Monday, May 17, 2021

சோழன், மன்னை சிறப்பு ரயில்கள் ரத்து


சோழன், மன்னை சிறப்பு ரயில்கள் ரத்து

Added : மே 16, 2021 23:35

சென்னை: பயணியர் வருகை குறைவால், சோழன், மன்னை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு, தினமும் காலை, 8:00 மணிக்கும்; திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை, 10:00 மணிக்கும், சோழன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரு வழியிலும், இன்று முதல், 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு, தினமும் இரவு, 10:15க்கு இயக்கப்படும் மன்னை சிறப்பு ரயில், நாளை முதல் ஜூன் 1 வரை ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024