கொரோனா பாதிப்பு பற்றி எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகம் அரசுக்கு அறிக்கை அளித்திருப்பது உண்மையா? : டிடிவி தினகரன்
2020-06-09@ 12:59:32
சென்னை : கொரோனா பாதிப்பு பற்றி எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகம் அரசுக்கு அறிக்கை அளித்திருப்பது உண்மையா? என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அறிக்கையில் வெளியிட்டுள்ள அவர், 'தமிழகத்தில் அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்திருப்பதாக கூறப்படும் அறிக்கையை பழனிசாமி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவேண்டும். அதனடிப்படையில் அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment