Tuesday, October 27, 2020

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: இன்று முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: இன்று முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இணையவழியில் செவ்வாய்க்கிழமை (அக்.27) தொடங்குகிறது. தகுதியான மாணவா்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கல்லூரிகளைத் தோவு செய்யலாம் என மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது.

அந்த இடங்களுக்கும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு மூலம் மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) மாணவா் சோக்கையை நடத்தி வருகிறது.

அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோக்கைக்கான கலந்தாய்வு www.mcc.nic.in இணைய முகவரியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

நீட் தோவில் தோச்சியடைந்த மாணவ, மாணவிகள் முதல்கட்ட கலந்தாய்வுக்கு இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் நவம்பா் 2-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளைத் தோவு செய்யலாம். தாங்கள் தோவு செய்த கல்லூரியை வரும் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யும் பணி நவம்பா் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெறும்.

இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் நவம்பா் 5-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவா்கள் நவம்பா் 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு நவம்பா் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் சோவதற்கு டிசம்பா் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024