மாநில செய்திகள்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், சென்னைக்கு வந்தார்.
செப்டம்பர் 27, 2017, 04:45 AM
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் ஒருசேர குரல் கொடுத்து வந்தன. டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து, முதல்-அமைச்சர் மீதான ஆதரவை திரும்ப பெறுவதாக அழுத்தம் தந்தனர்.
எனவே கவர்னர் என்ன முடிவு எடுப்பார்? என அனைவரும் யோசித்து கொண்டிருந்த நேரத்தில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அடுத்தடுத்து ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த சந்திப்புகளுக்கு பிறகு கடந்த மாதம் 19-ந் தேதி சென்னைக்கு கவர்னர் வந்தார்.
தீர்ப்பை எதிர்நோக்கி...
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அதுவரையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கும் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றும், அதுவரை குடகு சொகுசு விடுதியில் இருந்து சென்னைக்கு வரமாட்டோம் என்றும் டி.டி.வி.தினகரன் அணியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் திட்டவட்டமாக உள்ளனர். எனவே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு என்னவாகும்? என்ற பரபரப்பு அடுத்ததாக தொற்றிக்கொண்டது.
கவர்னர் பற்றி கருத்து
இந்த எல்லா பரபரப்புகளையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று கூறியதெல்லாம் பொய்’ என்றும், ‘ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை’ எனவும் கூறி ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அளித்த பேட்டியில், ‘ஆஸ்பத்திரியில் இருந்த ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை’ என்றும், ‘சிகிச்சையின்போது ஆஸ்பத்திரிக்கு வந்த கவர்னரை நோக்கி ஜெயலலிதா கட்டை விரலை காட்டியதாக கூறுவதும் பொய்’ என்றும் குறிப்பிட்டார். தீபக் தெரிவித்த தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையில் கடந்த 21-ந் தேதி நாக்பூருக்கு புறப்பட்டு சென்ற தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மும்பை வழியாக சென்னைக்கு நேற்று காலை 11.50 மணிக்கு விமானம் மூலம் வந்தார். தற்போது தீபக் குற்றச்சாட்டு கூறிய நிலையில், கவர்னரின் சென்னை வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment