Tuesday, April 13, 2021

கொரோனா பணியில் நர்ஸ் மரணம் நிவாரணம் குறித்து பரிசீலிக்க உத்தரவு



கொரோனா பணியில் நர்ஸ் மரணம் நிவாரணம் குறித்து பரிசீலிக்க உத்தரவு

Added : ஏப் 13, 2021 00:59

மதுரை : கொரோனா தடுப்புப் பணியில் இறந்த, அரசு மருத்துவமனை நர்ஸ் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய மனுவை அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாண்டியூரைச் சேர்ந்த, இளையராஜா தாக்கல் செய்த மனு:என் மனைவி கலைச்செல்வி. இரண்டு மைனர் குழந்தைகள். என் மனைவி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், நர்சாக, 2013ல் நியமிக்கப்பட்டார். ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.சிறப்பு வார்டுகடந்த, 2020ல் கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆக., 13ல் இறந்தார்.

'கொரோனா தடுப்பில் முன்னின்று பணிபுரியும் அலுவலர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். 'குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்' என தமிழக அரசு அறிவித்தது.இதனடிப்படையில், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு கோரி, சுகாதாரத் துறைக்கு விண்ணப்பித்தேன்.

'கலைச்செல்வியின் பணி, வரன்முறை செய்யப்படவில்லை; இதனால் இழப்பீடு, கருணைப் பணி கோர முடியாது' என நிராகரித்தனர். சரியாக பரிசீலிக்காமல், பாகுபாட்டுடன் உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய் இழப்புமனைவி இறந்ததால் குடும்பத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ''மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர், மனுவை, 12 வாரங்களில் தகுதி அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024