Wednesday, September 27, 2017


பேஸ்புக்கைத் தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ் - அப்புக்கும் சீனாவில் தடா!
By DIN | Published on : 26th September 2017 06:25 PM |




பீஜிங்: பிரபல சமூக வலை தளங்களான பேஸ்புக், டிவிட்டரைத் தொடர்ந்து தற்பொழுது செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் - அப்புக்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

உலகில் இணைய தள கண்காணிப்பு அதிக அளவில் இருக்கும் நாடுகளில் சீனா முதலிடத்திலுள்ளது. அரசுக்கு எதிரான எந்த விதமான செய்திகளையும் அங்கே நீங்கள் சுதந்திரமாகப் பகிர முடியாது. இதன் காரணமாக 2009-ஆம் ஆண்டில் இருந்தே அங்கே பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகிளின் எல்லா விதமான சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் மேப்புகள் உள்ளிட்ட அனைத்துமே தடை செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்ட்டாகிராமும் தடை செய்யப்பட்டு உள்ளது..

இந்த தடை வரிசையில் தற்பொழுது செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் - அப்பும் சேர்ந்துள்ளது. இந்த சேவையில் பரிமாறப்படும் தகவல்களை முழுவதும் யாரும் காண முடியாத வகையில் 'என்க்ரிப்ஷன்' செய்யப்படுவதால் இது தொடர்பாக சர்ச்சை இருந்து வந்தது. அதனால் முதலில் வாட்ஸ்-அப் வழியாக சாதாரண செய்திகள் தவிர படங்கள், விடியோக்கள் மற்றும் இதர கோப்புகள் எதையும் அனுப்ப முடியாமல் இருந்தது. தற்பொழுது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வாட்ஸ் - அப்பின் இயக்கம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது

ஒரு சில பகுதிகளில் ஒரு சில பேருக்கு வாட்ஸ் - அப் பயன்பாட்டில் இருந்தாலும் அதுவும்முழு வேகத்தில் இல்லாமல் மிகவும் மெதுவாக உள்ளது என்று கூறப்படுகிறது.

வாட்ஸ் - அப்பின் இடத்தினை தற்பொழுது மற்றொரு செய்தி பரிமாற்ற செயலியான வீசாட் பிடித்துள்ளது. ஆனால் வீசாட்டானது பயனாளர்களின் தகவல்களை சீன அரசாங்கத் துறைகளையோடு பகிர்ந்து கொள்கிறது என்று ஒரு தகவல் சில இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...