Thursday, September 28, 2017

நடராஜனை பார்க்க வர மாட்டேன்: சசிகலா
மருத்துவமனையில், உயிருக்கு போராடும் கணவர் நடராஜனை பார்க்க, 'பரோலில்' வர, சசிகலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.



சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நடராஜனுக்கு, சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்சசிகலாவை, கர்நாடக, அ.தி.மு.க., செயலர், புகழேந்தி சந்தித்து, 'பரோல் விடுமுறையில் வந்து,நடராஜனை பாருங்கள்' என, கூறியுள்ளார். பரோல் கேட்பதற்கான மனுவில் கையெழுத்திடும் படியும், சசிகலாவிடம், வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர். ஆனால், அம்மனுவில் கையெழுத்து போட, சசிகலா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அதே சமயம், நடராஜனின் உடல்நிலை பற்றி மட்டும், புகழேந்தியிடம் விசாரித்து உள்ளார்.இது குறித்து, மன்னார்குடி வட்டாரம் கூறியதாவது: நடராஜன், கவலைக்கிடமாக இருக்கிறார். அவருக்கு,முக்கியமான இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன.

அதற்கு முன், சசிகலா வந்து பார்க்க வேண்டும் என, உறவினர்கள் விரும்புகின்றனர்; ஆனால், அவர் மறுத்துள்ளார்.பரோல் விடுமுறைக்கு விண்ணப்பிக்க, அவர் விரும்பவில்லை.

ஜெயலலிதாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்ட நடராஜனுடன், 33 ஆண்டுகளாக, சசிகலா சேர்ந்து வாழவில்லை. 'சசிகலா நடராஜன்' என்ற பெயரை மாற்றி, 'வி.கே.சசிகலா' என, வைத்துக் கொண்டார்.

ஏற்கனவே, மகாதேவன், தினகரன் மாமியார் மரணத்திற்கும், சசிகலா வரவில்லை. இதனால், குடும்பத்தில் பிரச்னை வெடித்து உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...