Saturday, June 6, 2020

மீண்டும் சேவையை துவக்கியது, 'ஓலா'


மீண்டும் சேவையை துவக்கியது, 'ஓலா'

Added : ஜூன் 05, 2020 23:36

சென்னை; சென்னையில் போக்கு வரத்து சேவையை, 'ஓலா' நிறுவனம், மீண்டும் துவங்கி உள்ளது.

இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின், சமீபத்திய புதிய வழிகாட்டுதலின்படி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உட்பட, பல்வேறு முக்கிய நகரங்களில், ஏற்கனவே சேவை துவக்கப்பட்டது. தற்போது, சென்னையில், ஓலாவின் போக்குவரத்து சேவை துவக்கப்பட்டுள்ளது.விமான நிலையம் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்றுவர, ஓலா ஆட்டோ மற்றும் கார்களை வாடிக்கையாளர்கள் பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும், டிரைவர் மற்றும் பயணியருக்கு, முக கவசம் அணிதல், காரில் கிருமி நீக்கம் செய்தல், டிஜிட்டல் பண பரிவர்த்தனை உள்ளிட்ட, ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாத டிரைவர் மற்றும் வாடிக்கையாளர்களின் பயணம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024