Tuesday, October 27, 2020

'மிக்ஸட் ரியாலிட்டி' முறையில் நடந்த ஆன்லைன் பட்டமளிப்பு விழா:

'மிக்ஸட் ரியாலிட்டி' முறையில் நடந்த ஆன்லைன் பட்டமளிப்பு விழா:

Updated : அக் 27, 2020 01:37 | Added : அக் 26, 2020 23:01

'மிக்ஸட் ரியாலிட்டி' முறையில் நடந்த ஆன்லைன் பட்டமளிப்பு விழா:

சென்னை:சென்னை ஐ.ஐ.டி., நடத்திய ஆன்லைன் பட்டமளிப்பு விழாவில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்கள் நேரில் பதக்கம் பெறும் வகையில், ஏற்பாடுகள் செய்து அசத்தினர்.

சென்னை ஐ.ஐ.டி.,யின், 57வது பட்டமளிப்பு விழா, ஐ.ஐ.டி.,யின் நிர்வாக குழு தலைவர் பவர் கோயங்கா தலைமையில், ஆன்லைனில், நேற்று நடத்தப்பட்டது. இதில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும், கலிபோர்னியா பல்கலையின் இயற்பியல் இருக்கையின் வேந்தருமான, பேராசிரியர் டேவிட் ஜே.குரோஸ் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில், 2,346 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், 2019 - 20ம் கல்வி ஆண்டில், பிஎச்.டி., முடித்த, 353 பேர், எம்.எஸ்., முடித்த, 103 பேர்; எம்.டெக்., முடித்த, 431 பேர்; பி.டெக்., முடித்த, 406 பேர் மற்றும், 680 பேருக்கு இரட்டை பட்டங்களும் வழங்கப்பட்டன.

ஐ.ஐ.டி.,யின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த செயல்திறன் அறிக்கையை, பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி சமர்ப்பித்தார்.இந்த விழா முழுவதுமாக, ஆன்லைன் வழியிலேயே நடத்தப்பட்டது. முக்கிய விருந்தினர்கள், கல்வி நிறுவன இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும், ஆன்லைன் வாயிலாகவே, தங்கள் உரைகளை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில், ஐ.ஐ.டி.,யின் பெருமை மிக்க ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்ட கவுரவ பதக்கங்கள் மற்றும் விருதுகளை பெற, அதற்கு தேர்வாகும் மாணவர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பர்.

ஆனால், பட்டமளிப்பு விழா, இந்த முறை ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டதால், விருது மற்றும் பதக்கம் பெறும் மாணவர்கள் மட்டும், நேரில் இருப்பது போன்று, 'மிக்ஸட் ரியாலிட்டி' என்ற, டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.மாணவர்களின் பெயரை வாசித்ததும், அவர்கள் மேடையில் தோன்றுவது போன்றும், அவர்களுக்கு பதக்கங்கள் அணிவிப்பது போன்றும் காட்சிகள் ஒளிபரப்பாகின. இது, மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடைய செய்தது.

'மிக்ஸட் ரியாலிட்டி' என்பது என்ன?

'மிக்ஸட் ரியாலிட்டி' என்பது, நேரில் உள்ளதையும், ஏற்கனவே நேரிலோ அல்லது முப்பரிமாண வகை வீடியாவாக எடுக்கப்பட்டதையோ ஒன்றாக, ஒரே நேரத்தில் இணைத்து காட்சிப்படுத்துவது.

பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்களில், மிகவும் உயரமான மலையில் இருந்து குதிப்பது, உயிருக்கு ஆபத்தான விலங்குகளுடன் சண்டையிடுவது, கடலில் குதிப்பது என, பிரமிக்க வைக்கும் காட்சிகள் இடம் பெறும். இவையெல்லாம், மிக்ஸட் ரியாலிட்டி மற்றும் விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் தான்.

தமிழில், 'பாகுபலி' திரைப்படத்தில், இந்த தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவின், ஆர்ம்ஸ்ட்ராங் ஆய்வகத்தில், 1992ல் இந்த தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் தற்போது, கொரோனா பிரச்னையால், ஆன்லைன் நிகழ்ச்சிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024