Saturday, September 30, 2017

சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைக்கிறார்!

பிரேம் குமார் எஸ்.கே.

நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபத்தைத் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.




அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால், இந்த விழா அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் போற்றும் கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு திறந்து வைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அக்டோபர் 1-ம் தேதி நடைபெரும் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வார். அன்று ஏற்கெனவே ஒப்புகொண்ட, வெளியூர் நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்வதால் தன்னால் கலந்து கொள்ள இயலவில்லை” எனக் கூறியுள்ளார். இதை சிவாஜி குடும்பத்தினரும், நடிகர் சங்கமும் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024