Thursday, September 28, 2017


சங்கரன்கோவிலிருந்து பொறியியல் கல்லூரிக்கு பேருந்து இயக்கம்

By DIN | Published on : 28th September 2017 07:38 AM

சங்கரன்கோவிலிருந்து சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு அரசுப் பேருந்து சேவையை புதன்கிழமை செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

இந்த பேருந்து சங்கரன்கோவிலில் நாள்தோறும் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, கழுகுமலை, குருவிகுளம் வழியே கல்லூரியை காலை 8.50 மணிக்கு வந்தடையும். இதுபோல கல்லூரி வளாகத்திருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சங்கரன்கோவிலுக்கு மாலை 5.20 மணிக்கு சென்றடையும். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஆர். சோலைச்சாமி, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கிளை பொதுமேலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவிலிருந்து கழுகுமலை வழியே கல்லூரிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...