Tuesday, April 13, 2021

சேலத்தில் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை?

சேலத்தில் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை?

Added : ஏப் 13, 2021 03:47

சேலம் : சேலத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு பேத்தியை விற்றதாக, பாட்டியின் ஆடியோ உரையாடல் குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னபொன்ணு, 65; சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:என், ௧௦ வயது பேத்தி, அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம், வேலை பார்த்து வருகிறாள். ஏற்காடு, சென்னை, கோவா ஆகிய இடங்களுக்கு, பேத்தியை அழைத்து செல்கிறார். விசாரணை நடத்தி, பேத்தியை என்னிடம் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, 'சைல்டு லைன்' அமைப்புக்கு, போலீசார் தகவல் தரவே, அவர்கள் சிறுமியை மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில், சின்ன பொன்ணு, தன் உறவுக்கார பெண்ணிடம் மொபைல் போனில் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. 'அதில், 10 லட்சம் ரூபாய்க்கு, பேத்தியை விற்பனை செய்து விட்டேன்' என, தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில், இந்த ஆடியோ பரவி வருகிறது. இதுகுறித்து, டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024