Saturday, September 30, 2017

சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைக்கிறார்!

பிரேம் குமார் எஸ்.கே.

நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபத்தைத் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.




அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால், இந்த விழா அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் போற்றும் கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு திறந்து வைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அக்டோபர் 1-ம் தேதி நடைபெரும் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வார். அன்று ஏற்கெனவே ஒப்புகொண்ட, வெளியூர் நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்வதால் தன்னால் கலந்து கொள்ள இயலவில்லை” எனக் கூறியுள்ளார். இதை சிவாஜி குடும்பத்தினரும், நடிகர் சங்கமும் வரவேற்றுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி!!!
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.

இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ் நகல்கள், சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும். தேர்வுத்துறை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவர்.

இந்த நடைமுறையால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது. கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், ஆன்லைனில் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதற்கான பயன்பாட்டாளர் அடையாள எண் மற்றும் ரகசிய குறியீடு எண், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த குறியீட்டை பயன்படுத்தி, மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்திலேயே, சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த புதிய முறையால், மாவட்ட வாரியாக, போலி சான்றிதழ் காட்டி பணிக்கு வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு
உள்ளது
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வாய்ப்பளிக்க முடியாது: சுஷ்மா ஸ்வராஜ்
2017-09-28@ 13:03:30




நியூயார்க்: பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, நியூயார்க் நகரில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது, வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் 7,500 கோடி ரூபாய் அளவுக்கு, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்றிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என சுஷ்மாவிடம் கோரப்பட்டது. ஆனால், என்.ஆர்.ஐ.க்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள போதிய வாய்ப்புகள் ஏற்கனவே அளிக்கப்பட்டதாகக் கூறிய சுஷ்மா, மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பணிப்பதிவேடு 'டிஜிட்டல்'மயம் பணிதாமதம்:அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லை

பதிவு செய்த நாள்30செப்
2017
01:32

சிவகங்கை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்' மயமாக்கும் பணி தாமதமாகி வருகிறது.கருவூலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் பணிப்பதிவேட்டின் பக்கங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டு வருகின்றன. கணினியில் ஏற்றியவுடன் 'பிரின்ட்' எடுத்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வழங்கப்படும். அதில் ஏதேனும் பதிவுகள் விடுதல் இருந்தால், அவற்றை வரைவு அலுவலர் மூலம் சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

பணிப்பதிவேட்டில் ஊழியர்களின் சுயவிபரம், பணிநியமன ஆணை, பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், கல்வி தகுதிகள், ஜி.பி.எப்., ஓய்வூதிய திட்டம், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர்கல்வி பயில முன்அனுமதி, இடமாறுதல், பதவி உயர்வு, ஊதிய நிர்ணயம், தேர்வுநிலை, சிறப்புநிலை, ஊக்க ஊதியம், விடுப்பு, குடும்ப உறுப்பினர்கள், வாரிசு நியமனம் போன்ற பதிவுகள் இருக்க வேண்டும். பலரது பணிப்பதிவேட்டில் ஊக்க ஊதியம், விடுப்பு போன்ற பதிவுகள் கூட விடுபட்டுள்ளன. இதனால் அவற்றை சரிசெய்து தர சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கருவூலத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் விடுபட்ட பதிவுகளை சரிசெய்து கொடுக்காமல் ஊழியர்கள் தாமப்படுத்தி வருகின்றனர். சில துறைகளில் பதிவுகளை சரிசெய்து கொடுக்க வரைவு அலுவலர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி தொய்வடைந்துள்ளது.கருவூல கணக்குத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டந்தோறும் கருவூலங்களில் 'டிஜிட்டல்'மயமாக்கும் பணி நடக்கிறது. பலரது பணிப்பதிவேட்டில் ஏராளமான பதிவுகள் விடுபட்டுள்ளன. அதனை சரிசெய்து தர வலியுறுத்தியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். மாவட்டங்களில் இப்பணி முடிவடைந்துவிட்டால், பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்'மயமாக்க சென்னைக்கு தான் செல்ல வேண்டும், என்றார்.



தீபாவளி இனாம் கேட்கக்கூடாது என காஸ் சிலிண்டர் ஊழியர்களுக்கு டி.எஸ்.ஓ., எச்சரிக்கை
பதிவு செய்த நாள்
செப் 30,2017 00:19


மதுரை;''காஸ் சப்ளை செய்யும் ஊழியர்கள் தீபாவளி இனாம் கேட்கக்கூடாது. கேட்பதாக புகார் வந்தால் அவர்கள் மீதும், ஏஜன்சி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மதுரையில் நடந்த எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர்(டி.எஸ்.ஓ.,) பொன்ராமர் எச்சரித்தார்.எண்ணெய் நிறுவன அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் நடந்த விவாதங்கள்:சிதம்பரம்: சிலிண்டர்களுக்கான மானியம் முறையாக வங்கிகளில் செலுத்தப்படுவதில்லை. சிலிண்டர் வினியோக ஊழியர்கள் எடைமிஷின் கொண்டு வருவதும் இல்லை. கடந்த கூட்டங்களில் இப்பிரச்னைகளை சுட்டிகாட்டியும் நடவடிக்கை இல்லை.கோமதிநாயகம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஏஜன்சி சிலிண்டர்களுக்கு மானியம் ஆறு மாதங்களாக சில நுகர்வோருக்கு செலுத்தப்படவில்லை. எஸ்.எம்.எஸ்.,ம் வருவதில்லை. ஏஜன்சிகளிடம் முறையிட்டாலும் நடவடிக்கை இல்லை.

ஆர்தர்: ஐ.வி.ஆர்.எஸ்., முறையில் சிலிண்டர் புக் செய்ய காஸ் ஏஜன்சி, எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. இதில் பதிவு செய்யும் போது தவறுதலாக எண்களை அழுத்தி விட்டால் மானியம் ரத்தாகி விடுகிறது.சந்திரசேகர்: சிலிண்டர் லீக்கேஜ் போன்ற பிரச்னைகளால் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
ஜெயனேசன்: சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் 50 ரூபாய் வசூலிக்கின்றனர். கொடுக்க மறுத்தால் சிலிண்டர் சப்ளை செய்ய தாமதிக்கின்றனர். எந்த காஸ் ஏஜன்சி ஊழியர்களும் அடையாள அட்டை அணிவதில்லை. புகார் குறித்து போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதில்லை.வழங்கல் அலுவலர்: எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்.யோகானந்தம்: சில ஏஜன்சி நிறுவனத்தினர் பொது மக்கள் நடமாடும் இடங்களில் குடோன் அமைத்துள்ளனர். விபத்து அபாயம் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து குடோன்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.ஜெயபாலன்: செல்லுாரில் சில நாட்களுக்கு முன் லீக்கேஜ் ஆன சிலிண்டரை சப்ளை செய்தனர். உரிய நேரத்தில் கவனித்ததால் விபத்து 

தவிர்க்கப்பட்டது.எண்ணெய் நிறுவன அதிகாரிகள்: பழுதான சிலிண்டரை நுகர்வோருக்கு சப்ளை செய்யக்கூடாது; திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். எங்கு சப்ளை செய்யப்பட்டது என ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்புராம்: டூவீலர்களில் ஆறு சிலிண்டர்கள் வரை எடுத்துச்சென்று ஊழியர்கள் வினியோகிக்கின்றனர். நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் டூவீலர்களில் கொண்டு செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.

ராஜேந்திரன்: சிலிண்டர் சப்ளை செய்ய வரும் ஊழியர்கள் 50 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். தற்போது தீபாவளி வருவதால் அதை சுட்டிகாட்டி கட்டாயப்படுத்துகின்றனர்.சண்முகவேலு: சிலிண்டர் விலைகளில் வித்தியாசம் உள்ளது. ஏஜன்சிகளுக்கு இடையே விலை வேறுபாடுள்ளது. ஒரே விலையில் விற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அசோகன்: நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து காஸ் சிலிண்டர் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள்: சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் எடை மிஷின் வைத்திருக்க வேண்டும் என உச்சநீதிமன்றமே அறிவுறுத்தி உள்ளது. எடைமிஷன் கொண்டு வராத ஊழியர்கள் குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் எண் பதிவு செய்த வங்கிகள் மூலம் சிலிண்டர் மானியம் செலுத்தப்படுகிறது. மானியம் வராதபட்சத்தில் ஆதார், நுகர்வோர் எண்ணை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வழங்கல் அலுவலர்: காஸ் ஏஜன்சி நிறுவனத்தினர் ஊழியர்களிடம் கூடுதலாக 'டிப்ஸ்' வசூலிக்கக்கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும். எடைமிஷன் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் நலன்கருதி டூவீலரில் சிலிண்டர் கொண்டு செல்வதை ஏஜன்சிகள் தவிர்க்க வேண்டும். குறுகலான சந்து பகுதியாக இருந்தால் மினி லாரிகளில் கொண்டு சென்று சப்ளை செய்யலாம். ஊழியர்கள் அடையாள அட்டை அணிய கட்டாயப்படுத்த வேண்டும். தீபாவளி இனாம் கேட்டு நுகர்வோரை தொந்தரவு செய்யக்கூடாது. இதுபோன்ற புகார் வந்தால் காஸ் ஏஜன்சி மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
திருமண பதிவுக்கு ஆவணமாக ஆதார் ஏற்பு
பதிவு செய்த நாள்29செப்
2017
22:08

சென்னை,திருமண பதிவுக்கு மணமக்கள், பெற்றோர், சாட்சிகளின் ஆதார் அட்டையையும் ஆவணமாக்கி, தமிழக அரசு, அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருமணத்தை பதிவு செய்ய மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகள் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள், அடையாள சான்றுகளாக ஏற்கப்படுகின்றன. இந்த பட்டியலில், ஆதார் அட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்காக, திருமண பதிவு தொடர்பான, 1967 - இந்து திருமண விதிகளில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை, பதிவுத்துறை தலைவர் பிறப்பித்துள்ளார்.

மாற்றம் என்ன

 மணமக்களின் பெற்றோர் பெயர் மற்றும் முகவரிகளை சரி பார்க்கும்போது, அவர்கள் தாக்கல் செய்யும் அடையாள ஆவணங்களில் உள்ள பெயர்,
இனிஷியல் எனப்படும் முதல் எழுத்து, முகவரி ஆகியவை, விண்ணப்பத்தில் உள்ள விபரங்களுடன் ஒத்துப் போகிறதா என, பார்க்க வேண்டும்

 மணமக்களின் பெற்றோர் யாராவது இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தால், அதற்கான அசல் இறப்பு சான்றிதழை சரி பார்த்து, நகலை இணைக்க வேண்டும்.

 மணமக்களில் யாராவது ஒருவர், கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கான அசல் இறப்பு சான்றிதழை சரி பார்த்து, அதன் நகலை கண்டிப்பாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இந்த புதிய உத்தரவை சார் -- பதிவாளர்கள் அமல்படுத்துவதை, மாவட்ட பதிவாளர்களும், டி.ஐ.ஜி.,க்களும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.டி., சித்தா படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பதிவு செய்த நாள்29செப்
2017
21:51

சென்னை, இந்திய மருத்துவம்மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மற்றும் பாளையங்கோட்டை, அரசு சித்தா மருத்துவமனைகளில், எம்.டி., சித்தா மருத்துவ படிப்புகளுக்கு, 94 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை, அக்., 1 முதல், www.tnhealth.org என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை, அரும்பாக்கம்,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறைக்கு, அக்., 16க்குள் வந்து சேர வேண்டும். இதில் சேர, அகில இந்திய முதுநிலை ஆயுஷ் நுழைவுதேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

NEWS TODAY 2.5.2024