடிப்படையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும்.
 
ராம்குமார் ஒரு தலைக் காதலால் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்காகவும் கொலை செய்துள்ளாரா? குற்றவாளிக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளனரா? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பதெல்லாம்   முழுமையான புலன் விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும்.
 
இவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், மரண தண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது இந்த கொலை பணத்திற்காகவோ அல்லது பாலியல் வன்முறையுடன் சேர்ந்து செய்ப்படவில்லை. அதனால் மரணதண்டனை அளிக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படலாம்.
 
காதல் அல்லது ஒரு தலைக்காதலால் கொலை செய்யப்பட்டிருப்பதால், ஆயுள் தண்டனையோ அல்லது  இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்க வாய்ப்புள்ளது என சட்டநிபுணர் அஜிதா தனியார் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
 
 

கொலை செய்ய துணிந்தவர்; ஆனால், தற்கொலை செய்ய அஞ்சிய ராம்குமார்

DINAMANI

சென்னை: சுவாதியை கொலை செய்த பின்பு தற்கொலை செய்துகொள்ள அச்சம் ஏற்பட்டதால் ராம்குமார் சொந்த ஊருக்குத் திரும்பி பதுங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிகிச்சையில் இருந்ததால் அவரிடம் தொடர் விசாரணை நடத்த முடியவில்லை. சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை நேரம் கிடைத்தபோது கொஞ்சம் கொஞ்சமாக கேள்விகள் கேட்கப்பட்டன. இருப்பினும் அவர் சில கேள்விகளுக்கு மட்டுமே லேசான பதில் கூறினார். பிறகு சைகைகளைக் காட்டினார்.

"சென்னைக்கு வேலை தேடிச் சென்றபோது சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுவாதியைப் பார்த்தேன். அப்போது அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதனைக் கூற அவரை அடிக்கடி பின்தொடர்ந்தேன். ஒருநாள் நான் பின்தொடர்வதை அறிந்த அவர், பெற்றோர் மற்றும் போலீஸாரிடம் தெரிவித்து விடுவதாக எச்சரித்தார்.

மேலும், எனது முக அழகு குறித்து குறை கூறினார். அதனால் எனக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. எனது அழகை குறை கூறியதால் தாக்க முயன்றபோது கொலை நிகழ்ந்துவிட்டது. அதன்பின்பு நானும் தற்கொலை செய்யவே முடிவு செய்தேன்.

ஆனால், எனக்கு தற்கொலை செய்ய அச்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து சொந்த ஊருக்குத் தப்பிவந்து பதுங்கினேன். அங்கு என்னை போலீஸார் கைது செய்ய வந்தபோது வேறு வழியில்லாமல் கழுத்தில் காயத்தை ஏற்படுத்தினேன் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சுவாதியை கொலை செய்ய காரணம் என்ன?- பிடிபட்ட ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்


ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் பழக்கம்; கடந்த ஆண்டே சென்னைக்கு வந்ததாக தகவல்

சுவாதியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து தனிப்படை போலீஸாரிடம் ராம்குமார் பல்வேறு விவரங்களை தெரிவித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போது ஃபேஸ் புக் மூலம் சுவாதியுடன் நட்பு ஏற்பட் டுள்ளது. ஒருதலைக் காதலால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு வந்ததாக வாக்கு மூலத்தில் அவர் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத் தில், ராம்குமார் என்பவரை திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரம் கிராமத்தில் போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ராம்குமாரை போலீஸார் மீட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனை கண்காணிப் பாளர் இளங்கோவன் செல்லப்பா தலைமையிலான மருத்துவர் குழு வினர் ராம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் உடனடியாக அவரிடம் இருந்து வாக்குமூலம் எதுவும் போலீஸாரால் பெற முடியவில்லை.

இதற்கிடையே ராம்குமாரிடம் விசாரணை நடத்த சென்னையில் இருந்து தனிப்படையினர், நுங்கம் பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் நேற்று முன்தினம் திருநெல்வேலிக்கு வந்தனர். அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் விக்ரமன் மற்றும் ராம்குமாரை பிடித்த தனிப்படையினரிடம் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவில் ராம்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டு மெதுவாக பேசும் நிலைக்கு வந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து கிராம நிர் வாக அலுவலர்களான ஜெயராமன் (பாளையஞ்செட்டிகுளம்), மயி லேறும்பெருமாள் (வி.எம்.சத்திரம்) ஆகியோர் முன்னிலையில் தனிப் படை போலீஸார் ராம்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

ஃபேஸ்புக் மூலம் அறிமுகம்

ராம்குமார் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:

நான் ஆலங்குளம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தேன். படிக்கும்போதே ஃபேஸ்புக் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அவ்வாறுதான் சுவாதி எனக்கு அறிமுகம் ஆனார். பின்னர் வாட்ஸ்அப் மூலம் அவருடன் தொடர்புகொண்டேன். அடிக்கடி அவருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்திகள் அனுப்புவேன். அவரும் பதில் அனுப்புவார். இதைத் தொடர்ந்து அவரை பார்க்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு சென்றேன். ஆனால், வேலைக்குச் செல்வதாக எனது வீட்டில் கூறியிருந்தேன்.

சென்னை சூளைமேடு பகுதியில் சுவாதியின் வீடு அருகே மேன்ஷனில் தங்கினேன். சில மாதமாக சுவாதியை பின்தொடர்ந்தேன். அங்கு உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட சுவாதி வருவார். நானும் அங்கு செல்வேன். சுவாதி வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.

திட்டியதால் ஆத்திரம்

ஃபேஸ்புக் நண்பர் என்பதால் சுவாதியும் என்னிடம் நட்பாக பழகினார். கடந்த நவம்பர் மாதம் நான் அவரை காதலிப்பதாக தெரிவித்தேன். அப்போது அவர் கோபமடைந்து திட்டினார். தொடர்ந்து நான் அவரை காதலிக்குமாறு தொடர்ந்து கூறியதால், தனியாக செல்லாமல் தன் தந்தையை துணைக்கு அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு சென்று வந்தார்.

நான் பலமுறை ரயில் நிலையத்தில் காத்திருந்து அவரிடம் பேசினேன். அப்போது ஒருமுறை, நான் தேவாங்குபோல் இருப்பதாகக் கூறி, என்னிடம் இனி பேசாதே என்று கூறிவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

காதலிக்கும்படி கெஞ்சினேன்

ஊருக்கு வந்து தோட்டத்தில் வாழைக் குலைகளை வெட்ட வைத்திருந்த அரிவாளை ஒரு விவசாயியிடம் இருந்து திருடிக்கொண்டு சென்னைக்கு சென்றேன். மீண்டும் கடந்த 24-ம் தேதி ரயில் நிலையத்தில் சுவாதியிடம் காதலிக்கும்படி கெஞ்சினேன். அப்போதும் அவர் மறுத்தார். எனவே அவரை அரிவாளால் வெட்டினேன்.

எதுவும் தெரியாதது போல சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத தால் ஊருக்கு திரும்பி வந்து விட்டதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறினேன்.

இவ்வாறு போலீஸாரிடம் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

வீட்டில் சோதனை

ராம்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உதவி ஆணையர் தேவராஜ் தலை மையிலான தனிப்படை போலீஸார் மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ராம்குமாரின் லுங்கி, செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.

சுவாதியை வாயில் வெட்டுவதே எனது இலக்கு: ராம்குமார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொன்ற கொலையாளி ராம்குமார் நெல்லை மருத்துவமனையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 
 
இந்நிலையில் அவர் நெல்லை மருத்துவமனையில் இருந்த போது அவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது வாக்குமூலத்தில் சுவாதியை வாயில் வெட்டுவதே எனது இலக்கு. அதற்காக சொந்த ஊருக்கு வந்து வாழைத்தார் வெட்டும் அரிவாளை எடுத்துவந்ததாக கூறப்பட்டுள்ளது.
 
சுவாதியிடம் நான் பலமுறை எனது காதலை வெளிப்படுத்தினேன். ஆனல் அவர் அதனை நிராகரித்துவிட்டார். எனது நடை, உடை, பொருளாதாரம் போன்றவற்றை குறிப்பிட்டு என்னை மிகவும் இழிவுபடுத்தி பேசினார் சுவாதி.
 
இதனால் ஆத்திரமடைந்த நான் என்னை இழிவுபடுத்தி பேசிய சுவாதியின் வாயை வெட்ட வேண்டும் என முடிவெடுத்து திட்டமிட்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று சுவாதியின் பின்புறமாக நின்று அவரது வாயை வெட்ட அரிவாளை வீசினேன் அது தவறி அவரது கழுத்தில் பட்டது.
 
நான் சுவாதியை வெட்டியதும் அங்கிருந்த ரயில் பயணிகள் அலறினர். நான் அரிவாளுடன் இருந்ததால் யாரும் என் அருகில் வரவில்லை. இதனை பயன்படுத்தி சுவாதியை சரமாரியக வெட்டி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

எனது வீட்டிலும் சுவாதி கொலையை பற்றி பேசினார்கள்: ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராம்குமார் கடந்த 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவர் மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.


 
 
அதில், சுவாதி இறந்த செய்தியை தொலைக்காட்சி மூலமாகவே தெரிந்து கொண்டதாகவும், இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றதாக கூறினார்.
 
மேலும், திடீரென நான் வீட்டுக்கு சென்றதும் வீட்டில் உள்ளவர்கள் ஏன் வந்தாய் என கேட்டார்கள். உடம்பு சரியில்லை என கூறியதால் எதுவும் சொல்லவில்லை. சுவாதியை கொலை செய்துவிட்டு வீடுக்கு சென்றதும் முதலில் பதற்றமாக இருந்தது.
 
எனது வீட்டில் உள்ளவர்களும் சுவாதி கொலை பற்றி பேசினார்கள், நானும் அவர்களுடன் சகஜமாக பேசினேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக தகவல்கள் வருகிறது.

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

THE HINDU

சுவாதியை கொலை வழக்கில் கைதான ராம்குமாரை வரும் 18-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தின் பொறுப்பு மாஜிஸ்திரேட் கோபிநாத் ஆணையிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் இன்ஜினீயர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, செங்கோட்டை அருகே தனது வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமார் என்ற இளைஞரை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

போலீஸார் பிடிக்க முயன்ற போது, ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னையில் நடைபெறுவதால் ராம்குமாரை இங்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, நெல்லை சென்ற சென்னை தனிப்படை போலீஸார், நீதிபதி மற்றும் டாக்டர்களின் அனுமதி பெற்று ராம்குமாரை சென்னை அழைத்துவந்தனர்.



நெல்லையில் இருந்து ஆம்புலன்ஸில் சென்னை கொண்டுவரப்பட்ட அவர் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையிலேயே விசாரணை...

இந்நிலையில், இன்று காலை எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தின் பொறுப்பு மாஜிஸ்திரேட் கோபிநாத், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் ராம்குமாரை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.

நலமாக இருக்கிறார்:

ராம்குமாரை சோதித்த சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் காது.மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ராம்குமார் உடல் நலன் தேறி வருவதாகக் கூறினார். காயம் ஆறி வருவதாகவும் கூறினார்.

ஸ்வாதி கொலை: சந்தேக நபர் ராம்குமாருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்


ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரை தமிழக காவல்துறையினர் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்குமாரை, அந்த வளாகத்திலேயே சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பாக ஆஜர்படுத்தினர்.

அதன்பின்னர் ராம்குமாருக்கு வரும் 18 ஆம் தேதி வரை, அதாவது 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

அதுவரையிலும் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே, காவல்துறையினரின் காவலுடன் ராம்குமாருக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1 ஆம் தேதி இரவு திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள டி.மீனாட்சிபுரம் பகுதியில் இருந்த ராம்குமாரை தமிழகக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின் போது, ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் தானாகவே தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முயற்சித்ததாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமுற்றிருந்த ராம்குமாருக்கு உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்த காவல்துறை, தொடர்ந்து விரிவான சிகிச்சையை அளிக்க பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அறுவை சிகிச்சை பெற்ற ராம்குமாரின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறிய பிறகு, காவல்துறையினரின் கேள்விகளுக்கு ராம்குமார் பதிலளித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது சிகிச்சை பெற்று வந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலேயே திருநெல்வேலி முதலாவது நீதித்துறை நீதிமன்ற நீதிபதி எம்.ராமதாஸ் முன்பாகவும் ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.

அந்த சமயத்தில் நீதிபதி ராமதாஸ் அளித்த உத்தரவை அடுத்தே இன்று சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பாகவும் ராம்குமார் ஆஜர்படுத்தபட்டிருந்தார்.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...