சிறப்பு பஸ்களில் கூட்டமில்லாததால் அதிர்ச்சி
Added : அக் 26, 2020 23:59
சென்னை : ஆயுத பூஜைக்கு சிறப்பு பஸ்களை இயக்கியும், கூட்டம் இல்லாததால், போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆண்டுதோறும், ஆயுத பூஜை விடுமுறைகளில், அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு கொரோனா பரவல் பிரச்னை இருந்ததால், குறைந்த அளவிலான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த கூட்டம் இல்லை; வார இறுதி நாட்களில் ஏறும் கூட்டம் கூட இல்லை. தமிழகத்தில், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாதது, ஐ.டி., நிறுவனங்களின் செயல்பாடு குறைவு போன்ற காரணங்களால், சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் இருந்து, சொந்த ஊர் செல்ல பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment