Monday, May 31, 2021

மின் கட்டணம் கணக்கீடு எப்படி? இணையதளத்தில் வாரியம் விளக்கம்!

மின் கட்டணம் கணக்கீடு எப்படி? இணையதளத்தில் வாரியம் விளக்கம்!

Added : மே 29, 2021 22:43

சென்னை : கொரோனா பரவலால், வீடுகளில், இம்மாதம் மின் பயன்பாடு கணக்கெடுக்காத நிலையில், மின் கட்டணம் எப்படி கணக்கிடப்பட்டு, ஜூலையில் முறைப்படுத்தப்படும் என்பதற்கான விளக்கத்தை, மின் வாரியம், தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஊரடங்குதமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, அதற்கான மின் கட்டணத்தை நுகர்வோரிடம் தெரிவிப்பர்.தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. அத்தியாவசிய துறையின் கீழ் மின் வாரியம் இடம் பெற்றாலும், கொரோனா பரவலால், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படவில்லை.

இதனால், 'ஊரடங்கு காலத்தில், முந்தைய கணக்கீட்டில் இருந்து, 60வது நாள் ஆகியிருப்பின், மின் கணக்கீடு செய்ய வேண்டியவர்கள், 2019 மே கட்டணத்தை உத்தேசமாக செலுத்தலாம். குழப்பம்'அந்த கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுவோர், நடப்பாண்டு மார்ச் மாத கட்டணத்தை உத்தேசமாக செலுத்தலாம்.'அந்த கட்டணம், ஜூலையில் முறைப்படுத்தப்படும்' என, மின் வாரியம் தெரிவித்தது.இந்த முறையில், மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற குழப்பம், நுகர்வோரிடம் நிலவுகிறது. இதையடுத்து, இம்மாதம் மின் பயன்பாடு கணக்கெடுக்காத நிலையில், மின் கட்டணம் எப்படி கணக்கிடப்பட்டு, ஜூலையில் முறைப்படுத்தப்படும் என்ற மாதிரி விபரங்கள், 'www.tangedco.gov.in' என்ற, மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024