Tuesday, April 20, 2021

தினமும் இரவு 8:00 மணி வரை அரசு விரைவு பஸ்கள் ஓடும்

தினமும் இரவு 8:00 மணி வரை அரசு விரைவு பஸ்கள் ஓடும்

Added : ஏப் 20, 2021 00:07

சென்னை : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவுவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை, அரசு விதித்துள்ளது.

இன்று முதல், தொலைதுார பயணங்களுக்கான, அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், அதிகாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை மட்டுமே இயங்கும்.இது குறித்து, விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதன்படி, வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான, பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைக்கு அனுமதி கிடையாது.

எனவே, தொலைதுாரம்செல்லும் பஸ்களை, அதாவது, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து புறப்படும் பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து தொழில் நகரங்களுக்கு வரும் பஸ்கள், இரவு, 8:00 மணிக்குள் சென்றடையும் வகையில், பயண அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இரவு, 8:00 மணிக்குள் விரைவு பஸ்கள் போய் சேர்ந்தால் தான், அந்த ஊர்களில் இருந்து, மற்ற பஸ்சிலோ வேறு வாகனங்களிலோ ஏறி, இருப்பிடங்களுக்குச் செல்ல முடியும்.இந்த இயக்கத்தின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றும்படி, ஓட்டுனர், நடத்துனர், பயணியருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ரத்து செய்யலாம்ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாவதால், அன்று பஸ்கள் இயங்காது. எனவே, வெளியூர் பயணத்துக்கு திட்டமிட்டுள்ளோர், மற்ற நாட்களில் செல்லும் வகையில், திட்டமிடுவது நல்லது.ஏற்கனவே, இரவு நேரத்தில் பயணம் செய்யும் வகையில், முன்பதிவு செய்துள்ள பயணியர், தங்களின் பயண நேரத்தை, விருப்பப்படி தேதி மற்றும் நேரத்தை மாற்றியமைத்து கொள்ள, பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகலாம்.பயணத்தை ரத்து செய்பவர்களுக்கு, பஸ் கட்டணம் திரும்ப வழங்கப்படும்.

இணையதளத்தின் வழியாக முன்பதிவு செய்துள்ளோரும், ரத்து செய்து, கட்டணத்தை திரும்பப் பெறலாம்.கூடுதல் பஸ்கள்மாநகர போக்குவரத்து கழகத்தைப் பொறுத்தவரை, பயணியர் நின்று கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய வழித் தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.மேலும், அரசு விதித்துள்ள இரவு ஊரடங்கினை பின்பற்றி, அதிகாலை, ௪.00 மணி தொடங்கி இரவு, 10.00 மணி வரையிலும், பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024