Thursday, September 28, 2017

கன்னியாகுமரியில் 10 எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகள் மூடல்..! பொதுமக்கள் அதிருப்தி

த.ராம் ரா.ராம்குமார்

ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் என்கிற எஸ்.பி.டி உள்பட 5 அசோசியேட் வங்கிகள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு விட்டன. இந்த இணைப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வங்கிகள் இணைப்பைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவின் ஒரு கிளையும், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூரின் 9 கிளைகளும் மூடப்படும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. அதைத் தொடர்ந்து, எஸ்.பி.டி உள்ளிட்ட 5 அசோசியேட் வங்கிகளின் பணியாளர்கள் கட்டாயமாக ஓய்வுபெற்றுச் செல்லும் வகையில் வி.ஆர்.எஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.




கேரளாவில், மொத்தம் உள்ள 852 எஸ்.பி.டி வங்கிக் கிளைகளில் 204ஐ மூடவும், இதே போன்று தமிழகத்தில் மொத்தம் 176 கிளைகளில் 58 கிளைகளை மூடவும் திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூரின் கிளைகள் 37 இருக்கின்றன. இதில் எஸ்.பி.டி 9 மற்றும் எஸ்.பி.ஐ ஒன்று என மொத்தம் 10 கிளைகள் மூடப்படுகின்றன. அதோடு, ஸ்டேட் பேங்க ஆஃப் திருவிதாங்கூரின் மண்டல அலுவலகமும் மூடப்படுகிறது.

அதைப்போன்று ஏ.டி.எம்-களும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வங்கிக் கிளைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் நிலவுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024