ஓ.பி.சி.,க்கு 50 சதவீத மருத்துவ இடங்கள்... சுப்ரீம் கோர்ட் திட்டவட்ட அறிவிப்பு
Added : அக் 27, 2020 03:34
புதுடில்லி 'மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, மருத்துவப் பட்டப் படிப்புகளில், 15 சதவீதமும், மேற்படிப்புகளில், 50 சதவீத இடங்களும், மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 'தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில், மத்திய தொகுப்பில், 50 சதவீத இடங்களை, ஓ.பி.சி., பிரிவினருக்கு அளிக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பிலும், சில அரசியல் கட்சிகள் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், 'மருத்துவப் படிப்புகளில், மத்திய தொகுப்புக்கான இடங்களில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இது பற்றிய சட்ட வரையறைகளை, மூன்று மாதங்களில் உருவாக்கும்படியும் உத்தரவிட்டு இருந்தது.இதற்கிடையே, இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த உத்தரவிடக் கோரி, தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த வாரம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'இந்த இட ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு மட்டும் வழங்கினால், சட்டச் சிக்கல் ஏற்படும். 'ஏற்கனவே, 27 சதவீத ஒதுக்கீட்டையே வழங்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த முடியாது' என, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அமல்படுத்த முடியாதுஅப்போது, தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதாவது:நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள், இந்தாண்டு, ஜன., - பிப்., மாதத்தில் பெறப்பட்டன. அப்போது, அவர்கள் எந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கிறோம் என்பதை தெரிவித்துஉள்ளனர். அதன்படியே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு உள்ளன.அதனால், இந்தக் கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கான, 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டது.விசாரணைஇந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து, மருத்துவப் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment