Thursday, September 28, 2017

அனிதா தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது: ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர்

Published : 27 Sep 2017 16:35 IST



அனிதா

அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது என ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாணவி அனிதா தற்கொலை குறித்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அதை தமிழக அரசிடம் சமர்ப்பிப்போம். மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது.

வேளாண் படிப்பில் சேரத் தயாரான மாணவி அனிதா ஏன் தற்கொலை செய்துகொண்டார்? அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்று விசாரிக்க ஆணையத்திடம் கேட்டுள்ளோம். கல்வியில் எஸ்.சி., எஸ்,டி., மாணவர்களுக்கு 18% இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்துவருகிறோம்" என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் செப். 1-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024