உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம்
Added : அக் 20, 2020 00:27
சென்னை: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்கள், உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை, டிசம்பர் வரை எஸ்.பி.ஐ., நீட்டித்துள்ளது.
இது குறித்த, பாரத ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கை:ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான அவகாசம், டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு நேரடியாக வந்து, உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கும் போது, கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, சேமிப்பு கணக்கின் கடைசி எண், 1, 2 உள்ள வாடிக்கையாளர்கள் திங்கட்கிழமை; 3, 4ம் எண் உள்ளவர்கள் செவ்வாய்; 5, 6ம் எண் உள்ளோர் புதன்கிழமை; 7, 8ம் எண் உள்ளோர் வியாழக்கிழமை; 9, 0ம் எண் உடைய வாடிக்கையாளர்கள் வெள்ளி; சனிக்கிழமைகளில் அனைத்து வாடிக்கையாளர்களும், உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம்.
இதன் வாயிலாக, வங்கிகளில் கூட்டம் சேருவதை தவிர்க்கலாம். அதே நேரம், மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்துக்கு பதிலாக, மற்றொரு நாளில் சான்றிதழ் சமர்ப்பிக்க வந்தால், அவர்களை வங்கிகள் திருப்பி அனுப்பக் கூடாது.வேறு ஏதேனும் சேவை தேவையெனில், மூத்த குடிமக்கள் எப்போது வேண்டுமென்றாலும் வங்கிக்கு வரலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment