Friday, September 29, 2017

நாளை விஜயதசமி
பதிவு செய்த நாள்29செப்
2017
01:48




நாளை விஜயதசமியை ஒட்டி அம்பிகையை விஜயாம்பாளாக (பார்வதியின் ஒரு அம்சம்) அலங்கரிக்க வேண்டும். பூஜையறையில் மலர்க் கோலமிட வேண்டும். பால் பாயாசம், இனிப்பு வகை, பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின் மூலம் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.

மகிஷாசுரன் தனக்கு ஓரு பெண்ணால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் பெற்றான். வரத்தின் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தினான். இதற்கு முடிவு கட்ட எண்ணிய சிவன், தன் ஆயுதமான திரிசூலத்தை அம்பிகைக்கு வழங்கினார். திருமால் உள்ளிட்ட தேவர்களும் தங்களின் ஆயுதங்களைக் கொடுத்தனர். சிங்க வாகனத்தில் புறப்பட்ட அம்பிகை அசுரனைக் கொன்று வெற்றி வாகை சூடினாள். விஜயதுர்கா, மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள். இந்த வெற்றிக்குரிய நன்னாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.

பாட வேண்டிய பாடல்

மாலயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024