Saturday, May 29, 2021

ஊக்க தொகை வழங்க அரசாணை வெளியீடு

ஊக்க தொகை வழங்க அரசாணை வெளியீடு

Added : மே 28, 2021 20:29

சென்னை:தமிழகத்தில், ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்கள் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், அரசு மருத்துவர்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய்; முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு, 20 ஆயிரம்;பயிற்சி மருத்துவர்களுக்கு, 15 ஆயிரம்; செவிலியர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளது. மேலும், கிராம மற்றும் பகுதி சுகாதார செவிலியர், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், 104 அமரர் ஊர்தி பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது. துாய்மை பணியாளர்களுக்கும் 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது.அதன்படி தகுதிவாய்ந்த நபர்களை இனம் கண்டு ஊக்கத்தொகை வழங்க, அந்தந்த துறை இயக்குனர்களுக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024