DINAMANI
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...
ENS இணையதளச் செய்திப் பிரிவு Updated on: 20 டிசம்பர் 2025, 8:10 am
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குப் பிறகு 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
எஸ்ஐஆருக்கு முன்னதாக 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5,43,76,756 வாக்காளர்கள் உள்ளனர். சுமாா் 15 சதவீத வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனர். பேரவைத் தொகுதிகளைப் பொருத்தவரை சோழிங்கநல்லூா், பல்லாவரம், ஆலந்தூா் தொகுதிகளில் அதிக வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளா்களும், அடுத்ததாக கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளா்களும் நீக்கப்பட்டுள்ளனா். குறைந்தபட்சமாக அரியலூா் மாவட்டத்தில் 24,368 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். மேலும் மாவட்டவாரியாகவும் நீக்கப்பட்டவர்கள் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலரிடமும் அந்தந்த தொகுதி பட்டியல் இருக்கும்.
எனினும் ஆன்லைன் மூலமாகவும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய முடியும்.
https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உங்களுடைய வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு அறியலாம். உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண் கொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
https://elections.tn.gov.in/index.aspx என்ற தமிழக தேர்தல் ஆணைய பக்கத்தில் காணலாம். 'சிறப்பு தீவிர திருத்தம் 2026'(Special Intensive Revision 2026) என்ற இணைப்பை அழுத்தினால் அதன்பின் வரும் திரையில் உங்களுடைய மாவட்டம், தொகுதியைத் தேர்வு செய்தால் நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் பட்டியலாக கிடைக்கிறது.
No comments:
Post a Comment