தீபாவளி கங்கா ஸ்நானம் யாத்திரை ரயில் இயக்கம்
Added : அக் 20, 2020 00:18
சென்னை: தீபாவளிக்கு, கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை ரயிலை, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.
இந்த ரயில், திருநெல்வேலியில் இருந்து, நவம்பர், 11ல் புறப்பட்டு, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக, பீகார் மாநிலம், கயா சென்றடையும். அங்குள்ள பல்குனி நதியில் நீராடி, விஷ்ணுபாத கோவிலில், முன்னோர்களுக்கு பிண்ட பிரதானம் செய்யலாம்.
தீபாவளியன்று, உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கங்கையில் புனித நீராடி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் அன்னபூரணி கோவில்களில் தரிசனம் செய்யலாம். அலகாபாத் சென்று, கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடலாம்.எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கு, 7,575 ரூபாய் கட்டணம். மேலும் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., சென்னை அலுவலகத்தை, 90031 40680; மதுரைக்கு, 82879 31977 என்ற எண்களில், தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment