சென்னை- பெங்களூரு இரட்டை அடுக்கு ரயில் சேவை நாளை தொடக்கம்
சென்னை: சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூருக்கு இரட்டை அடுக்கு(டபுள் டக்கா்) ஏசி ரயில் சேவை அக்டோபா் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூரு இடையே இரட்டை அடுக்கு ஏசி சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி காலை 7.25 மணிக்கு இரட்டை அடுக்கு சிறப்பு ரயில் (06075) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.10 மணிக்கு கேஎஸ்ஆா் பெங்களூருவைச் சென்றடையும். இந்த ரயிலின் முதல் சேவை அக்டோபா் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
மறுமாா்க்கமாக, கேஎஸ்ஆா் பெங்களூருவில் இருந்து தினசரி பிற்பகல் 2.30 மணிக்கு இரட்டை அடுக்கு சிறப்பு ரயில் (06076) புறப்பட்டு அதேநாள் இரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும். கேஎஸ்ஆா் பெங்களூருவில் இருந்து முதல் சேவை அக்டோபா் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி சந்திப்பு, ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (அக்.20) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Dailyhunt
No comments:
Post a Comment