Saturday, September 30, 2017

மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை
dinamalar
பதிவு செய்த நாள்29செப்
2017
08:52




கோலாலம்பூர்: வடகொரியா அணு ஆயுத திட்டத்தையும், ஏவுகணை திட்டத்தையும் கை விட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் அழுத்தம் தந்து வருகின்றன. ஆனால் வடகொரியா இதில் விட்டுக் கொடுக்காமல், தனது அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டபோதும், வடகொரியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், மலேசிய நாட்டு மக்கள், வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு காரணமாக ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவதற்காக மலேசியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே அக்டோபர் 5-ம் தேதி நடக்க உள்ள போட்டி, பாதிப்புக்குள்ளாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பகவதி அம்மனுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கிடைக்குமா? - பக்தர்கள் எதிர்பார்ப்பு

த.ராம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா கடந்த 21-ம் தேதி முதல் நடந்து வருகிறது. அந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம், 10-ம் நாள் நடக்கும் பரிவேட்டைதான். அந்த நிகழ்வு நாளை பகல் 12 மணிக்கு நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து பகவதி அம்மன் எலுமிச்சை பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவார். பின்னர் கோவிலிலிருந்து பகவதி அம்மன் ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் சென்றடைவார்.




அங்கு அம்மன் வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். அதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வெள்ளிக் குதிரை வாகனத்தின் பகவதி அம்மன் கன்னியாகுமரியிலிருந்து ஊர்வலமாக வரும் போது பேண்ட் வாத்திய இசையுடன், துப்பாக்கி ஏந்திய போலீஸார் அணிவகுப்பு மரியாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேண்ட் வாத்திய இசையுடன் கூடிய போலீஸார் பாதுகாப்பு அம்மனுக்கு அளிக்கப்படவில்லை.




இந்தநிலையில், அம்மனுக்கு இந்த ஆண்டு முதல் பேண்ட் வாத்திய இசையுடன் கூடிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக குமரி மாவட்ட எஸ்.பி.யிடம் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். போலீஸார் அளிக்கும் பேண்ட் வாத்திய இசையுடன் கூடிய அணிவகுப்பு மரியாதையைக் காண பக்தர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
ஆதார் இல்லாட்டி உங்க கல்யாணத்துக்கு 'ஆதாரமே' இருக்காதாம், பார்த்துக்கங்க!
சென்னை: திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை நகலை பெற வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி டிஐஜிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 578 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருமணம் நடைபெற்ற தேதியில் இருந்து 90 நாட்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்காக, 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திருமண பதிவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்தது. இதை தொடர்ந்து மாநிலத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களை பதிவு செய்யும் நோக்குடன் கடந்த 2009ல் தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் இயற்றப்பட்டது.

அதன் பிறகு 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யவில்லை சட்டப்படி குற்ற தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருமணத்தின் பதிவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.திருமணபதிவு
அடையாள ஆவணங்கள் இணைப்பு

திருமணத்தை பதிவு செய்யும் போது, அதனுடன் அழைப்பிதழை இணைக்க வேண்டும். மேலும், மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகளின் அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உட்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவண நகல்களை வைக்க வேண்டும்.
ஐஜி சுற்றறிக்கை
சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை

திருமணத்தை பதிவு செய்யும் போது தற்போது ஆதார் அட்டையையும் ஒரு அடையாள ஆவணமாக ஏற்ற கொள்ள பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் டிஐஜிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து குமரகுருபரன் அனைத்து மண்டல துணை பதிவுத்துறை தலைவர், சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆதார் அட்டை ஆவணம்
அடையாள ஆவணம்

அதில், மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகளின் அடையாள ஆதார ஆவணமாக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் தற்போது ஆதார் அடையாள அட்டையையும் ஒரு அடையாள ஆவணமாக ஏற்று பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பெற்றோர் இன்சியல்
அதிகாரிகளுக்கு உத்தரவு

மணமக்களின் பெற்றோரது பெயர்கள் மற்றும் முகவரிகளை சரி பார்க்கும் பொழுது அவர்கள் தாக்கல் செய்யும் ஆதார ஆவணங்களில் கண்டுள்ள பெயர் மற்றும் முதலெழுத்தும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் மற்றும் முதலெழுத்தும் மற்றும் முகவரிகள் ஒத்துள்ளதா என பதிவு அலுவலர்கள் நன்று பரிசீலித்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டும்.
இறப்பு சான்றிதழ்
அசல் சரிபாப்பது அவசியம்

மணமக்களின் பெற்றோர் யாரேனும் இறந்து விட்டதாக விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இறந்தவரின் அசல் இறப்பு சான்றை சரிபார்த்து அதன் நகல் பெறப்பட்டு கோர்வை செய்ய வேண்டும். மேலும் மணமக்களில் யாரேனும் ஒருவர் கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என விண்ணப்பத்தில் குறிப்பிடும் நிகழ்வில் இறந்த கணவர்/மனைவியின் இறப்பு சான்றின் அசலை சரிபார்த்து அதன் நகலை கண்டிப்பாக பெற்று கோர்வை செய்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

source: oneindia.com
Dailyhunt
ஆயுத பூஜை: போக்குவரத்துக்கு இடையூறாக பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை




ஆயுத பூஜையை முன்னிட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆயுத பூஜையின் போது போக்குவரத்துக்கு இடையூறாக பூசணிக்காயை சாலைகள் மற்றும் தங்களது வீடுகளுக்கு முன் உடைப்பது, அதே போல கடைக்கு முன் உடைப்பது கூடாது.

இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமன்றி, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விபத்தில் சிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.

ஆகவே, சாலைகளில் கண்டிப்பாக பூசணிக்காய்களை உடைக்கக்கூடாது. மீறி உடைப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Dailyhunt
கணவர்கள் இனி காய்கறி வாங்க தெரியாதுனு சொல்ல முடியாது - இந்த லிஸ்ட்ட பாருங்க புரியும்...!




புனேவில் ஒரு பெண் தனது கணவர் காய்கறி வாங்குவதற்காக எழுதி கொடுத்துள்ள லிஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புனேவில் ஐடி தொழில் செய்து வருபவர் இரா கோல்வாக்கர். இவர் தனது கணவரிடம் காய்கறி வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு தான் இதுவரை காய்கறி வாங்கியது இல்லை எனவும், அதனால் நான் போகமாட்டேன் எனவும் ஒவ்வொரு முறையும் எஸ்கேப்பாகியுள்ளார்.

இதையே வாடிக்கையாக வைத்து கொண்டு வந்த கணவனுக்கு ஒரு ஷாக் காத்து கொண்டு இருந்தது. அதுதான் அவரது மனைவி எழுதி வைத்திருந்த காய்கறி லிஸ்ட்.

அதில் ஒவ்வொரு காய்கறியும் எந்த நிறத்தில், எப்படி இருக்க வேண்டும் என குறிப்பிட்டதுடன், காய்கறியை எளிதில் கண்டுபிடிப்பதற்காக அதன் படத்தையும் வரைந்து கொடுத்து அனுப்பி உள்ளார்.

தக்காளி பாதி மஞ்சளாகவும், பாதி சிவப்பாகவும் இருக்க வேண்டும் எனவும், வெங்காயம் சிறியதாகவும், வட்டவடிவமாக இருக்க வேண்டும் எனவும், பச்சை மிளகாய்களை இலவசமாக கேட்டு வாங்கி வரவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காய்கறி லிஸ்டை தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண் தனது கணவருக்கு கொடுத்தது நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சித்து பாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
22 பேரின் உயிரைப் பறித்த வதந்தி! மும்பை ரயில் நிலையத்தில் பயங்கரம்

ராகினி ஆத்ம வெண்டி மு.

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய வதந்தியால் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர்.



மும்பை எல்பின்ஸ்டான் ரயில் நிலையத்தில் சிறிது நேரத்துக்கு முன்னர் மின்கசிவு ஏற்பட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதனால் பதற்றமடைந்த மக்கள் விபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடியதில் பலரும் நெரிசலில் சிக்கினர். மக்கள் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் காயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். முதலில் மூன்று பேர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

மும்பை புறநகர் ரயில் பகுதியான இந்த ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாரா விபத்தால் இதுவரையில் 22 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனப் போலீஸார் கூறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. எப்போதும் மக்கள் வெள்ளத்திலேயே இருக்கும் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய ஒரு வதந்தியால் பலரும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், மஹாராஷ்டிரா அரசும் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.

வித்தியாசமான தட்கல் டிக்கெட் முன்பதிவு! அதிரவைக்கும் நாசரேத் ரயில் நிலையம்

எஸ்.மகேஷ்




தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ரயில் நிலையத்தில் வித்தியாசமான முறையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. அதை ரயில்வே ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.

பயண தேதிக்கு ஒருநாள் முன்னதாக தட்கல் முன்பதிவு தொடங்கும். ஏ.சி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும் முன்பதிவு படுக்கை வசதிக்கு காலை 11 மணிக்கும் தட்கல் முன்பதிவு தொடங்கும். ஒரு சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்துவிடும் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி எனத் தொடர்ந்து விடுமுறை வருவதால் வெளியூர்களிலிருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. டிக்கெட் முன்பதிவு மையங்களில் மணிக்கணக்கில் காத்திருந்து டிக்கெட்களைப் பெறும் சூழ்நிலை உள்ளது.



இந்தச்சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. டிக்கெட்களை முன்பதிவு செய்ய வரும் பயணிகள், துண்டு பேப்பரில் தங்களின் பெயர்களை வரிசைப்படி எழுதுகின்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விடுகின்றனர். தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் 10 நிமிடத்துக்கு முன்பு வந்து டிக்கெட்களைப் பெற வரிசையில் காத்திருக்கின்றனர். துண்டுப் பேப்பரில் எழுதியவர்களுக்கும் ரயில் நிலையத்தில் காத்திருப்போருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருப்போர் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் துண்டு பேப்பர் எழுதும் நடைமுறையை ரயில்வே ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து நாசரேத் ரயில்வே அதிகாரியிடம் கேட்டதற்கு, "துண்டு பேப்பரில் பெயரை எழுதுவது, கற்கள் உள்ளிட்ட பொருள்களால் இடம் பிடிப்பது தவறு. அது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...