சென்னைக்கு வர டாக்டர்களுக்கு உத்தரவு
Added : ஜூன் 10, 2020 00:31
சென்னை; முதுநிலை மருத்துவம் முடித்த டாக்டர்கள், மூன்று மாதம் சென்னையில் பணியாற்ற வரும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. ஆனால், சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருவதால், புதிதாக டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தமிழக முழுவதும், அரசு மருத்துவமனைகளில், முதுநிலை மருத்துவம் முடித்த, 2,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியில் உள்ளனர். அவர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு பணிக்கு, இன்றே சென்னைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், அந்தந்த மருத்துவ கல்லுாரி வாயிலாக, டாக்டர்களுக்கு உத்தர விட்டுள்ளது. அதை ஏற்று, அனைத்து டாக்டர்களும், சென்னைக்கு வருகின்றனர். 'அந்த டாக்டர்கள் ஓட்டல்களில் தங்கும் வகையில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment