Tuesday, April 20, 2021

மதுரையில் இருந்து வெளியூர் செல்ல கடைசி பஸ்கள் நேரம் அறிவிப்பு


மதுரையில் இருந்து வெளியூர் செல்ல கடைசி பஸ்கள் நேரம் அறிவிப்பு

Added : ஏப் 20, 2021 02:00

மதுரை : தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு (இரவு 10:00 - காலை 4:00 மணி) அமல்படுத்தப்படுவதால் மதுரையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கடைசியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரப்பாளையம்  மற்றும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து கடைசியாக இயக்கப்படும் பஸ்கள் நேரம் விவரம்:ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், கோவை, ஈரோடு - மாலை 5:00 மணி. கொடைக்கானல் -மாலை 5:45 மணி. திருப்பூர், பொள்ளாச்சி- மாலை 6:00 மணி. கரூர், கம்பம், பழநி - இரவு 7:00 மணி. தேனி, பெரியகுளம், திண்டுக்கல்- இரவு 8:00 மணி. நிலக்கோட்டை (வழி சோழவந்தான்) - இரவு 8:30 மணி.

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்செந்துார், நாகர்கோவில் - மாலை 5:00 மணி. ராமேஸ்வரம், தென்காசி - மாலை 6:00 மணி. திருச்சி, ராமநாதபுரம், நெல்லை - இரவு 7:00 மணி. ராஜபாளையம் - இரவு 7:30 மணி. சிவகங்கை, கோவில்பட்டி, சிவகாசி - இரவு 8:00 மணி. அருப்புக்கோட்டை, நத்தம் - இரவு 8:30 மணி.மாவட்ட பகுதி மற்றும் மாநகராட்சி எல்லைக்குள் இரவு 10:00 மணிக்குள் பஸ்கள் போய் சேரும் வகையில் இயக்கப்படும்.

ஞாயிறு முழு ஊரடங்கில் இயக்கப்படாது என பொது மேலாளர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களும் பகல் 12:00 மணிக்கு மேல் இயக்கப்படாது என பொது மேலாளர் (எஸ்.இ.டி.சி.,) அபிமன்யூ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024