Friday, December 23, 2016

சேகர் ரெட்டியுடன் திண்டுக்கல் ரத்தினத்துக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?

:திண்டுக்கல்:

சேகர் ரெட்டியின் கூட்டாளியான திண்டுக்கல் தொழில்அதிபர் ரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள முத்துப்பட்டினம். ஆவணத்தான் கோட்டையைச் சேர்ந்த தனது தாய் மாமா தங்கராஜ் ஆதரவில் இருந்து இவர் பூவை மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். பின்னர் சர்வேயராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1980-ம் ஆண்டு திண்டுக்கல்லுக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். அப்போது ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது.

எனவே இந்த தொழிலில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது தொழில் பரந்து விரிந்தது. எனவே கடந்த 2005-ம் ஆண்டு சர்வேயர் வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு தனது தொழிலை கவனிக்க தொடங்கினார். இதன் விளைவாக வீடுகள் விற்பனை, செங்கல் சூளை, மினரல் வாட்டர், கிரசர் ஆலை என இவரது தொழில் விரிந்தது.

அதன் பின்னர் மணல் குவாரி தொழிலில் இறங்கினார். கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதுமணல் குவாரி தொழிலில் கொடி கட்டி பறந்த காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் படிக்காசு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போதைய அமைச்சர்களுடன் ரத்தினம், படிக்காசு ஆகியோருக்கு நெருக்கம் ஏற்பட்டதால் தென் மாவட்ட மணல் குவாரிகள் இவருக்கு கிடைத்தது.

ஆட்சி மாற்றத்துக்கு பிறகு குவாரி தொழில் நட்பு வட்டாரம் மாறியது. கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு மணல் குவாரி தொழிலில் கோலோட்சிய சேகர் ரெட்டி வரை விரிந்தது.

சேகர் ரெட்டி மூலம் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் திண்டுக்கல் ரத்தினத்துக்கு சப்-காண்டிராக்ட் கிடைத்தது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் கிராவல் எனப்படும் செம்மண் எடுக்கும் உரிமமும் ரத்தினத்துக் கிடைத்தது. பின்னர் இவர் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மைன்ஸ் நிறுவனத்திலும் இணைந்தார்.

சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது புதிய 2 ஆயிரம் நோட்டுகள் லட்சக்கணக்கில் சிக்கின. இந்த நோட்டுகளை திண்டுக்கல் ரத்தினம் மாற்றிக் கொடுக்க உதவியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ரத்தினம் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் முதன்மை செயல் அலுவலராகவும் உள்ளார். இவை தவிர பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் ரத்தினத்தின் அசுர வளர்ச்சியை கண்டு முக்கிய அரசியல் புள்ளிகளே வியந்து போய் உள்ளனர். பல்வேறு தொழில்களில் கொடி கட்டி பறந்த ரத்தினம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்


சென்னை:
பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி செல்லாது என்று அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வரும் 30-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே தற்போது டெபாசிட் செய்து புதிய நோட்டு பெற முடியும். அதனால் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யவும் போட்ட பணத்தை எடுக்கவும் கூட்டம் அலை மோதுகிறது.

ஆனால் வங்கிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறைந்த அளவில் பணம் விநியோகிக்கப்படுவதால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் வங்கிகளில் காத்து நின்றாலும் பணம் கிடைப்பது இல்லை. ரூ.2000, ரூ.4000 என குறைவாக மக்களுக்கு பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

மேலும் வங்கிகளுக்கு தினமும் பணம் சப்ளை செய்யப்படுவதில்லை. குறைந்த அளவு பணத்தை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதால் வங்கிகளில் கூட்டம் குறையவில்லை.

பணத்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் ரூ.500-க்கு மேல் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. ரூ.5000-க்கு மேல் ஒரு முறை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். மேலும் அந்த பணம் எந்த வகையில் வந்தது, இதுவரை டெபாசிட் செய்யாமல் இருந்தற்கான காரணம் என்ன என்பதை வங்கி அதிகாரிகள் இருவரிடம் உறுதி மொழியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது.

ரிசர்வ் வங்கிகளின் இந்த அதிரடி திடீர் உத்தரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் விளக்கம் கேட்டு பெறப்படும் தகவல் எழுத்து பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இந்த நடை முறையால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று உடனடியாக விலக்கி கொள்ளப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் வரும் 30-ந்தேதிவரை பழைய ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். அதற்கு எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லை என்பதால் வங்கிகளில் மீண்டும் கூட்டம் அலை மோதியது.

பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதை தவிர்த்தால் 6 வேலை நாட்கள் இருக்கின்றன. பணத்தை மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நெருங்கி விட்டதால் பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பழைய நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மீண்டும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாடக் கூடியவர்கள் பணத் தேவைக்கு வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படாமல் முடங்கி கிடப்பதால் வங்கிகளை மட்டுமே மக்கள் நம்பி உள்ளனர்.

இதனால் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில்காத்து நின்று பணம் பெற்று செல்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. டிசம்பர் மாத சம்பளம் வரும் 30-ந்தேதி காலையில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன் பின்னர் அரசு ஊழியர்கள் ஒய்வூதியதாரர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும். 31-ந்தேதி வங்கிகள் செயல்படும் என்பதால் அன்று முதல் பணப் பிரச்சினை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பண பரிவர்த்தனையை குறைத்து மின்னணு பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மாறினால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மளிகை பொருட்கள் மற்றும் குடும்ப தேவைகளை இனி வரும் காலங்களில் ரூபாய் நோட்டுகள் பரிமாற்றத்தால் சமாளிக்க இயலாது என்பதால் தான் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற பண அட்டைகள் பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

'தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: ஆளுநர், முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை'

முன்னாள் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் தகவல்

தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்கள் சம்பந்தப்பட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவ தற்கு எந்தவித சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு முன்கூட் டியே தகவலும் தெரிவிக்க வேண் டியதில்லை என்கிறார் முன்னாள் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் (தமிழ்நாடு) எஸ்.செந்தாமரைக்கண்ணன்.
நேற்று முன்தினம், தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும் அவருக்கு தொடர் புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி நகை, பணம் மற்றும் ஆவ ணங்களை ஏராளமான அளவில் கைப்பற்றினர். இந்த சோதனைகள் குறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளியான நிலையில், தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனையிடும் முன்னதாக முதல மைச்சர், ஆளுநர் உள்ளிட்டவர் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற சர்ச்சை யையும் சிலர் எழுப்புகின்றனர். ஆனால், அப்படி யாரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் செந்தாமரைக் கண்ணன்.

அனுமதி தேவையில்லை

“போதிய முகாந்திரம் இருந்தால் வருமான வரித்துறையினர் எந்த இடத்திலும் சோதனை மேற் கொள்ள முடியும். இதில் தனிப் பட்ட முறையில் யாருக்கும் எவ் வித சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஒரு இடத்தில் சோதனைக்கு செல்லும் முன்பாக அதற்கான முகாந்திரங்களை உள்ளடக்கிய திருப்தி குறிப்பு (Satisfaction Note) ஒன்றை வருமான வரித்துறையின் துணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தயார் செய்வார்.

அந்தக் குறிப்பு வருமானவரித் துறை இயக்குநர் (விசாரணை) பார்வைக்கு வைக்கப்படும். குறிப் பில் உள்ள தகவல்களில் தனக்கு திருப்தி இருந்தால் அதை வரு மான வரித்துறையின் தலைமை இயக்குநருக்கு (விசாரணை) அனுப்புவார் இயக்குநர். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட நபர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்த தலைமை இயக் குநர் வாரண்ட் பிறப்பிப்பார். இதை யடுத்து முறைப்படி சோதனைகள் தொடங்கும்.

மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்ப வர்களிடம் சோதனைக்கு செல்வ தாக இருந்தால் அதுகுறித்து மத்திய நேர்முக வரிகள் ஆணையத்தின் தலைவர், மத்திய வருவாய்த் துறை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போது மானது. இவர்கள் மூலமாக இந்தத் தகவல் மத்திய நிதியமைச்சருக்கு தெரிவிக்கப்படும்’’ என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.
சோதனை எப்படி நடத்தப்படும், சோதனையில் கைப்பற்றப்படும் சொத்துகள் எப்படி கையாளப்படும் என்று அவரைக் கேட்டபோது, “மத்திய அரசு அதிகாரிகள் இருவர் முன்னிலையில்தான் சோதனைகள் நடைபெறும். சோதனையில் கைப் பற்றப்படும் பொருட்கள், சோதனை தொடங்கிய நேரம், சோதனை முடிந்த நேரம், சோதனை நடந்த இடத்தில் இருந்தவர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ‘பஞ்ச்நாமா` (Panchnama) என்ற மகஜரில் எழுதப்படும். சோதனை யின் முடிவில் அந்த மகஜரில் வழக்கு சம்பந்தப்பட்ட நபரிடமும் சாட்சிகளிடமும் கையெழுத்துப் பெறப்படும்
.
சோதனையில் கைப்பற்றப்படும் நகைகள், சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை அலுவலகத்தின் ‘ஸ்டாராங் ரூமில்’ பாதுகாப்பாக வைக்கப்படும். சொத்துப் பத்திரங் கள் உள்ளிட்ட ஆவணங்கள், வழக்கை விசாரிக்கும் வருமான வரித்துறை அதிகாரியின் பொறுப் பில் இருக்கும்’’ என்றார்.
வழக்கு விசாரணை எப்படி இருக்கும்? இறுதித் தீர்ப்பு எப் போது வரும்? கைப்பற்றப்பட்ட பொருட்களை திரும்பப் பெறமுடி யுமா என்ற கேள்விகளுக்கும் பதிலளித்த செந்தாமரைக்கண் ணன், “கைப்பற்றப்பட்ட ஆவணங் களை சம்பந்தப்பட்ட நபரின் வரு மானத்துடன் ஒப்பீடு செய்து அறிக்கை தயார் செய்வதற்கு 21 மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும். விசாரணை முடிவில், வருமான வரி கட்ட வேண்டி இருந்தால் அதற் கான தொகை போக மீதியை உரியவரிடம் ஒப்படைப்பார்கள். ஆனால், 90 சதவீத வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்ட நபர்தான் கூடுதலாக வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.

முதல்கட்ட தீர்ப்பை எதிர்த்து முதலில் வருமான வரித்துறை (மேல்முறையீடு) ஆணையரிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் திருப்தி இல்லாவிட்டால் வருமானவரித் துறையின் மேல் முறையீட்டு நடுவர் மன்றத்தை அணுகலாம். இதற்கு அடுத்தபடி யாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரைக்கும் போக முடி யும். எனவே, ராமமோகன ராவ் மாதிரியான அதிகாரிகள் சம்பந்தப் பட்ட வழக்குகளில் இறுதித் தீர்ப்பை எட்டுவதற்கு 10 ஆண்டுகள்கூட ஆகலாம்’’ என்றார்.


சசிகலாவைச் சந்திக்காத ஓ.பி.எஸ்.! -பின்னணி என்ன? 

மிழக அமைச்சர்களின் முகங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. தலைமைச் செயலாளரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் வீட்டில் சோதனை என வருமான வரித்துறையினர் உறக்கமே இல்லாமல் சோதனை நடத்துகின்றனர். 'ரெய்டின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருக்கலாம் என கார்டன் தரப்பில் உறுதியாக நம்புகிறார்கள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

வேலூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் சோதனையில், அமைச்சர்களுக்கு இணையாக ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் ஆகியோரிடம் ஆவணங்களும் தங்கமும் பிடிபட்டிருக்கிறது. 'முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கு பிறகே, வருமான வரித்துறை சோதனை வேகமெடுத்தது' என கார்டன் வட்டாரத்தில் உறுதியாக நம்புகிறார்கள். பிரதமரைச் சந்திக்க ஓ.பி.எஸ்ஸுடன் தம்பிதுரையும் உடன் சென்றார். ஆனால், தம்பிதுரை வருவதை பிரதமர் அலுவலகம் விரும்பவில்லை. ஓ.பி.எஸ் மட்டுமே பிரதமரை சந்தித்தார். தமிழகத்தின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தாலும், ஆட்சி அதிகாரத்தில் நடக்கும் இடையூறுகளைப் பற்றித் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, கார்டன் தரப்பில் இருந்து வரும் நெருக்குதல்களையும் விவரித்திருக்கிறார். அதன் விளைவாகவே, ராம மோகன ராவ் உள்பட கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களை வளைத்தது வருமான வரித்துறை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 
"சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக, ஓ.பி.எஸ் உள்பட அ.தி.மு.கவின் ஐவரணியில் இருந்த சிலரது வீடுகளில் கார்டன் டீம் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய உறவினர்கள் ஆகியோரது வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, தி.மு.க தலைவர் கருணாநிதி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டும், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்தப் பதிலும் சொல்லவில்லை. இந்த ரெய்டின் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் உள்பட சிலர் இருந்தார்கள். அவர்கள் மூலமாக ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்கிறார் ஓ.பி.எஸ். தேர்தல் நேரத்தில் தன்னை பழிவாங்கியவர்களை, இப்போது பழிவாங்கத் தொடங்கிவிட்டார்.

டெல்லிக்குச் சென்றிருந்தபோது, நடக்கப் போகும் விஷயங்களை ராம மோகன ராவ் அறிந்து வைத்திருந்தார். எப்படியாவது ரெய்டு நடவடிக்கையில் இருந்து தப்பிவிட வேண்டும் என சில காரியங்களில் இறங்கினார். எதுவும் பலிக்கவில்லை. தலைமைச் செயலகத்திற்குள் நுழைவதற்கும் ஓ.பி.எஸ் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. சசிகலாவுக்கு நெருக்கமான ராம மோகன ராவ் குறிவைக்கப்படுவதை எதிர்பார்த்தே அவர் காத்திருந்தார். தற்போது பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான இளங்கோவனின் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. '51 கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும்' தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பாளராக இருந்து, கார்டன் வட்டாரத்திற்கு பாலமாக இருந்து வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரை வளைப்பதன் மூலம் நேரடியாக மன்னார்குடி உறவுகளின் பரிவர்த்தனைகளை வளைக்க முடியும். அதன் அடிப்படையிலேயே சோதனை தீவிரமாக நடந்து வருகிறது" என்றார் விரிவாக. 

"டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு, தற்போது வரையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை நேரில் சந்திக்கவில்லை. பொதுக்குழு கூட்டத்திற்கு முதலமைச்சர் என்ற முறையில் அவரும் பங்கேற்பார். 'அங்கு தனக்கு எதிராக சிலர் பேசலாம்' என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். இருப்பினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அரசுப் பணிகளை கவனித்து வருகிறார். மத்திய அரசின் நெருக்குதல்கள் அனைத்தும் கார்டனை மையமிட்டே நடக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், கார்டனின் அதிகார மையங்கள் டெல்லி வட்டாரத்தில் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராம மோகன ராவ் கைது செய்யப்பட்டால், கார்டனின் கணக்கு வழக்குகளை முடக்கிவிடுவார்கள் என்பதால் மன்னார்குடி தரப்பில் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். ஜனாதிபதி மாளிகை வட்டாரம், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர்கள் என பல தரப்பிலும் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 'தங்கள் பக்கம் கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறது' என தகவலைப் பரப்பி வருகின்றனர். ராம மோகன ராவ் கைது செய்யப்பட்டால், வருமான வரித்துறை அதிகாரிகள் கார்டனுக்குள் நுழைவது உறுதி. அதை எதிர்கொள்வது குறித்துதான் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது" என்கின்றனர் தலைமைக் கழக வட்டாரத்தில். 

வருமான வரித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அச்சத்தோடு கவனித்து வருகிறார்கள் தமிழக அமைச்சர்கள். 
-ஆ.விஜயானந்த்

ராமமோகன ராவ் - குடும்பத்தினரிடம் அமலாக்கதுறை இன்று விசாரணை


சென்னை, 

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், தொழில் அதிபர் சேகர்ரெட்டியுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டதை வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் கண்டுபிடித் தனர்.கடந்த 8-ந்தேதி சேகர் ரெட்டியை சுற்றி வளைத்த வருமான வரித்துறையினர், அவரது வீடுகள், அலு வலகங்களில் சோதனை நடத்தி ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கத்தை கைப் பற்றினார்கள். பிறகு சேகர் ரெட்டி கைதானார்.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் தலைமை செய லாளர் ராமமோகன ராவ் வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத் தினார்கள். அதே நேரத் தில் அவரது மகன் மற்றும் உறவினர்களின் 13 இடங் களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் ராம மோகனராவின் வீட்டில் இருந்து ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராம  மோகனராவின் மகன் விவேக் வீட்டில் இருந்து சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட் டது. இவர்களது வீடுகளில் நேற்றும் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் ஏராள மான சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளன.

ராமமோகன ராவ் வீடு, தலைமைச் செயலக அலு வலகம், மகன் விவேக் வீடு, அவரது 6 அலுவலகங்கள், நண்பர் அமலநாதன் வீட்டில் சிக்கிய நகைகள், பணம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சிக்கிய தங்கம், ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை  அதி காரிகள் மதிப்பிடும் பணியைத் தொடங்கி உள்ள னர். ரொக்கப் பணத்தை வங்கி அதிகாரிகள், பணம் எண் ணும் எந்திரங்கள் உதவியுடன் செய்து வருகிறார்கள்.

அது போல தங்க, வைர நகைகள் அதிக அளவில் மீட்கப்பட்டுள்ளதால் அவற்றை நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் கணக் கிட்டு வருகிறார்கள். 10-க் கும் மேற்பட்ட நகை மதிப் பீட்டாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகை, பணத்தை மதிப்பிடும் பணி இன்று முடிந்து விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

அடுத்த கட்டமாக  இந்த நகைகள், பணம் எப்படி வந்தது? எத்தகைய வருவாய் மூலம் சம்பாதிக்கப்பட்டது? என்ற விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ராமமோகன ராவிட மும் அவரது மகன் விவேக் கிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.அந்த விசாரணை தகவல் கள் மற்றும் உறவினர்களி டம் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு அறிக்கையாக தயாரித் துள்ளனர். அந்த அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) அமலாக்கத் துறையிடம் வருமான வரித்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.

இதன் காரணமாக ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக் குள் வர உள்ளனர். ராம மோகன ராவும் அவர் குடும் பத்தினரும் முறைகேடான வழிகளில் எப்படி பண பரிமாற்றம் செய்தனர் என்ற விசாரணையை அமாக்கத் துறை அதிகாரிகள் நடத்து வார்கள்.
ராமமோகன ராவின் தொலை பேசி உரையாடல் கள் மிக முக்கியமான ஆதார மாகக் கருதப்படுகிறது. சேகர் ரெட்டியுடன் போனில் அவர் பேசியவை அனைத்திலும் பல நூறு கோடி ரூபாய் பண பரிமாற்ற தகவல்களாக பதிவாகி இருப்பதாக கூறப் படுகிறது. அமலாக்கத் துறைக்கு இது மிகவும் வலு வான ஆதாரமாக கருதப் படுகிறது.

ராமமோகன ராவின் கம்ப்யூட்டரிலும் பல தகவல் கள் கிடைத்துள்ளதாம். மேலும் ரகசிய அறையில் கிடைத்த ஆவணங்களும் மலைக்க வைப்பதாக இருப்ப தாக கூறப்படுகிறது.
எனவே ராமமோகன ராவை நேரில் அழைத்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இன்றே அந்த விசாரணை தொடங்கும் என்று தெரி கிறது. ராமமோகன ராவ் மகனிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

ராம மோகனராவ், விவேக் ஆகியோர் முறைகேடுகள் செய்திருப்பது உறுதி செய் யப்பட்டால் அவர்கள் மீது அமலாக்கத் துறை அதி காரிகள் நடவடிக்கை எடுப் பார்கள். ராமமோகன ராவ் மீது விசாரணை பிடி இறுகியுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்த வி.ஐ. பி.க்கள் இன்னும் கலக்கம் தீராமல் உள்ளனர்.
இதற்கிடையே ராமமோ கன ராவ் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 30 லட்சம் புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ராமமோகன ராவுக்கு இவ் வளவு புதிய ரூபாய் நோட்டு கள் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநரின் மகள் கிரிஜா


அரசின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதன், 1959-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சென்னையில் பிறந்தார். சென்னை ஐஐடியில் 1981-ம் ஆண்டு எம்எஸ்சி இயற் பியல் முடித்த இவர், 1981-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று, தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானார். அந்த ஆண்டு குடிமைப்பணி தேர்வில் பெண்களில் முதலாவதாகவும், தேசிய அளவில் 9-வது இடத்தை யும் கிரிஜா வைத்தியநாதன் பிடித்தார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி கள் அறிந்தவர். பயிற்சி முடித்து 1983-ம் ஆண்டு தமிழகத்தில் சார் ஆட்சியராக திருவள்ளூர் மாவட்டத் தில் பணியில் இணைந்தார். அதன் பின் சைதாப்பேட்டை பகுதிக்கென நியமிக்கப்பட்ட சார் ஆட்சியராக பணியாற்றினார். 1985-ல் தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழக பொது மேலாளர், 1986-ல் சுகா தாரத்துறையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட ஒருங்கிணைப் பாளர், 1989-ல் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை இணை மேலாண் இயக்குநராக பணியாற்றினார்.
அதன்பின், 1991-ல் இந்திய மக்கள்தொகை திட்டத்தில் பணியாற்றிய அவர், அதே ஆண்டு ஜூலையில் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 1992-ல் கலை மற்றும் பண்பாட்டு இயக்குநர், நிதித்துறை கூடுதல் செயலாளர், 1995-ல் செய் தித்துறை கூடுதல் செய லாளர், 1996-ல் சர்க்கரைத்துறை ஆணையர் என பல பதவிகளை வகித்தார்.
அதன்பின் செயலாளர் அந்தஸ் தில் பதவி உயர்வு பெற்று 1999-ம் ஆண்டு நிதித்துறை சிறப்புச் செயலாளரானார். 2001-ம் ஆண்டு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, 2002-ல் சுகாதாரத்துறை, 2005-ல் கல்வித்துறை, 2006-ல் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் பொறுப்புகளையும் அதே ஆண்டில் மாநில திட்டக்கமிஷன் உறுப்பினர் - செயலர் , 2008-ம் ஆண்டு தாய் - சேய் திட்ட சிறப்பு ஆணையர் ஆகிய பதவி களையும் கிரிஜா வைத்தியநாதன் வகித்தார்.
அந்தஸ்து உயர்வு
2011-ம் ஆண்டு முதன்மைச் செய லாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப் பட்ட கிரிஜா, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 2012-ம் ஆண்டு தமிழ் நாடு மின்விசை நிதி மற்றும் கட் டமைப்பு வளர்ச்சி கழகம் (பவர்ஃபின்) தலைவராக இருந் தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு மே 22-ம் தேதி நில நிர்வாக ஆணையராக நியமிக் கப்பட்டார். 2014-ம் ஆண்டு அவ ருக்கு கூடுதல் தலைமைச் செயலா ளர் அந்தஸ்து அளிக்கப்பட்டு அதே பணியில் தொடர்ந்தார்.
2019 வரை
இதையடுத்து, தற்போது அவர் தமிழக அரசின் தலை மைச் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். கிரிஜா வைத்தியநாதன் 2019-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி வரை பணியில் இருப்பார்.
குடும்ப பின்னணி
கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வெங்கட்ராமன், மத்திய அர சில் நீண்டகாலம் பணியாற்றியவர். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தார். இவரது கணவர் வைத்தியநாதன், நடிகர் எஸ்.வி.சேகரின் சகோதரராவார். கிரிஜா வைத்தியநாதனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ஐஐடியில் படிப்பு முடித்து வெளிநாட்டில் உள்ளார். மகள் மருத்துவராக உள்ளார். கிரிஜா வைத்தியநாதன், தான் படித்த சென்னை ஐஐடியில் 2011-ம் ஆண்டு சுகாதார பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 279 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் 2-வது இடத்தில் இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன். முதலிடத்தில் இருப்பவர் மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சக்தி காந்ததாஸ். 1980-ம் ஆண்டு தமிழக பிரிவு அதிகாரியான அவர், விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
முன்னதாக, ராமமோகன ராவை தமிழக தலைமைச் செயலாளராக நியமித்தபோது, அவர் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் 19-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போதுள்ள 22 கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து பெற்ற அதிகாரிகளில் 9 பேர் மத்திய அரசுப் பணியில் உள்ளனர். முன்னாள் தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் இடை நீக்கத்தில் உள்ளார். தற்போது வருமான வரித்துறை சோதனை யில் சிக்கியுள்ள ராமமோகன ராவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.

தலைமைச் செயலாளருக்கான அதிகாரம் என்ன? அதிகாரங்கள், பொறுப்புகள்... ஓர் அலசல்!


மிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை. ஒரு சம்பவத்தைப் பற்றி முழுமையாக அறியும் முன்பே அடுத்த அதிரடி சம்பவம் நடந்து விடுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது, நள்ளிரவில் புதிய முதல்வர் பதவியேற்றது, ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டது, 'சின்ன அம்மா'-வைத் தலைமையேற்க அழைப்புவிடுவது எனத் தொடங்கி, அ.தி.மு.க பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு, தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை என்பதுவரை இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் 'பி.ஜே.பி தமிழகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடத்தும் நாடகம்தான் இவையெல்லாம்' என்கின்றனர்.
எது எப்படியோ ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின், அவருக்குப் பதிலாக, தற்போது புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். பல ஆண்டுகள் அனுபவம்மிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார்கள். மாநிலத்தில் முதல்வருக்கு அடுத்த அதிகாரம் கொண்டவராக இவரே இருப்பார். அப்படிப்பட்ட தலைமைச் செயலாளருக்கு இருக்கும் பொறுப்புகள் கடமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா? 
1. மாநில முதல்வருக்கு முதன்மை ஆலோசகராக இருப்பவர். அரசின் நிர்வாக விஷயங்களைச் செயல்படுத்துபவர். மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் திட்டங்களையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் தலைமைச் செயலாளரின் முக்கியப் பணி. 
2. அமைச்சரவைக் குழுவின் செயலாளரும் இவர்தான். அமைச்சரவைக் குழு கூட்டங்களைத் திட்டமிடுவதும், அந்தக் கூட்டத்தின் இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைத் திட்டமிடுவதும் தலைமைச் செயலாளரின் பொறுப்பு. அரசு விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் இந்தப் பதவிக்கு உண்டு.
3. அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. அதேபோல் அனைத்துத் துறைகளின் பணியாளர்களும் இவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளானவர்கள்.
4. குடிமையியல் பணி தொடர்பான விவகாரங்களும் இந்தப் பொறுப்பின் கீழ்தான் வரும். முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் ஆகியவற்றையும் தலைமைச்செயலாளரே பார்ப்பார். அரசுத் துறைகளுக்கு வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும், உத்தரவுகளும் தலைமைச் செயலாளர் பெயரில் வெளியிடப்படும். 
5. மண்டல அளவிலான மாநில அரசுகள் ஆணையத்திலும் மாநிலத்தின் சார்பாக அதன் தலைமைச்செயலாளரே பிரதிநிதியாக செயல்படுவார். 
6. தலைமைச் செயலகத்தின் நிர்வாகப் பணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், யார் யாருக்கு எந்த அறை? என்று ஒதுக்கீடு செய்வதற்கும் தலைமைச்செயலாளருக்கே அதிகாரம் உண்டு. 
7. மைய ஆவணக் காப்பகம், தலைமைச் செயலக நூலகம் ஆகியவற்றையும் நிர்வகிப்பார். தலைமைச் செயலகத்தில் உள்ள காவலாளிகளும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பர். 
8. முக்கியமாக எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் சமயங்களில், மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் அவரின் கீழ்தான் இருக்கும். 
9. எந்தவொரு நெருக்கடி, அசாதாரண சூழ்நிலையிலும் அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியது தலைமைச் செயலாளருடைய பொறுப்பு. 
10. அரசு தொடர்பான டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள், நிலம் கையகப்படுத்துதல் என அனைத்தும் தலைமைச் செயலாளரின் கீழ்தான் செயல்படும்.  
இவ்வளவு அதிகாரங்கள் தலைமைச் செயலாளருக்கு இருக்கின்றன. இவை அனைத்தையும் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார் ராமமோகன ராவ். 
தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு, கூடுதலாக ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் நேர்மையாகச் செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் வேண்டுகோள்.  
- ஜெ.சரவணன்

கட்டு சோத்து பெருச்சாளிகளும், புதிய தலைமை செயலாளரும்!


ஆர்.மணி
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணனின் மகள் கிரிஜா வைத்தியநாதன்தான் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர். வெங்கிடரமணன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக டிசம்பர் 22, 1990 முதல் டிசம்பர் 21, 1992 வரையில் பணியாற்றியிருக்கிறார்.
இந்த காலகட்டம் இந்திய அரசியலில் மிகவும் முக்கியமானதோர் காலகட்டம். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு பி.வி. நரசிம்மராவ் பிரதமராகவும் மன்மோஹன் சிங் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட காலகட்டம். பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாக தொடங்கிய நேரம். 1991 ல் நரசிம்மராவ் அரசு பொறுப்பேற்ற போது ஒரு வார காலம் மட்டுமே இந்தியாவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. அப்போதுதான் சர்வதேச செலவாணி நிதியத்திடம், (ஐஎம்எஃப்) இருந்தே கடன் வாங்கும் சூழலுக்கு இந்தியா தள்ளப் பட்டது. இதற்காக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை இந்தியா குறைத்துக் கொள்ளும் (devaluation) நிலைக்குத் தள்ளப் பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் devaluation இரண்டு முறைதான் மேற்கொள்ளப் பட்டது. முதலில் 1967, பின்னர் 1991 ல் நிகழ்ந்தது. இந்த முக்கிய நிகழ்வின் போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர்தான் வெங்கிடரமணன்.
இவரது மகளான கிரிஜா வைத்தியநாதன் 1981 ம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. ஐஐடி யில் பி.டெக் பட்டம் பெற்றவர். பின்னர் 2012 ல் சென்னை ஐஐடியில் நலவாழ்வு பொருளாதாரத்தில் (Health Economics) பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருக்கிறார். பொது சுகாதாரம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்கங்களில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். 'அரசாங்கங்கள் செலவு செய்து உருவாக்கும் பொது சுகாதாரக் கொள்கைகள் மற்றும் அவற்றின் நடைமுறைகளின் பலன்கள் யாருக்குப் போய்ச் சேருகின்றன? ஏழைகளுக்கா அல்லது பணக்காரர்களுக்கா?' என்பதுதான் அவரது ஆராய்ச்சித் தலைப்பாக இருந்திருக்கிறது.
'ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டே அவர் ஐஐடி யில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவருக்கு எப்போதுமே ஆராய்ச்சியில், குறிப்பாக சுகாதாரம் சம்மந்தமான விஷயங்களில் அரசாங்கங்களின் கொள்கை வகுப்பில் ஆக்கப் பூர்வமான தாக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ச்சியாகவும், வலுவாகவும் இருந்து வந்திருக்கிறது. இது போன்ற விஷயங்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும் அவர் உன்னிப்பாக கவனித்தே வந்திருக்கிறார்' என்று ஒன்இந்தியாவிடம் கூறினார், ஐஐடி யில் அவருடன் பி ஹெச்டி பயின்ற பொருளாதார நிபுணர் ஒருவர்.
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப் பட்டதில் இவருக்கு முக்கிய பங்கிருப்பதாகவும் கூறப்படுகிறது.
'ஆம். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் டிசைன் என்று சொல்லப்படும், வடிவமைப்பு, அதாவது எந்தெந்த வியாதிகளுக்கு எந்தெந்த மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்புவது உள்ளிட்ட நடைமுறைகளை இவர்தான் உருவாக்கினார். சுகாதாரம் மற்றும் கல்வியில் அரசின் கொள்கை வகுப்பில் தொடர்ச்சியாக கருத்தாக்கங்களை கொடுத்துக் கொண்டிருப்பதுதான் (inputs) இவருக்குப் பிடித்தமான பணி,' என்று மேலும் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த அந்த பொருளாதார நிபுணர்.
இவரது கணவர் ராஜா வைத்தியநாதன் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பயின்றவர். 2007 ம் ஆண்டு காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தமிழக தலைமை அதிகாரியாக பணி புரிந்திருக்கிறார். தற்போது மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். திருமணமான ஒரு டாக்டர் மகள் சென்னையில் இருக்கிறார். பிடெக் படித்த ஒரு மகன் ஹாங்காங்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ராஜா வைத்தியநாதன் திரைப்பட நடிகர் எஸ்வி சேகரின் சொந்த அண்ணன்.
இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போதுள்ள தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலில் கிரிஜா வைத்தியநாதனால் என்ன சாதிக்க முடியும்? எப்படி செயல்பட முடியும்? என்பதுதான் முக்கியமான கேள்வி. ஏக இந்தியாவிலும் இல்லாத ஒரு வித்தியாசமான நிலைமை தமிழ் நாட்டு அரசு நிர்வாகத்தில் இருக்கிறது. அதுதான் அரசு ஆலோசகர் பதவி என்பது. எல்லா மாநிலங்களிலும் தலைமை செயலாளர்தான் தலைமை நிர்வாக அதிகாரி, அதனால்தான் அவர் சீஃப் செகரட்டரி. ஆனால் இந்த ஆலோசகரோ தலைமை செயலாளருக்கே உத்தரவு போடும் மேலதிகாரி. அதனால்தான் இவரை சூப்பர் சீஃப் செகரட்டரி என்றே அரசு அதிகாரிகள் வட்டாரங்களில் அழைக்கிறார்கள்.
ஜெயலலிதா 2011 ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது தொடங்கிய இந்த வியாதி இன்றளவும் தொடர்கிறது. முதலமைச்சருக்கும் ஒட்டு மொத்த அரசு நிர்வாகத்துக்கும் இடையிலான பாலமாக ஆலோசகர்தான் இருந்து கொண்டிருக்கிறார். தலைமை செயலாளரே இந்த ஆலோசகர் மூலம்தான் முதலமைச்சரை அணுக முடியும் என்பதுதான் ஜெ இருந்த வரையில் யதார்த்தம். தற்போது இந்த அமைப்பில் என்ன பெரிய மாற்றம் வரப்போகிறது என்று தெரியவில்லை. இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் ஆலோசகர் என்று ஒரு பதவி உண்டு. ஆனால் தமிழகத்துக்கும் அந்த மாநிலங்களுக்குமான பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. அந்த மாநிலங்களின் ஆலோசகர்கள் வெறும் ஆலோசகர்கள் மட்டும்தான். அவர்கள் தலைமை செயலாளர்கள் கீழ்தான் பணி புரிகிறார்கள். ஆனால் இங்கோ ஆலோசகர்கள் சூப்பர் சீஃப் செகரட்டரி மட்டுமல்ல, அவர்கள் தனியானதோர் அதிகார மையமாகவும் செயற் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதய ஆலோசகர் சர்வ வல்லமை படைத்த அரசின் உயரதிகாரி. தமிழக தலைமை செயலகத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் இவரிடம் தான் ரிபோர்ட் செய்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம். இனிமேல் இவர்கள் புதிய தலைமை செயலாளரிடம் ரிப்போர்ட செய்வார்களா அல்லது பழைய நிலைமையே தொடரப் போகிறதா? மற்றோர் முக்கியமான விஷயம் இந்த ஆலோசகர் அஇஅதிமுக வில் தற்போது வரையில் அசைக்க முடியாத அதிகார மையமாக இருந்து கொண்டிருக்கும் நபரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இது புதிய தலைமை செயலாளரின் பணியை இன்னமும் சிக்கலானதாக ஆக்குகிறது. அரசு நிர்வாகத்தில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாகவே கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒருவரை மீறி தன்னிச்சையாக (independent) புதிய தலைமை செயலாளரால் செயற் பட முடியுமா? ஜெ இருந்த வரையில் ஆலோசகரை மீறி பதவியில் இருக்கும் எந்த உயரதிகாரியாலும் தன்னிச்சையாக எந்த காரியத்தையும் சாதிக்க முடிந்தது இல்லை.
மற்றோர் முக்கியமான சவால் முதலமைச்சரின் அலுவலகத்தில் இருக்கும் ஓய்வு பெற்ற சில அதிகாரிகள். இவர்கள் ஜெ வின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். ஆலோசகருக்கும் இவர்களுக்கும் சரியான பணிச் சூழல், தொடர்பு அதாவது working relationship உண்டு. இவர்கள் 2011 க்குப் பிந்தய தமிழக நிர்வாகச் சூழலில் மற்றோர் அதிகார மையம். ஓய்வு பெற்ற இந்த அதிகாரிகள்தான் ஆலோசகரின் ஆசிர்வாதங்களின் படி பணியில் இருக்கும் அதிகாரிகளை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் டிசம்பர் 22 ம் தேதி ராம்மகன் ராவ் வீட்டில் நடைபெற்ற ரெய்டுகள் ஒரு செய்தியை தமிழக அரசு அதிகாரிகள் வட்டாரத்திற்கு (Beauracrats) கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 'தலைமை செயலாளர் வீட்டில் நடந்த ரெய்டுகள் தெளிவாகவே ஒன்றை சொல்லி விட்டன. இனிமேல் தமிழகத்தை ஆளப் போவது மத்தியில் இருக்கும் மோடி அரசுதானே தவிர இங்குள்ளவர்கள் அல்ல. நேரடியாகவே தன்னுடைய ஆதிக்கத்தை மத்திய அரசு தமிழக அரசு நிர்வாகத்தில் செலுத்தத் துவங்கி விட்டது. ஜெ போன பிறகு வந்திருக்கும் முதலமைச்சர் பலவீனமான முதலமைச்சர். ஆகவே அதிகாரிகள் இனிமேல் தங்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்றே மோடி அரசு விரும்புகிறது. இந்த புதிய சூழலை புத்திசாலித்தனமான அதிகாரிகள் புரிந்து கொண்டு அதற்கேற்பவே நடந்து கொள்ளுவார்கள் என்றே நினைக்கிறேன்,' என்கிறார் ஓய்வு பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.
இவர் சொல்லும் மற்றோர் தகவலும் சுவாரஸ்யமானது. 'ரெய்டுகள் நடந்து கொண்டிருக்கும் போதே கிரிஜா வைத்தியநாதனை புதிய தலைமை செயலாளராக நியமிக்கும்படி மத்திய அரசிடமிருந்து முதலமைச்சருக்கு உத்தரவு வந்து விட்டது. ஆனால் அஇஅதிமுக வின் அதிகார மையம் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. ஓபிஎஸ் ஸால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. பின்னர் மத்திய அரசின் அழுத்தம் அதிகமானதால்தான் ஓபிஎஸ் அரசு இறங்கி வந்தது. இதனால்தான் ஒரு நாள் காலதாமதம்' என்று மேலும் கூறுகிறார் அவர்.
ராம்மோகன் ராவ் வீட்டில் ரெய்டுகள் நடந்த போது தமிழக அரசிடமிருந்து ஒரு நாள் முழுவதும் எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை. மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவிக்கிறார். ஆனால் தமிழக அரசு மெளனம் காத்தது. டில்லியில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலாளர் அலுவலகம், வீடுகளில் ரெய்டுகள் நடந்த போது அடுத்த நிமிடமே கெஜ்ரிவால் அதனைக் கண்டித்து கடுமையாக பேசினார், அறிக்கைகள் வெளியிட்டார். ஆனால் தமிழக அரசோ சுமார் 30 மணி நேரம் மெளனியாக இருந்து பின்னர்தான் ராம் மோகன் ராவ் மீது நடவடிக்கை எடுத்தது.
கெஜ்ரிவாலுக்கு இருந்த தைரியம் ஓபிஎஸ் ஸுக்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்ன என்பதை சேகர் ரெட்டியிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் அசாதரணமானதோர் கட்டத்தில்தான் தமிழ் நாட்டின் புதிய தலைமை செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரால் எந்தளவுக்கு தமிழக அரசு நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவ ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் 'கட்டு சோத்து பெருச்சாளிகளுடன்' மல்லுக் கட்ட முடியும் என்பது சுவாரஸ்யமான கேள்விதான்!

ஐ.டி கையில் 11 ஐ.ஏ.எஸ்கள்! - கதிகலங்கும் கோட்டை


வருமான வரித்துறையின் வளையத்தில் இருக்கிறார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். "கடந்த ஐந்தாண்டுகளாக ராமமோகன ராவ் ஆதரவில் ஆட்டம் போட்ட 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலைக் கையில் வைத்திருக்கிறது வருமான வரித்துறை. சில நாட்களில் அவர்களது வீடுகளிலும் ரெய்டு தொடங்கும்'’ என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் கிரிஜா வைத்தியநாதன். இதுநாள் வரையில் கோட்டை அதிகாரத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்டு வந்தவர், அதிகாரத்திற்குள் வந்ததால் அதிர்ந்து போய் உள்ளனர் ராமமோகன ராவ் ஆதரவில் கோலோச்சிய அதிகாரிகள். " 2006-ம் ஆண்டு முதல் 2011 வரையில் தி.மு.க ஆட்சி காலத்தில் கோட்டையில் கொடிகட்டிப் பறந்த அதிகாரிகள் பலரும், அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலும் நல்ல பதவிகளில் தொடர்ந்தார்கள். இவர்களுக்கு உள்ள சிண்டிகேட்டை யாராலும் உடைக்க முடியவில்லை. அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பிரமாண்ட திட்டங்களில் இவர்களுக்குப் பங்கு தராமல் எந்தப் பைலும் நகராது. இவர்களுக்குப் பக்கபலமாக இருந்து வந்தவர் ராமமோகன ராவ்" என விளக்கிய தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்,

"பொதுப் பணித்துறையாக இருந்தாலும் பள்ளிக் கல்வியாக இருந்தாலும் டெண்டர் விதிகளை மாற்றுவது, வேண்டப்பட்ட நிறுவனங்களுக்குப் பணிகளை ஒதுக்கீடு செய்வது வரையில் ராமமோகன ராவ் வைத்ததுதான் சட்டம். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வித் திட்டம் போன்றவற்றில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகப் புகார் எழுந்தது. புதிய கட்டடம் கட்டுவது, விலையில்லா புத்தகப் பை, விலையில்லா காலணி உள்பட மிகப் பெரிய டெண்டர்களில் தங்களுக்கு விருப்பமில்லாதவர்கள் வருகிறார்கள் என்பதற்காக, டெண்டரையே ரத்து செய்தார்கள் இந்த அதிகாரிகள்.

மறு டெண்டர் என்ற பெயரில் மக்கள் பணத்தை விரயம் செய்தார்கள். இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து, இவர்கள் கவலைப்படவில்லை. இதுதொடர்பாக பேசும்போதெல்லாம், ' டெண்டர் நார்ம்ஸ்படி அந்தக் கம்பெனி வரவில்லை' எனக் காரணம் சொன்னார்கள். நீதிமன்ற கண்டனத்திற்கு பலமுறை ஆளானபோதும்கூட, அவர்கள் மீது ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் ராமமோகன ராவ். அரசுச் செயலரோடு இணக்கமாகச் செயல்படாத குற்றத்திற்காகவே, பள்ளிக் கல்விக்கு வந்த அமைச்சர்கள் பலரும் பந்தாடப்பட்டனர். ஓரளவு தாக்குப் பிடித்தவர் அமைச்சர் கே.சி.வீரமணி மட்டும்தான். அதற்குக் காரணம், 'நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என அவர் ஒதுக்கிக் கொண்டதுதான்.

அதேபோல், சத்துணவுக் குழந்தைகளுக்கான முட்டை கொள்முதலில் ஊழல் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடங்கி அனைத்துக் கட்சிகளும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டன. இதற்குக் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சத்துணவு மாவு முதற்கொண்டு ஒருங்கிணைந்த சமூக நலத் திட்டங்களில் ராமமோகன ராவ் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. சுகாதாரத்துறையில் நடந்த ஊழல்களுக்கு தனி விசாரணைக் கமிஷனே வைக்கலாம். வழக்கமாக எந்தப் பணி நடந்தாலும், அமைச்சரைப் பார்த்துவிடுங்கள் என ஒப்பந்ததாரர்களிடம் சொல்லப்படுவது வழக்கம். ஆனால், தமிழக அரசைப் பொறுத்தவரையில், ராமமோகன ராவைப் பார்த்தால்தான் காரியமே நடக்கும். இதற்கு வழிகாட்டுவதுதான் அவருடைய ஆதரவு ஐ.ஏ.எஸ்களின் வேலை. பொதுப் பணியில் தொடங்கி பள்ளிக் கல்வி வரையில் இவர்கள் நினைப்பவர்கள்தான் இயக்குநர்களாக வர முடியும். இவ்வளவு ஆட்டத்தையும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தார் தற்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். ஆறு ஆண்டுகளுக்கும் செயலர் பதவியில் அமர்ந்து கொண்டு, ஓர் ஐ.ஏ.எஸ் நடத்திய ஆட்டத்தையும் அவர் கவனித்து வந்தார். இனி வரக் கூடிய காலகட்டங்களில், அந்த ஐ.ஏ.எஸ் ஆன்ட்டி என்று அழைக்க ஜெயலலிதா உயிருடன் இல்லை. வரும் காலங்களில் தூய்மையான நிர்வாகம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்" என்றார் உறுதியாக.

சேகர் ரெட்டி கைகாட்டியதால், ராமமோகன ராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. அவர் மூலமாக நடத்தப்பட்ட பரிவர்த்தனைகள் ஒருபுறம் இருந்தாலும், அவருக்காக செயல்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் குறிவைத்திருக்கிறது வருமான வரித்துறை. அந்த வகையில் முதலமைச்சரின் தற்போதைய செயலர் ஒருவர், ஏழு ஆண்டுகாலம் ஒரே துறையில் கோலோச்சும் அதிகாரி, ரெட்டி அதிகாரி, வர்ம அதிகாரி என 11 பேரைக் குறிவைத்திருக்கிறது ஐ.டி. இவர்கள் அனைவரும் பசையான துறைகளில் நீண்டகாலம் அமர்ந்திருப்பவர்கள். தொடர்ந்து அரசுப் பணிகளை எடுத்துச் செய்த வந்த ஒப்பந்ததாரர்கள், அவர்கள் மூலம் ஐ.ஏ.எஸ்கள் அடைந்த லாபம், அவற்றின் மூலமான முதலீடுகள் என துல்லியமான வேட்டை தொடங்கியிருக்கிறது. நேற்றே மோகனமான அதிகாரி வீட்டிற்குள் ஆய்வை நடத்தினோம். மேலும் சில ஐ.ஏ.எஸ்கள் வளைக்கப்பட உள்ளனர்" என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.

அமைச்சர்கள் முகத்தில் கலவர பீதி தென்படுகிறதோ இல்லையோ, தினம்தினம் அச்சத்தோடு நேரத்தைக் கடத்தி வருகிறார்கள் ராமமோகன ராவ் ஆதரவு ஐ.ஏ.எஸ்கள்.

-ஆ.விஜயானந்த்

பதில் சொல்லுங்கள் பன்னீர்செல்வம்!

சமஸ்
Return to frontpage

இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் ஜனநாயக முறைக்கான ஆரம்பக் கட்டுமானங்களில் ஒன்று இன்றைய தமிழகச் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வளாகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் - அரசு நிர்வாக வரலாற்றின் கறுப்பு நாட்களில் ஒன்று. இப்படியொரு நாளும் வரும் என்று நம் முன்னோர் எண்ணியிருப்பார்களா?

தமிழ்ச் சமூகம் நவீன ஆட்சி நிர்வாகத்தின் விளைவாக இன்று அடைந்திருக்கும் நலன்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா போன்ற தொலைநோக்கும் நேர்மையும் மிக்க ஆட்சியாளர்களால் மட்டும் நாம் அடைந்தது அல்ல; நாட்டின் மீதும் மக்களின் மீதும் கனவுகளும் கரிசனமும் கொண்ட அரசு அலுவலர்களும் சேர்ந்தே அதைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றனர்; நம்முடைய ஆட்சிமுறையைக் கண்ணியப்படுத்தியிருக்கின்றனர். ராம மோகன ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும், துணை ராணுவப் பாதுகாப்போடு வருமான வரித் துறையினர் சோதனையிட்டபோது, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய அறையில் மௌனமாகப் அமர்ந்திருந்தார்; அன்று மாலை இதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனமாக வெளியேறினார் எனும் செய்தி தமிழக அரசியலும் அரசு நிர்வாகத் துறையும் இன்று வந்தடைந்திருக்கும் மோசமான இழிநிலையின் வெளிப்பாடு.

சோதனைச் செய்தி வந்த அடுத்த நிமிஷம் கொந்தளித்தார் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. “ஒரு மாநிலத்தை ஆளும் தலைமை அலுவலகத்தில், மாநில அரசுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாமல், மத்தியப் படைகள் சூழ, இப்படி ஒரு சோதனையை மோடி அரசு நடத்துகிறது என்றால், அது கூட்டாட்சி முறை மீதான தாக்குதல்” என்றார் மம்தா. உண்மை. கூட்டாட்சி முறை மீதான தாக்குதலாகவே இதை நானும் பார்க்கிறேன். “ஆனால், இப்படி ஒரு மாநில அரசுக்கு எப்படி முன்கூட்டித் தகவல் அளிக்க முடியும்? அதுதானே இப்படிப்பட்ட ஒருவர் கையில் மாநில நிர்வாகத்தின் சாவியைக் கொடுத்திருக்கிறது? நினைவில் வையுங்கள், ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் மட்டும் அல்ல; மாநிலத்தின் ஊழல் கண்காணிப்பு ஆணையராகவும் இந்த அரசு அவரை வைத்திருந்தது” என்கிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள். மறைமுகமாக அவர்கள் கேட்ட கேள்வி இதுதான்: “இவர்கள் எல்லோரும் ஒரே கூட்டம்தானே?”

தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய வெட்கக்கேடு இது! ஒருகாலத்தில் நாட்டிலேயே முன்னோடியாக, மாநிலங்களின் சுயாட்சிக்கான வலுவான குரலாகத் திகழ்ந்த மாநிலம். இன்று தன்னுடன் சேர்த்து, ஏனைய மாநிலங்களையும் சுயாட்சி தொடர்பில் பேச இயலாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது. அதிமுக அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைத் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திடமே அளித்திருக்கிறார்கள்.

ராம மோகன ராவ் மீதான குற்றச்சாட்டுகள் எளிமையாகக் கடக்கக் கூடியவை அல்ல. ரூ.134 கோடி கைப்பற்றப்பட்ட ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, ஆட்சியாளர்களின் ஊழல் கறுப்புப் பணத்தை மடை மாற்றும் வேலையிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது வருமான வரித் துறை. சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே ராம மோகன ராவ் சிக்கியிருக்கிறார் என்றால், என்ன அர்த்தம்? சமூக விரோதிகளுடனான உறவில் தலைமைச் செயலாளர் இருந்திருக்கிறார் என்றல்லவா ஆகிறது? இதுபற்றி ஒரு வார்த்தை பேசாமல், சோதனை நடந்த மறுநாள் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம மோகன் ராவை நீக்கி, காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு புதிய தலைமைச் செயலாளரைத் தமிழக அரசு தேர்ந்தெடுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? ராம மோகன ராவ் மீதான குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றவை அல்ல என்றல்லவா ஆகிறது?

வெளிப்படையாகவே எதிர்க்கட்சிகள் “ராம மோகன ராவ் ஒரு அதிகாரத் தரகர்; ஆட்சியில் மட்டும் அல்லாது ஆளுங்கட்சிக்குள்ளும் ஒரு அதிகாரத் தரகராக அவர் கரம் நீண்டிருக்கிறது” என்று முன்பே குற்றஞ்சாட்டியிருக்கின்றன. எல்லாவற்றையும் மீறியே ராம மோகன ராவைத் தலைமைச் செயலாளராக வைத்திருந்தது அதிமுக அரசு. தமிழகத்தின் தலைமைச் செயலாளரானவர் கிட்டத்தட்ட 18 லட்சம் பேரைக் கொண்ட அரசு ஊழியர் படையின் தலைவர். இப்படி ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தி, அவர் மீதான குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளி அவருடைய பதவியைப் பாதுகாத்ததன் வாயிலாக, அரசு ஊழியர்களுக்கு இந்த அரசு கொடுத்துவந்த சமிக்ஞை என்ன?

சென்னையிலிருந்து 1700 கி.மீ. தொலைவில் இருக்கிறது கொல்கத்தா. மம்தா உடனே கொந்தளிக்கிறார். சோதனையிடப்பட்ட ராம மோகன ராவ் அறையிலிருந்து சில அடிகள் தள்ளியிருக்கும் தன்னுடைய அறையில் உட்கார்ந்திருந்த பன்னீர்செல்வத்துக்கு இந்நடவடிக்கை தொடர்பில் பேச ஒரு வார்த்தை இல்லை என்றால், அதை எப்படிப் பொருள் கொள்வது? ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்புக்குள்ளாக்கப்படும்போதே அதை எதிர்த்து, ஊரையே ஸ்தம்பிக்க வைக்கும் இயல்புடைய அதிமுகவினர், அவர்களுடைய அரசின் கோட்டையே முற்றுகையிடப்படும்போது வெளிப்படுத்தும் அசாத்தியமான மௌனத்தை என்னவென்று பொருள் கொள்வது?

நம்மை நாமே ஆண்டுகொள்கிறோமா; ஏமாற்றிக்கொள்கிறோமா? அறம் கேள்வி கேட்கிறது, தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது, பேசுங்கள் பன்னீர்செல்வம்!

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Thursday, December 22, 2016

கலக்கம்!
வருமான வரி சோதனையால் கலக்கம் :
ஆவணத்தை பதுக்கும் உயர் கல்வி அதிகாரிகள்

DINAMALAR
தமிழக தலைமை செயலர் வீட்டில் நடந்த வரு மான வரித்துறை சோதனையால், உயர் கல்வி அதிகாரிகள் நடுக்கம் அடைந்துள்ளனர். அவருக்கு நெருக்கமானோர், தங்களிடம் உள்ள கறுப்பு பணம், ஆவணங்களை பதுக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய முடிவுகள் :


தமிழக தலைமை செயலர், ராமமோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால், தமிழகத்தில் உள்ள பல, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். உயர் கல்வி துறையின் முன்னாள், இந்நாள் முக்கிய அதிகாரிகள் மற்றும் பல்கலைகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில், ரெய்டு நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ராமமோகன ராவ், சென்னை பல்கலையில்,

பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு படித்த போது, சில பேராசிரியர்கள் மற்றும் உயர் கல்வி அதிகாரி கள், அவருக்கு நண்பர்களாகினர். ராமமோகன ராவ், முதல்வரின் செயலராக பதவிக்கு வந்த பின், அவர் களை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

பல்கலைகளில்,துணை வேந்தர், பேராசிரியர் நிய மனங்கள், உயர் கல்வி மன்ற திட்டங்களை அமல் படுத்துவது, கல்லுாரிகளில் கட்டுமான பணி களுக்கு, கான்டி ராக்ட் வழங்குவது போன்றவற்றில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதிக தலையீடு :

கல்லுாரிகளில் நடந்த பல நியமனங்களிலும், தலைமை செயலர் பெயரில், பேரம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உயர் கல்வி துறை யில், தலைமை செயலர், கவர்னர் மற்றும் உயர் கல்வி செயலக அலுவலகங்களில் உள்ளோர், அதிகம் தலையீடு உள்ளதாக, மத்திய அரசுக்கு பலர் புகார் அனுப்பினர். மத்திய அரசு, ரகசிய விசாரணை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி யதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, லஞ்சம் கொடுத்து பதவி பெற்றோர், லஞ் சம் வாங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் அவர்க ளுக்கு இடைத் தரகர்களாக பணியாற்றி யோர், கலக்கத்தில் உள்ளனர். இவர்களில், கறுப்பு பணம்,

முறைகேடான சொத்து வைத்திருப்போர், ஆவணங்களை உறவினர்கள், துறையில் பணி யாற்றும் நண்பர்கள் என, பல இடங்களிலும், பதுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி கல்வியிலும், 'கிலி' :

தலைமை செயலரின் வீட்டில் நடந்த சோதனை யால், பள்ளி கல்வி துறையில் உள்ள, பல முக்கிய அதிகாரிகள் பயத்தில் உள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆளுங்கட்சிக்கு நெருக்கம், தலைமை செயலரின் செல்வாக்கு என, அதிகாரத்துடன், முறைகேடுகளில் ஈடு பட்ட, பள்ளி கல்வி அதிகாரிகளும், சோதனை வலையில் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


* தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை உட்பட 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினர். இது, அதிகாரிகளிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்ட சோதனையில் ரூ.30 லட்சம் பணமும், 5 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | விரிவான செய்திக்கு > தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - துணை ராணுவப் படை பாதுகாப்புடன் தலைமைச் செயலகம் உட்பட 14 இடங்களில் நடந்தது |

* சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை 5 மணி நேரம் சோதனை நடத்தினர். 76 ஆண்டு வரலாற்றில் நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் புகுந்து சோதனை நடத்தியுள்ளது இப்போதுதான். | விரிவாக அறிய > தலைமைச் செயலகத்தில் 5 மணி நேரம் சோதனை: அதிகாரிகள் வேதனை |

* ஆந்திராவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். | அதன் விவரம் > சித்தூர், குண்டூர், விஜயவாடாவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி சோதனை |

* மத்திய போலீஸ் படையினர் ஒரு மாநிலத்தில் வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு அந்த மாநில டிஜிபி அலுவலகம் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், தமிழக போலீஸாரிடம் எந்த அனுமதியும் கேட்காமல் மத்திய ஆயுதப்படை போலீஸார் தமிழகத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். | முழு விவரம் > வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு: தமிழக போலீஸாரிடம் அனுமதி பெறவில்லை |

* புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டியும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். | விரிவான செய்திக்கு > ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: சேகர் ரெட்டி, உறவினர் கைது: வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர் |

வருமான வரித்துறை சோதனை முதல் ராமமோகன ராவ் சஸ்பெண்ட் வரை: தெரிந்திட 10 தகவல்கள்

இணையதள செய்திப் பிரிவு

* சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ஆகியோர் வருமான வரித்துறையிடம் சிக்கியதையடுத்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த 8 அமைச்சர்களும், சில வங்கி அதிகாரிகளும் சிக்க உள்ளனர். எனவே, இருவருடனும் தொடர்பில் இருந்த அமைச்சர்களும், வங்கி அதிகாரிகளும் தற்போது கலக்கத்தில் உள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும்போது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திடம் முன்அனுமதி பெற வேண்டும். தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரிடம் சோதனை நடத்தும்போது அந்த மாநில ஆளுநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவுக்கு தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அதிகாரிகளிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவ் கடந்து வந்த பாதை இதுதான் > ராமமோகன ராவ்: உதவி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை.. |

* வருமான வரித்துறை சோதனை யைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பி. ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். | முழு விவரம் > தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரி சோதனை: தலைவர்கள் கருத்து |

* ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போதிய ஆவணங்கள் கிடைக்கும் நிலையில் அவரை கைது செய்ய முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்கள் சிலர் கூறிய தகவல்கள் | முழுமையாக வாசிக்க > ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை: சட்ட வல்லுநர்கள் கருத்து |

* தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டார். | விவரம் > தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

சென்னை: தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சோதனை:

தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வருமான வரித்துறை பிடியில் வசமாக மாட்டிக் கொண்டார். அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள, அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், நேற்று வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அரசியல்வாதிகளின் கலெக்ஷன் ஏஜன்டாக, ராவ் செயல்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடந்த, இந்த சோதனையின் போது, பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது, அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியமனம்:

இதனையடுத்து தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் நீக்கப்பட்டார். புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள கிரிஜா வைத்தியநாதன், தற்போது நில நிர்வாகத்துறை ஆணையராக உள்ளார். 

கிரிஜா வைத்தியநாதன், கடந்த 1981ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. சென்னை ஐஐடியில் படித்து, பட்டம் பெற்றவர். இவரது தந்தை வெங்கிட்டரமணன், ரிசர்வ் வங்கி கவர்னராக 1990 முதல் 1992 வரை இருந்தார். கடந்த 01.07.59ம் ஆண்டு பிறந்த கிரிஜா, நல வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.
தலைமைச் செயலர் பதவியிலிருந்து ராம மோகன ராவ் ‛கல்தா'

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து தலைமை செயலர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், மகன், உறவினர் வீடு என 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து ராம மோகன ராவ் தலைமை செயலர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.

தபால் மூலம்:

இந்நிலையில், இன்று தலைமை செயலர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அவரது உதவியாளர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, ராமமோகன ராவ் காரில் இருந்த சிவப்பு சுழல் விளக்கும் அகற்றப்பட்டது.

ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை: சட்ட வல்லுநர்கள் கருத்து

டி. செல்வகுமார்

ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போதிய ஆவணங்கள் கிடைக்கும் நிலையில் அவரை கைது செய்ய முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

பி.வில்சன் (மத்திய முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்)

ஐஏஎஸ் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் அல்லது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யும்போதோ அல்லது கைது செய்யும்போதோ யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 197-ன்படி மத்திய பணியாளர் நலத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அதுகுறித்து வருமான வரித்துறையினர் மாநில அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிப்பர். அதன்பிறகு அந்த ஐஏஎஸ் அதிகாரியை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்யும். அந்த நடவடிக்கை எடுக்காமல்கூட இருக்கலாம். அதேநேரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக மாநில லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்கு வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்தால், அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்வார்கள். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்யலாம். அதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.

கே.எம்.விஜயன் (சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

வருமான வரித்துறையினருக்கு சோதனை நடத்தவும், பணத்தைப் பறிமுதல் செய்யவும் மட்டுமே அதிகாரம் உள்ளது. வருமான வரித்துறை சோதனை நடத்தியபிறகு, சம்பந்தப்பட்டவர் குற்றம் செய்திருப்பதாகக் கருதினால் அதன் தன்மையைக் கருத்தில் கொண்டு அமலாக்கத் துறை அல்லது சிபிஐ-யிடம் தெரிவிக்கப்படும். பின்னர் சிபிஐ வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியைக் கைது செய்யும்போது மத்திய அரசிடம் தகவல் தெரிவிப்பார்கள்.

வீ.கண்ணதாசன் (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்)

கைது செய்ய அதிகாரம் பெற்ற எந்த போலீஸாரும் ஒருவரைக் கைது செய்யலாம். அவர்கள் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், ஐஏஎஸ் அதிகாரியைக் கைது செய்யும் முன்பு அந்தந்த மாநில ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கும் நடைமுறை உள்ளது.

NEWS TODAY 21.12.2024