'ஆன்லைன்' சேவை பேரூராட்சிகளில் துவக்கம்
Added : ஏப் 20, 2021 01:41
பேரூராட்சிகளில் முடங்கியிருந்த, 'ஆன்லைன்' சேவை, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.மாநிலத்தில் உள்ள பேரூராட்சிகளில், 2012 -- 13 நிதியாண்டு முதல், நிர்வாக பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டன.
சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி வசூல், கட்டட அனுமதி, பிறப்பு, இறப்பு சான்று பணிகள், பிரத்யேக, 'சாப்ட்வேர்' உதவியுடன், 'ஆன்லைன்' மூலம் மேற்கொள்ளப்பட்டன. இணையதள சேவையை, தனியார் நிறுவனத்தினர் பராமரித்து வந்தனர். கடந்த முதல் தேதியில் இருந்து, இணைய சேவை முடங்கியது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும், தேசிய தகவல் மையமான, 'நிக்' கட்டுப் பாட்டின் கீழ், இணைய சேவையை கொண்டு வர உள்ளதாக கூறப்பட்டது.இந்நிலையில், நேற்று முதல், மீண்டும் இணையதள சேவை துவங்கியது. 'அடுத்த மாதம், 31ம் தேதி வரை, தனியார் நிறுவனத்தினரே இணைய சேவை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர்' என, அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment