Monday, August 21, 2017

Cleanliness awareness campaign launched at Coimbatore, Salem junctions

As part of the fortnightly cleanliness awareness campaign (Swachch Pakhwada) of the Indian Railways, volunteers of the NSS unit of the Sri Ramakrishna Arts and Science College in Coimbatore launched an awareness drive at Coimbatore Railway Junction on Saturday.
They enacted skits and street plays in Tamil with an explanation in Hindi in front of the railway junction. Over 200 NSS volunteers are involved in cleaning the frontage of the junction and the platforms in the presence of Station Master Chinnaraj, principal of the college K. Karunakaran, and Lions Club of Coimbatore Town president Ramprakash.
The programme is organised by the Salem Division of the Southern Railway in association with the Lions Club of Coimbatore Town and Sri Krishna Arts and Science College.
Salem Divisional Railway Manager Hari Shankar Verma inspected the ongoing development works at the Coimbatore junction on Saturday evening. He announced various passenger amenities including pick up and drop facility at the podium of the railway station a few days ago. He directed the officials to speed up the ongoing works related to passenger amenities at the junction, railway sources here said.
SALEM
The Salem Railway Division launched the campaign recently.
The inaugural day of the campaign (Wednesday) was observed as Swachch awareness (cleanliness awareness) day in all the major railway stations. All stakeholders such as railway staff, railway cleaning staff, railway contract cleaning staff, passengers, cab / auto drivers who used railway stations were assembled at the different stations and cleanliness pledge was administered to them by the senior railway officials. They took the pledge of remaining committed towards cleanliness; that they would neither litter nor let others litter; and they would inculcate the habit of cleanliness among their family members.
A.Vijuvin, Senior Divisional Commercial Manager, administered the pledge in Salem Railway Junction. Senior officials administered pledge in Coimbatore, Tirupur, Erode, and Uthagamandalam Railway Stations.
The campaign would be continued till August 31.

Proposal for more medical seats hailed

The Doctors Association For Social Equality (DASE) has welcomed the government’s reported move to consider the creation of 2,500 more medical college seats after seeking approval for the same from the Medical Council of India.
3,000 more seats
In a press release, the organisation said that the Central government should make efforts to ensure that Tamil Nadu is allotted 3,000 more seats in order to be able to accommodate aspirants who wrote the National Eligibility cum Entrance Test (NEET) and those who were aiming for admission on the basis of their Class XII marks.
The organisation also wants Tamil Nadu to conduct a separate entrance examination for the State Board students who seek admission to medical colleges.

Engineering students in a fix over arrear exams

Anna University’s decision to disallow students from 2010 batch to take arrears from this year has left several students high and dry.
The university had decided to implement the University Grants Commission norm that the candidates should complete their degree within seven years of joining the course in the case of engineering, and eight years for architecture students. The university officials said the students with arrears forced it to extend the number of days of exam schedule.
Very few students
In some cases, there were just a handful of students for whom the university had to prepare question papers relevant to the syllabi followed at that time. The university revises its syllabi (regulations) every four years.
Recently, the university released the timetable for November/ December semester, which did not contain details of exams for students up to 2010 batch.
Nagendra, who joined Valliammai College of Engineering in 2010, said he had to forgo a year as he had been too ill. “I should have passed in 2014 but was detained for a year for want of attendance and finished the course in 2015. I have five papers and I can finish it this semester,” he said.
An alumnus of Agni College of Technology, who joined in 2008, had 25 arrears when his class graduated in 2012. “I had a job until last year. I used to take leave from work before exams. It was after my mother’s death in 2014 that I realised the need to complete the degree. I finished 15 papers last year. Now I have only two papers,” he says.
N. Ashok of Theni, who studied in Madha Engineering College in Chennai, said as a Tamil-medium student he had found the subjects difficult.
University officials said the decision had been taken after several rounds of meeting by the Syndicate. “We are only implementing the UGC norm,” said Registrar S. Ganesan. The Controller of Examination, G.V. Uma, said there might be several hundreds of such candidates since 2000, when the university became an affiliating body.
The students proposed to meet Higher Education Secretary on Monday to give them another chance.

SC issues notice to private medical institutions


TNN | Updated: Aug 21, 2017, 12:00 AM IST

Cleared



Puducherry: The Supreme Court has issued notices to private medical institutions in the Union territory of Puducherry and others seeking their replies for failing to admit students into postgraduate medical programmes in their institutions despite being allotted seats by the Centralized admission committee (Centac) after counselling and a direction by the Medical council of India (MCI).



The court, which passed the direction on August 14 while hearing a petition by a section of meritorious students, also sent notices to the Union human resources development ministry, MCI, University grants' commission, secretary (health) of Puducherry government, director (health and family welfare services) and Puducherry lt governor's secretary. The court posted the case for further hearing on September 1.



The students launched a campaign christened 'Admission Nyayam' and initiated legal proceedings to secure seats allotted to them by Centac in private institutions. They said the four colleges affiliated to the deemed universities and three private medical colleges denied admission to 95 students, who were allotted seats by the Centac. They alleged that these institutions illegally admitted students, who were not allotted seats by the Centac and also admitted students, who did not even attend counselling held by Centac.



The students argued that the Puducherry government did not follow the directions laid down by the Supreme Court (in Dar Us Slam Vs MCI case) while sending the merit list. The government forwarded all the candidates (1,844), who attended counselling, instead of forwarding the meritorious students (940) to the institutions for admissions.



The MCI on July 24 pulled up the four colleges affiliated to deemed universities and three private medical colleges and directed them to discharge 95 postgraduate medical students, who were admitted without following the prescribed rules and regulations.



MCI assistant secretary S Savitha in individual letters addressed to the seven institutions furnished the lists of students, who did not attend common counselling and yet were offered seats in the colleges. She also furnished the lists of students, who were offered postgraduate specialties that the students did not select during the common counselling.



The four colleges affiliated to the deemed university are Arupadai Veedu medical college, Vinayaga Mission medical college, Mahatma Gandhi medical college and research institute and Sri Lakshmi Narayana institute of medical sciences. The three private medical colleges are Sri Manakula Vinayagar medical college and hospital, Sri Venkateswara medical college and research institute and Pondicherry institute of medical sciences.
AIADMK formula: OPS will get party, EPS to head government

D Govardan, Julie Mariappan, B Sivakumar| 

TNN | Updated: Aug 20, 2017, 01:07 PM IST


HIGHLIGHTS

AIADMK factions headed by EPS and OPS moved closer to a merger.
OPS may now settle for the deputy chief minister's post, besides a few portfolios for his men.
The OPS faction has insisted that the resolution expelling Sasikala should be signed by all office-bearers.




CHENNAI: AIADMK factions headed by chief minister Edappadi K Palaniswamiand O Pannerselvam moved closer to a merger with the latter dropping his claim to the chief minister's post, but stepping up the demand for the expulsion of K Sasikala from the party. OPS+ may now settle for the deputy chief minister's post, besides a few portfolios for his men, if he is made the chairman of a steering committee that would run the party affairs till a formal election is held.

In short, EPS will head the government and OPS the party. The OPS faction has insisted that the resolution expelling Sasikala should be signed by all office-bearers. Lok Sabha deputy speaker M Thambidurai was not a signatory to the decision to remove TTV Dhinakaran from the deputy general secretary post on August 10. Thambidurai is party's propaganda secretary and MPs A Navaneethakrishnan and Vijila Satyanand — who also refused to sign the previous resolution — head the advocates' wing and the women's wing.

"We will announce the good news in a few days," OPS said on Saturday after forming a six-member negotiation team. EPS reciprocated, saying the remaining issues will be sorted out through talks.

Any truce between the two factions will also brighten the prospects of the Election Commission de-freezing the 'two leaves' party symbol. TTV Dhinakaran, however, could pose new legal hurdles to keep the symbol blocked. On the national front, this peace brokered by the BJP would make things less easy for the UPA in the 2019 elections as a merged AIADMK is likely to sail with the NDA.

Having reconciled that he may not get to be CM soon, OPS wants the general secretary post reserved for him as and when elections are held.

The party general secretary post has to be filled through an election in which all the primary members of the AIADMK will have voting rights.

OPS supporters say the ball is now in EPS's court. The EPS faction has suggested that after the merger, a general council meeting could be held to remove Sasikala. On the demand for a CBI probe into Jayalalithaa's death, EPS is of the view that if the single-judge commission recommends, it could be ordered.

While EPS was away in Tiruvarur to participate in an MGR centenary function on Saturday, OPS, along with senior leaders, left for Tirunelveli on Saturday evening to participate in a function to observe the death anniversary of Ondiveeran, a dalit leader, on Sunday.

Talks can resume, at the earliest, only on Monday, said sources. In Tiruvarur, Palaniswami said there were "some differences" between the two factions. "I am happy to say that the factions will merge by sorting out the issues through talks," he told reporters. He refused to react to queries as to whether the deputy CM post would be given to OPS.

OPS, meanwhile, brushed aside reports about discord within his group. A meeting of his camp on Friday witnessed debates on the conditions for the merger.

The OPS group's negotiation team comprises K P Munusamy , Natham R Viswanathan, V Maitreyan, Manoj K Pandian, S Semmalai and J C D Prabhakaran. The members met and deliberated on Saturday.
இலவச வில்லங்க சான்று சேவை திடீர் முடக்கம்?

பதிவு செய்த நாள்21ஆக
2017
01:25

சொத்துக்களின் முந்தைய பரிவர்த்தனை விபரங்களை, இலவசமாக மக்கள் அறிந்து கொள்ள, பதிவுத்துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்ட, வில்லங்க சான்று அறியும் சேவை திடீரென முடங்கி உள்ளது. தமிழகத்தில், புதிதாக வீடு, மனை வாங்குவோர், அது குறித்த முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெற வேண்டும். சொத்து அமைந்துள்ள பகுதிக்கான, சார் - பதிவாளர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி, அதை பெறலாம். இதில், ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, வில்லங்க விபரங்களை இலவசமாக அறிந்து கொள்ள, புதிய வசதி பதிவுத்துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டது. சொத்து உரிமையாளர்கள் நில மோசடியில் இருந்து தப்பிக்க இது, பேருதவியாக அமைந்தது.
இந்த சேவை, தற்போது, திடீரென முடங்கி உள்ளது. பதிவுத்துறை இணையதளத்தில், இதற்கான பகுதியில் உரிய தகவல்களை அளித்தால், வில்லங்க சான்று விபரங்கள் வருவதில்லை. இதனால், பொதுமக்களுக்கு, சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இலவச வில்லங்க சான்று சேவை திடீரென முடங்கியது குறித்து, தொழில்நுட்ப பிரிவிடம் விசாரித்து வருகிறோம். ஆன் - லைன் முறையில் பத்திரப்பதிவு செய்வதற்காக, பதிவுத்துறை இணையதளத்தில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதனால், இந்த சேவை பாதிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறோம்' என்றார். பதிவுத்துறை தலைமையகத்தில், கூடுதல், ஐ.ஜி., நிலையில் உள்ள சில அதிகாரிகள், இந்த இலவச வசதியை கட்டண சேவையாக்க முயன்று வருகின்றனர். அவர்களின் தலையீட்டால், இந்த சேவை முடக்கப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகமும், துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது.

-நமது நிருபர் -
பள்ளிக்கு 'மட்டம்' போட்ட தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:33

திருவண்ணாமலை: ஜமுனாமரத்துார் அருகே, பள்ளிக்கு சரியாக வராத தலைமை ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் அடுத்த கோவிலாந்துார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியராக மனோகரன் உள்ளார். இவர், பள்ளிக்கு சரியாக வருவதில்லை; மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில்லை என, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கடந்த, 18ம் தேதி மதியம், 2:00 மணிக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் கோவிந்தராஜ், பள்ளிக்கு ஆய்வு நடத்த சென்றார். அப்போது, பள்ளி மூடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் மனோகரனை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
ஸ்டாலின் வழக்கறிஞர் அல்ல: ஓ.பி.எஸ்., சாடல்

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:00




ராஜபாளையம்: ''தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் சட்டம் படித்தவர் அல்ல,'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அவர் கூறுகையில், ''அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது,'' என்றார். 'ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடமை ஆக்கப்படுவது சட்டப்படி தவறு' என ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''ஸ்டாலின் வழக்கறிஞர் அல்ல,'' என பதில் அளித்தார்.
மரத்தடியில் மாணவிகள்: கட்டட வசதியில்லாததால் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடம், அடிப்படை வசதிகள் தேவை
பதிவு செய்த நாள்20ஆக
2017
22:38

காரியாபட்டி:காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய கட்டட வசதியில்லாததால் இடநெருக்கடி ஏற்பட்டு, மாணவிகள் மரத்தடியில், தரையில் உட்கார்ந்து படிக்கின்றனர்.மழைகாலத்தில் படிக்க, நடமாட சிரமப்படுகின்றனர், ஒரே வகுப்பறையில் நெருக்கடியில் மாணவிகள் உட்காருகின்றனர். 

காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் ஆயிரத்து 200 பேர் படிக்கின்றனர். சுற்றி உள்ள கிராமங்களில் மேல்நிலைப்பள்ளிகள் இருந்தாலும், மாணவிகள் இங்கு படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அதிக தேர்ச்சி சதவீதம்தான். எத்தனை மாணவிகள் வந்தாலும் இடம் இல்லை என சொல்லாமல் பள்ளியில் சேர்க்கை நடைபெறுகிறது. வேறு வழியில்லாமல் ஒவ்வொரு வகுப்பிற்கும் சில பிரிவுகள் ஏற்படுத்தி, பாடம் நடத்துகின்றனர். மாணவிகள் சேர்க்கைக்கு ஏற்ப போதிய கட்டட வசதி, கூடுதல் ஆசிரியைகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர். வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் மாணவிகள் படிக்கின்றனர். மழை காலத்தில் மழை நீர் தேங்கி, சேரும்சகதியுமாக இருப்பதால் மாணவிகள் உட்கார முடியாமல் அன்றைய பாடத்தை அன்றே படிக்க முடியாமல் போகிறது.

 பெற்றோர் கோரிக்கைபள்ளி வளாகம் பள்ளமாக இருப்பதால் சுற்றுப்புறங்களில் இருந்தும் மழைநீர் பள்ளியில் தெப்பம் போல் தேங்கிவிடுகிறது. இதனால் நடப்பதற்கே மாணவிகள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்ல, இருக்கிற ஆசிரியைகளைக் கொண்டு அனைத்து பாடம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியைகள் உள்ளனர். தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு ஆசிரியைகள் சிரமப்படுகின்றனர்.
இதனால் திருத்திய விடைதாளை மாணவிகளுக்கு அளிப்பது தாமதம் ஏற்படுகிறது. கூடுதல் ஆசிரியைகள் நியமிக்க பல முறை மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை. இருக்கின்ற ஆசிரியைகள் தங்கள் ஓய்வு நேரத்தை மாணவிகளின் கல்விக்கு செலவழிக்கின்றனர். தொடர்ந்து 10 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை செய்கின்றனர். கவனச் சிதறல்மேலும் பள்ளியில் அடிப்படை வசதி, விளையாட்டு மைதானம் இல்லை. ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கான மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்த செல்வதால் நெருக்கடி ஏற்படுகிறது. கூடுதல் கட்டட வசதி இல்லாமல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஒரே வகுப்பில் மாணவிகளை உட்கார வைப்பதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. கை, கால்களை அசைக்க முடியாமல் மாணவிகள் உட்காருவதால், கவனம் சிதறுகிறது. மாணவிகளின் நிலையை புரிந்து கொண்ட ஆசிரியைகள் வெளியில் சொல்லமுடியாமல் உள்ளனர். 

சாதனை தொடர வேண்டும்

இது ஒருபுறம் இருக்க, தற்போது, பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத்தேர்வு ஏற்பாடு நடந்து வருகிறது. ஏற்கனவே பற்றாக்குறையால் சிரமப்படும் ஆசிரியைகளுக்கு, கூடுதல் பொறுப்பாக பொதுத்தேர்வு அமையும் என புலம்புகின்றனர். அடிப்படை வசதி, கட்டட வசதி, கூடுதல்ஆசிரியைகள் இல்லாமலே சாதிக்கும் இந்த பள்ளியில் வசதிகளை மேம்படுத்தி, ஆசிரியைகளை அதிகம் நியமித்தால் சாதனை தொடரும். இல்லாவிட்டால் கேள்விக்குறியாகும். இப்பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

நியமனம் தேவை

சிவகுமார், சமூகஆர்வலர், காரியாபட்டி: ஒரு சில அரசு பள்ளிகள்தான் தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. அதில் காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் அடிப்படை வசதி என்பது குறைவு. குறிப்பாக சுகாதார வசதி, கட்டட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லை. கல்வி மட்டும் அல்ல, விளையாட்டிலும் மாணவிகள் ஜொலிக்க வேண்டும். அதற்கு தேவையான விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரவேண்டும்.
தொடர்ந்து, நுாறு சதவீதம் தேர்ச்சி பெறும் இந்த பள்ளிக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால், இன்னும் சாதிக்க முடியும். கூடுதல் ஆசிரியைகளை நியமிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கல்லூரியில் தூய்மை : யு.ஜி.சி., உத்தரவு

பதிவு செய்த நாள்21ஆக
2017
01:10

கோவை: கல்லுாரி, பல்கலைகளில், 'ஸ்வச்தா பக்வாடா' எனும், துாய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, செப்., 1 முதல், 15ம் தேதி வரை நடத்த, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

 'துாய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, துாய்மை விழிப்புணர்வை, மாணவர்களிடம் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கும் எடுத்து செல்ல, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு, உத்தரவிட்டு உள்ளது.

இத்திட்டத்தில், மாணவர்கள், செப்., 1 முதல், கல்லுாரி மற்றும் விடுதியை சுத்தம் செய்தல், பசுமை வளாகம் பேணுதல், கிராமப்புறங்களுக்கு சென்று துாய்மையின் மகத்துவத்தை எடுத்துரைத்தல் போன்ற சேவைகளை செய்ய வேண்டும். சுவர்களில் வாசகங்கள் எழுதுதல், மருத்துவமனைகளில் சுகாதாரம், மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தும் முறைகளை பார்வையிடுதல் போன்ற நிகழ்ச்சிகளில், செப்., 15 வரை, ஆசிரியர் மற்றும் மாணவர் குழுக்கள், பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 'துாய்மை இந்தியாவை உருவாக்க, நான் என்ன செய்ய வேண்டும்' எனும் தலைப்பில், குறும்படம் மற்றும் கட்டுரை போட்டியையும், பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்கான பதிவுக்கு, செப்., 8 கடைசி நாள்.
கோவில் கும்பாபிஷேகம் : இஸ்லாமியர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்21ஆக
2017
01:11

செங்கம்: செங்கம், காக்கங்கரை விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இஸ்லாமியர்களும் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பஜார் வீதியில் உள்ள, பழமை வாய்ந்த காக்கங்கரை விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. நேற்று காலை, 10:15 மணிக்கு, யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, சுவாமி மூல கருவறையின் மேல் உள்ள கலசத்தின் மீது ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களும், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
சப்போட்டா சீசன் துவக்கம் : கிலோ ரூ.25 - 30 மட்டுமே!
பதிவு செய்த நாள்21ஆக
2017
00:48


சப்போட்டா பழ சீசன் களை கட்ட துவங்கியுள்ளதால், அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் வேலுார், திருப்பூர், திருநெல்வேலி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் சப்போட்டா பழ சாகுபடி நடந்து வருகிறது. தமிழகத்தின் தேவைக்கு, இது போதுமானதாக இல்லாததால் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், இந்த பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது, தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும், இதன் சீசன் களை கட்டுகிறது. பழங்கள் அறுவடை செய்யப்பட்டு, மாநிலத்தின் பல மார்க்கெட்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. காயாக வரும் சப்போட்டாக்களை, விசேஷ அறைகளில், புகை போட்டு கனிய வைத்து, வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். சென்னைக்கு மட்டும், தினமும், 20க்கும் மேற்பட்ட லாரிகளில், வரத்து உள்ளது. இதனால், விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ சப்போட்டா, சில்லரை விலையில், 25 முதல், 30 ரூபாய்க்கு கிடைக்கிறது.

- நமது நிருபர் -
காரைக்கால் சிறப்பு ரயில் ரத்து

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:46


சென்னை: பயணியர் வருகை குறைவால், கொச்சுவேலி - காரைக்கால் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, புதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு, வரும், 23, 30ம் தேதிகளிலும், காரைக்காலில் இருந்து, கொச்சுவேலிக்கு, 24, 31ம் தேதிகளிலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. பயணியரிடம் வருகை போதுமானதாக இல்லாததால், ரத்து செய்யப்பட்டுள்ளது

 தாம்பரத்தில் இருந்து, அசாம் மாநிலம் கவுகாத்திக்கு, நாளை இரவு, 9:45 மணிக்கு இயக்கப்படவிருந்த, கவுகாத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது

 திருவனந்தபுரத்தில் இருந்து, கோவை மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக கவுகாத்திக்கு, 22ம் தேதி மாலை, 5:00 மணிக்கு இயக்கப்படவிருந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரளாவில் 100 ஆண்டுக்கு முன்பே மாத விலக்கு விடுமுறை அளித்த பள்ளி
பதிவு செய்த நாள்21ஆக
2017
01:02


திருவனந்தபரம்: பெண் ஊழியர்களுக்கு மாத விலக்கு நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ள நிலையில், கேரளா வில், 100 ஆண்டுக்கு முன்பே, ஒரு பள்ளியில், ஆசிரியை மற்றும் மாணவியருக்கு மாத விலக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தகவல், தற்போது தெரிய வந்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த, கேரள சட்டசபை கூட்டத்தில், காங்., உறுப்பினர் சபரிநாதன், 'பல நாடுகளில், பெண் ஊழியர்களுக்கு, மாத விலக்கு நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

'அதேபோல், கேரளாவிலும், பெண் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். இது குறித்து பரிசீலிப்பதாக, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கேரளாவில், 105 ஆண்டுக்கு முன், ஆசிரியைகள், மாணவியருக்கு, மாத விலக்கு நாட்களில், பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. வரலாற்று ஆய்வாளர், பி.பாஸ்கரன் உன்னி, 19ம் நுாற்றாண்டில் கேரளா என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், 'எர்ணாகுளம் மாவட்டம் திருபுனித்துராவில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் தான், 105 ஆண்டுக்கு முன், ஆசிரியை மற்றும் மாணவியருக்கு, மாத விலக்கு நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தாவது: கடந்த, 1900களின் துவக்கத்தில், மாணவ - மாணவியர், 300 நாட்களுக்கு குறையாமல் பள்ளிக்கு வருகை தந்திருந்தால் மட்டுமே, ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்ற விதி இருந்தது. திருப்புனித்துரா பெண்கள் பள்ளியில், மாத விலக்கு நாட்களில், ஆசிரியை மற்றும் மாணவியர் பள்ளிக்கு வரமாட்டார்கள். இதனால், வருகை நாட்கள் குறைவதாக கூறி, மாணவியருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. 

இதையடுத்து, பள்ளி யின் அப்போதைய தலைமை ஆசிரியர் விஸ்வநாத ஐயர், பள்ளி கல்வி உயர் அதிகாரிகளை சந்தித்து, நிலைமையை விளக்கினார். இதன்பின், 'மாத விலக்கு நாட்களில், மாணவியர் எடுக்கும் விடுமுறை, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது' என, அதிகாரிகள், 1912ல் உத்தரவிட்டனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக கன மழை

பதிவு செய்த நாள்
ஆக 20,2017 17:56



சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களின் கனமழை பெய்தது.
ராயப்பேட்டை,மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி , தேனாம்பேட்டை, கோயம்பேடு, பெரம்பூர், ஆர்.கே.நகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கோலியனூர், விக்கிரவாண்டி, ஜானகிபுரம், முண்டியம்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஆதனூர், காமக்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டை, குரிசிலிப்பட்டு, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம்:

சிறுமலை பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, கடந்த சில நாட்களாக குட்லாடம்பட்டி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையறிந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டனர்.
பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை
பதிவு செய்த நாள்
ஆக 21,2017 01:23



கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அப்போது, சில தனியார் பள்ளிகளில், சினிமா நடிகர், நடிகையர் போன்று பேசுவது, நடிப்பது, திரைப்பட பாடல்களை இசைக்கச் செய்து ஆடுவது உட்பட, பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தனியார், 'டிவி'க்களை காப்பியடித்தும், சில நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவையெல்லாம், பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை கெடுப்பதாக, உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதனால், பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறி நடத்தினால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், மாணவர்கள் புகார் அளிக்கலாம் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-நமது நிருபர் -
பி.ஆர்க்., படிப்பில் 60 சதவீத இடம் காலி: ஆர்க்கிடெக்சர் கல்லூரிகள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்
ஆக 21,2017 01:25



தமிழக அரசு நடத்திய, பி.ஆர்க்., கவுன்சிலிங்கில், 60 சதவீத இடங்கள் மாணவர்களின்றி காலியாக உள்ளன.

தமிழக அரசு சார்பில், இன்ஜினியரிங் மற்றும் பி.ஆர்க்., படிப்புக்கு, அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, இன்ஜி., கவுன்சிலிங், ஆக., 18ல் முடிந்தது. தொடர்ந்து, பி.ஆர்க்., கவுன்சிலிங், ஆக., 19ல் நடந்தது. இதில், அண்ணா பல்கலை, அரசு மற்றும் தனியார்கல்லுாரிகளின், 2,267 இடங்களுக்கு, 1,719 பேர்விண்ணப்பித்தனர். அவர்களில், 1,446 பேர் தகுதி பெற்று, கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த கவுன்சிலிங்கில், 453 பேர் பங்கேற்கவில்லை; 993 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில், 87 பேர் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகள் கிடைக்காமல், இடங்களை பெறவில்லை. மீதமுள்ள, 906 பேர், இட ஒதுக்கீடு பெற்றனர். இதன்படி, 2,267 இடங்களில், 40 சதவீதம் மட்டுமே, கவுன்சிலிங்கில் நிரம்பியுள்ளது. மீதி, 60 சதவீதமான, 1,361 இடங்கள் காலியாக உள்ளன.

இது குறித்து, ஆர்கிடெக்சர் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், 'இந்த ஆண்டு, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் நடத்திய, 'நாட்டா' தேர்வில், புதிய மாற்றங்கள் கொண்டு வந்ததால், பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதனால், காலியிடங்கள்அதிகரித்துள்ளன' என்றார்.

- நமது நிருபர் -
பாங்காக்கில் இருந்து சென்னைக்கு தங்கச்செயின் கடத்திய பெண் பயணி கைது
2017-08-21@ 00:42:50




மீனம்பாக்கம்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த பன்சாலா (39) என்ற பெண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை. ஆனாலும், சந்தேகம் தீராத அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது பன்சாலா தான் கட்டியிருந்த புடவைக்குள் கொத்துக் கொத்தாக புத்தம் புதிய தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 16 செயின்கள் இருந்தன. அதன் மொத்த எடை அரை கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.15லட்சம் ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் பன்சாலாவை கைது செய்து அரை கிலோ மதிப்புள்ள தங்க செயின்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோல, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக சிவகங்கையை சேர்ந்த கருப்பையா (44) என்பவர் வந்தார். இவர், இலங்கை வழியாக அபுதாபிக்கு செல்வதற்கான டிக்கெட் வைத்திருந்தார். சுங்க அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரது சூட்கேசில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். ரூ.10 லட்சம் மதிப்புடைய வெளி நாட்டு கரன்சிகளை அவரிடம் இருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் கருப்பையாவின் பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போன் ரீசார்ஜ் செய்வதுபோல ஆந்திராவில் விரைவில் பிரீபெய்ட் மின்சாரம்: முதல்கட்டமாக அரசு அலுவலகங்களில் நடைமுறை

2017-08-21@ 00:42:13




திருமலை: செல்போன் ரீசார்ஜ் செய்வதுபோல ஆந்திர மாநிலத்தில் பிரீபெய்ட் மின்சாரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசு அலுவலகங்களில் 

இது டைமுறைப்படுத்தப்படுகிறது.ஆந்திர மாநிலத்தில் மின்சாரத்துறை நிறுவனமான டிரான்ஸ்கோ செல்போன் ரீசார்ஜ் செய்வது போன்று மின்சார கட்டணத்தையும் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது ஒவ்வொரு மாதமும் வீடு, கடை மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் மின்சார துறை ஊழியர்கள் மீட்டர் ரீடிங் செய்து வருகின்றனர். தொடர்ந்து பயன்படுத்திய மின் கட்டணத்திற்கு ரசீது வழங்கப்படுகிறது. இதற்குண்டான பில் தொகையை இ-சேவா மற்றும் ஆன்லைன் மூலமாக செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட தேதியில் பணம் கட்ட தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செல்போன் ரீசார்ஜ் செய்வது போன்று மின்சாரம் விநியோகத்திலும் பிரீபெய்ட் முறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மின் மீட்டர்கள் விரைவில் வாங்க திட்டமிட்டுள்ளனர். மேலும், எவ்வளவு மின்சாரம் தேவையோ அதற்கேற்ப பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து இந்த திட்டத்தை முதல் கட்டமாக அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த டிரான்ஸ்கோ திட்டமிட்டுள்ளது. இதில் அரசு துறை அலுவலகங்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாமல் அப்படியே நிலுவையில் வைத்துள்ளதால் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
அமைச்சர்களுக்கு மோடி கடும் எச்சரிக்கை நட்சத்திர ஓட்டலில் தங்கும் ஆசையை விட்டு விடுங்கள்

2017-08-21@ 00:42:14




புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களின் கார்களை பயன்படுத்துவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது போன்ற செயல்களை கைவிடும்படி மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கடுமையாக எச்சரித்துள்ளார்.டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் ேநற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு யாரும் கலைந்து செல்லக்கூடாது என மோடி சற்று கோபத்துடன் உத்தரவிட்டார். பிறகு அவர்களிடம் பேசிய மோடி, ‘அமைச்சர்கள் சில பேரின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், தங்கள் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் கார்களை தங்கள் குடும்பத்தினருக்காகவும், தங்களுக்காகவும் துஷ்பிரோகம் செய்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் பரிசுப் பொருட்களையும் வாங்குகின்றனர். இந்த ஆசைகளை எல்லாம் உடனடியாக விட்டு விடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ‘ஊழலற்ற ஆட்சியை கொடுப்பதாக மக்களுக்கு உறுதி அளித்துள்ள நிலையில், சிலர் இப்படி செய்வது கட்சியின் புகழை பாதிக்கும். ஊழல் என்ற வார்த்தையை சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டேன். யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு முறை பயணமாக எங்கு சென்றாலும், அரசு விருந்தினர் மாளிகையில்தான் தங்க வேண்டும். உங்களின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளும் இதை தவிர்க்க வேண்டும்.’ என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

மக்களை இணைக்கும் திரங்கா யாத்திரை: 2022ம் ஆண்டு ‘புதிய இந்தியா’வை நோக்கி, பாஜ சார்பில் திரங்கா யாத்திரை நடத்தப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி, டிவிட்டரில் நேற்று, ‘‘நாடு முழுவதும் பாஜ மேற்கொள்ளும் திரங்கா யாத்திரை, 2022ம் ஆண்டில் ‘புதிய இந்தியா’வை உருவாக்குவதற்கான பணியை மேற்கொள்வதில் மக்களை ஒன்றிணைக்கும். இதில் பங்கேற்ற அனைவருக்கும், கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார். யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற புகைப்படங்களையும் அவர் டிவிட் செய்தார்.
தேர்தலின் போது இந்திய வம்சாவளியினர் பிரசாரத்தில் ஈடுபடுவது விசா விதிமுறை மீறலா?: அரசிடம் தேர்தல் ஆணையம் கேள்வி

2017-08-21@ 00:42:16




புதுடெல்லி: வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது விசா விதிமுறை மீறல் இல்லையா? என மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சிலர் ஆம் ஆத்மி கட்சிக்காக இங்கு வந்து பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் இதுகுறித்து எந்த கட்சியும் புகார் அளிக்கவில்லை. இது புதுமையான முறையாக இருப்பதால் அது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வம்சாவளியினர் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து தேர்தல் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறைகளிலும் இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பிரசாரத்தில் ஈடுபடும் இந்திய வம்சாவளியினர் யாரும் இந்திய குடிமகன்கள் அல்ல. சுற்றுலா விசா அல்லது அலுவல் விசா போன்றவை மூலம் இந்தியா வருபவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது, விசா விதிமுறை மீறல் இல்லையா என பதில் அளிக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.இதற்கு மத்திய சட்ட அமைச்சகத்திடம் பதில் பெறும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சகம் இன்னும் பதில் அளிக்கவில்லை.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையிடம் இருந்து தப்பிக்க தங்க கட்டிகளை விழுங்கிய பயணி
2017-08-21@ 01:08:11




திருச்சி: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். இமிகிரேசன் சோதனைக்கு அடுத்தப்படியாக சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது பயணி ஒருவர் இமிகிரேசன் சோதனை முடிந்த பிறகு சுங்கதுறை அதிகாரிகளின் சோதனைக்கு செல்லாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க விமான நிலையத்தின் வருகை பகுதி வழியாக சாவகாசமாக வெளியேறினார். இதை கண்காணிப்பு கேமராவில் பார்த்த சுங்கதுறை அதிகாரிகள் அந்த நபரை பின்தொடர்ந்து விரட்டினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் அவரை மடக்கி பிடித்து சுங்கதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சுங்கதுறை அதிகாரிகள் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினத்தை சேர்ந்த முஸ்தபா மகன் முகமதுசலீம் (49) என்பதும், அவர் மலேசியாவில் இருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பிலான 50 கிராம் கொண்ட 6 தங்க கட்டிகளை கடத்தி வந்தததும், விமான நிலையத்திற்கு வெளியே தப்பிச்சென்றபோது 6 தங்க கட்டிகளை விழுங்கியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி விமானநிலைய சுங்க துறை அதிகாரிகள் ஜேஎம் 1 நீதிபதி கவுதமன் முன் ஆஜர்படுத்தி முகமதுசலீம் விழுங்கிய தங்கத்தை எடுப்பதற்காக அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மதியத்திற்குள் விழுங்கிய தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்படும் என சுங்கதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுவை அருகே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மணமகன் குடித்து விட்டு பேசியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
2017-08-21@ 01:24:24




காலாப்பட்டு: புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த 24 வயதுள்ள பி.காம்., பட்டதாரி பெண்ணுக்கும், சிதம்பரத்தில் தனியார் வங்கி மேலாளராக பணிபுரிந்து வரும் 26 வயது நபருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.
மணமகனான வங்கி மேலாளருக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இரவு நேரங்களில் மதுகுடித்து விட்டு மணப்பெண்ணிடம் செல்போனில் பேசி வந்தார். நாளடைவில் வங்கி மேலாளர் போதையில் எல்லை மீறி பேச தொடங்கியுள்ளார். அதன் பிறகுதான் மாப்பிள்ளை குடிப்பழக்கம் உள்ளவர் என்பது மணப்பெண்ணுக்கு தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. திருமணத்தை நிறுத்துமாறு மணப்பெண் பெற்றோரிடம் கூறி வந்தார். ஆனால் அவர்கள் ஊரறிய நிச்சயம் செய்து விட்டு தற்போது திருமணத்தை நிறுத்தினால் குடும்ப கவுரவம் பாதிக்கும் என்று மகளுக்கு அறிவுரை கூறினர். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. குடிப்பழக்கம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என உறுதியான முடிவெடுத்த அந்த பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்று நடந்த விவரங்களை தெரிவித்து திருமணத்தை நிறுத்துமாறு புகார் அளித்தார். 

இதையடுத்து மகளிர் போலீசார் இருதரப்பினரையும் வரவழைத்து மணமகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவரை திருமணம் செய்ய மணமகளுக்கு விருப்பம் இல்லை என்றும் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைப்பது சட்டத்துக்கு புறம்பானது என எடுத்து கூறி அனுப்பி வைத்தனர். இதனால் திருமணம் நின்றது.
'இந்திய தம்பதியின் விவாகரத்து மனு : வெளிநாடு கோர்ட் முடிவெடுக்கலாமா'
பதிவு செய்த நாள்21ஆக
2017
00:53

மும்பை: 'இந்தியாவை உறைவிடமாக வைத்து, ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்துள்ள தம்பதியின் விவாகரத்து மனு மீது, வெளிநாட்டு நீதிமன்றங்கள் முடிவெடுக்க முடியாது' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை உயர் நீதிமன்றத்தில், பெண் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது: மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எனக்கு, ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், நானும், என் கணவரும், துபாயில் வசித்து வந்தோம். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, துபாய் கோர்ட்டில் விவாகரத்து கோரி, என் கணவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவை ஏற்று, துபாய் நீதிமன்றம், விவாகரத்து வழங்கிவிட்டது. எனக்கு ஜீவனாம்சம் தருவது பற்றி, எதுவும் கூறவில்லை. இதையடுத்து, மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில், என் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரக் கோரி, மனு தாக்கல் செய்தேன். துபாய் கோர்ட் ஏற்கனவே விவாகரத்து வழங்கிவிட்டதால், விசாரிக்க முடியாது என கூறி, என் மனுவை, குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால், என் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஏ.எஸ்.ஒகா, அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
இந்த வழக்கில், தம்பதி துபாயில் வசித்தாலும், இந்திய குடிமகன்களாகத் தான் உள்ளனர். அதனால், இந்திய தம்பதியின் விவாகரத்து மனு மீது, வெளிநாட்டு நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. இருவருக்கும், ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்துள்ளது. 

ஹிந்து திருமண சட்டத்தின்படி, மனு மீது விசாரணை நடத்த, துபாய் கோர்ட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

துபாய் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்க முடியாது என்பதால், இந்த மனுவை, மும்பை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கக் கூடாது. அதனால், இந்த மனு மீது, குடும்ப நல நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்.
அடுத்த மாதம், 18ல் நடக்கும் விசாரணையின் போது, குடும்ப நல நீதிமன்றத்தில், தம்பதி ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மாணவர்களுக்கு, 'ஒயிட்னர்' விற்றால் சிறை : போதைக்கு எதிராக வரிந்து கட்டும் போலீஸ்

பதிவு செய்த நாள்21ஆக
2017
01:24

நரம்பு மண்டலத்தை செயல் இழக்கச் செய்யும், 'ஒயிட்னர்' போதைக்கு, மாணவர்கள் அடிமையாகி வருவதால், மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டுக்கு, போலீசார் தயாராகி வருகின்றனர். தடையை மீறி விற்போரை, சிறையில் தள்ள திட்டமிட்டுள்ளனர்.

அதிகரிப்பு : பள்ளி, கல்லுாரிவகுப்புகளை, 'கட்' அடிக்கும், ஒழுங்கீன மாணவர்கள், போதை பழக்கத்துக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. காகிதத்தில், எழுத்தை அழிக்க பயன்படுத்தும், வெள்ளை நிற திரவ, ஒயிட்னரை, கைக்குட்டையில் தேய்த்து, நுகர்ந்து, போதை ஏற்றி, வாழ்வை சீரழித்துக் கொள்கின்றனர். ஸ்டேஷனரி கடைகளில், 15 மி.லி., கொள்ளவு உள்ள ஒயிட்னர், குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதில், ஹைட்ரோகார்பன், ஆல்கஹால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இதை அதிகம் நுகர்ந்தால், நான்கு மணி நேரமாவது போதை இருக்கும் என, கூறப்படுகிறது. நரம்பு மண்டலம், மூளை, கிட்னியை செயல் இழக்கச்செய்யும், ஒயிட்னர் போதைக்கு, சில ஆண்டுகள் முன், கோவையைச் சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர் பலியானார். ஒயிட்னர் போதைக்கு அடிமையாகும், மாணவர்களின் எண்ணிக்கை, சமீபத்தில் அதிகரித்துள்ளது. இவர்கள், 'திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்' என, போலீசார் கூறுகின்றனர்.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 'ஒயிட்னர்' போதைக்கு, பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் உள்ளிட்ட இளம் தலைமுறையினர், அடிமையாகி வருகின்றனர். 

இதனால், தமிழகத்தில், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு, ஒயிட்னர் விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல கடைகளில், தடையை மீறி, ஒயிட்னர் விற்பது தெரிய வந்துள்ளது. இதனால், உளவு போலீசார் வாயிலாக, ரகசிய கண்காணிப்பு நடக்கிறது. முதற்கட்டமாக, கடைகளில், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.

அதிரடி 'ரெய்டு' : இதைத் தொடர்ந்து, தடையை மீறி, இளம் தலைமுறையினருக்கு, ஒயிட்னர் விற்கும் கடைகளில் அதிரடி, 'ரெய்டு' நடத்த உள்ளோம். இந்த குற்றச்செயலில் ஈடுபடுவோர், ஜாமினில் வெளிவராத வகையில்,இந்திய தண்டனை சட்டம், 328 பிரிவின் கீழ் கைதுசெய்யப்படுவர். மனித உடலை பாதிக்கும் என, தெரிந்தே, 'ஒயிட்னர்' விற்பனையில் ஈடுபட்டதால், அவர்களுக்கு, மூன்றில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரைதண்டனை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

- நமது நிருபர் -

விழுப்புரம் மாவட்டத்தில் 2 விபத்துகளில் 4 பேர் பலி

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:34

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த இரண்டு விபத்துகளில், இரண்டு மாணவர்கள் உட்பட, நான்கு பேர் உயிரிழந்தனர். தஞ்சையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 35; சிங்கப்பூரில், தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த, சமீபத்தில், சொந்த ஊர் வந்தார். உறவினர்களுக்கு காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க, 'டாடா இண்டிகா' வாடகை காரில், நேற்று முன்தினம் இரவு, சென்னை புறப்பட்டார். காரை, தஞ்சாவூரைச் சேர்ந்த, 21 வயது டிரைவர் ஓட்டினார். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், சலவாதி சந்திப்பில், 'பிரேக் டவுண்' ஆகி நின்றிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில், கிருஷ்ணமூர்த்தி, கார் டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். போலீசார் வழக்கு பதிந்து, கரூரைச் சேர்ந்த, 30 வயது லாரி டிரைவரை கைது செய்தனர்.

மற்றொரு விபத்து : கோவையைச் சேர்ந்தவர் பிரவீன், 21; அதே பகுதியில் உள்ள குமரகுரு டெக்ஸ்டைல்ஸ் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், உடன் படிக்கும், ஐந்து நண்பர்களுடன், இனோவா காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.அனைவரும், தனியார் விடுதியில் தங்கினர். நேற்று முன்தினம் நள்ளிரவு, விடுதியில் இருந்து காரில், இ.சி.ஆர்., சாலையில் மரக்காணம் சென்று, புதுச்சேரி திரும்பினர். பிரவீனின், 21 வயது நண்பர் காரை ஓட்டினார். கோட்டக்குப்பம் அடுத்த மஞ்சங்குப்பம் அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், பிரவீன், காரை ஓட்டிய நண்பர் என, இருவர் இறந்தனர்; படுகாயம் அடைந்த நான்கு மாணவர்கள், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரூ.1.14 கோடி பழைய ரூபாய் நோட்டு பறிமுதல் : 2 பேர் கைது

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:17

மதுரை: மதுரையில் 1.14 கோடி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் அருணாசலம் தலைமையில் கென்னட் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடந்தது. அப்போது டூ வீலரில் வந்த அண்ணாநகர் பாலாஜி, வண்டியூர் பிரபு ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பேசியதால் அவர்களை போலீசார் சோதனையிட்டபோது டூ வீலர் டேங்க் பையுக்குள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து பாலாஜியின் அண்ணாநகர் வீட்டில் சோதனையிட்டபோது 1.14 கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பா?

போலீசார் கூறியதாவது: இவர்கள் வைத்திருந்த பணம் வெளிநாடு வாழ் இந்தியர்களுடையதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பழைய நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின், வெளிநாட்டு இந்தியர்களின் பணம் ரிசர்வ் வங்கியில் மாற்றப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில், பலரது பணத்தை இவர்கள் கமிஷன் அடிப்படையில் புதிய நோட்டுக்களாக மாற்றித்தந்துள்ளனரா என விசாரணை நடத்தி வருகிறோம். ஒரு கோடிக்கும் மேல் பணம் வைத்து மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
ஏன்?  உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது...ரயில்வே அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்




புதுடில்லி:'உ.பி.,மாநிலம், முசாபர்நகர் அருகே, ரயில் இருப்புப் பாதை பராமரிப்பு பணியால், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்' என, ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.



ஒடிசா மாநிலம் புரியில் இருந்து, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நோக்கிச் சென்ற உத்கல் எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம், உ.பி.,யின், முசாபர்நகர் அருகே, தடம் புரண்டு விபத்துக் குள்ளானது.இதில், 23 பயணியர் உயிரிழந்தனர்; 97 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; அவர்களில், 26 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது:ரயில் விபத்து நடந்த இடத்தில், முதற்கட்ட விசாரணை நடந்தது. இதில், ரயில் இருப்புப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரா மரிப்பு பணியால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.விபத்து நடந்த இடத்தில், பராமரிப்பு பணியில் பயன்படுத்தப்படும் சில சாதனங்கள் காணப்பட்டன. அந்த பகுதியில், தக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ள பட வில்லை. ஆடியோ பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையின் அறிக்கை, ரயில்வே அமைச்சகத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில், குழு அமைக் கப் பட்டுள்ளது. இக்குழு, 21ல், விசாரணையை துவங்குகிறது.தவறு இழைத்தவர்களுக்கு எதிராக, ரயில்வே அமைச்சர் உத்தரவுப்டி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்து நடந்த இருப்புப் பாதையில், எந்த வகையில் பராமரிப்பு பணி நடந்தது என்பது பற்றி, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து, விரிவான அறிக்கை சமர்ப்பிப்பார். ரயில்வே விதிகள், முறைப் படி பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும், அவர் ஆய்வு செய்வார்.

சில நேரங்களில், அவசரம் கருதி, உடனடியாக சில பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில், பராமரிப்பு பணி நடந்திருந்தால், அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பெட்டிகளை அகற்ற ராட்சத கிரேன்கள்

:முசாபர்நகர் அருகே,விபத்து நடந்த பாதையை சரிசெய்யும் பணிகளில், ஏராளமானஊழியர் கள் ஈடுபட்டுள்ளனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்ற, நேற்று காலை முதல், 140 டன் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின் றன.விபத்தில் நொறுங்கிய ரயில் பெட்டிகளில், உயிருக்கு போராடுபவர்களை யும், இறந்தவர் களின் உடல் களையும் மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மீட்புப் பணி களில், தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மீட்புக்கு முன்னுரிமை

மீட்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.'டுவிட்டர்' சமூக வலை தளத்தில் நேற்று, அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:ரயில் விபத்து நடந்த இடத் தில் மீட்பு பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். தடம் புரண்ட, 13 பெட்டிகளில், ஏழு, அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந் தவர்களுக்கு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ரயில்வே வாரிய தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கான பொறுப்பை, அவர்கள் ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு, 3.5 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாய், சிறு காயம் அடைந்தோ ருக்கு, 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.இவ்வாறு சுரேஷ் பிரபு கூறினார்.
வருமான வரி விலக்கு கோரி தீர்மானம்

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:22

ராமநாதபுரம்:ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட ஓய்வூதியர் நல உரிமைச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் பாண்டியன் அறிக்கை, தீர்மானங்களை வாசித்தார். பொருளாளர் சுவாமிநாதன் வரவு -செலவு திட்ட அறிக்கை சமர்ப்பித்தார். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கவும், 7 வது ஊதியக்குழு அறிக்கையை விரைவில் அமல் படுத்த வேண்டும். என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணை செயலாளர் பெர்னார்ட் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.
ரயில்வே ஸ்டேஷனை சுத்தப்படுத்திய மாணவர்கள்

பதிவு செய்த நாள்20ஆக
2017
23:02

விருதுநகர்:விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் சுத்தம், ரயில்வே நிலைய சுத்தம், ரயில்வே சுற்றுப்புற சுத்தத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 16 முதல் 31 வரை துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியைச் சேர்ந்த 25 என்.சி.சி. மாணவர்களும், 25 என்.எஸ்.எஸ். மாணவர்களும் கலந்து கொண்டு ரயில்வே ஸ்டேஷனை சுத்தப்படுத்தினர். கல்லுாரி பேராசிரியர் அழகுமணி, ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் சிவகுருநாதன், முதன்மை சுகாதார இன்ஸ்பெக்டர் முருகன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வினோத்குமார், நேரு யுகேந்திரா திட்ட இயக்குனர் ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களை தரிசிக்க சிலம்புவில் வரும் 3 மாவட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்20ஆக
2017
22:39


ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள பல்வேறு கோயில்களில் சுவாமிதரிசனம் செய்ய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வசதியாக இருப்பதால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வந்துசெல்வது அதிகரித்துள்ளது. 

விருதுநகர் மாவட்ட மேற்கு நகரங்களாக இருக்கும் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்தது. 

இந்நிலையில், மானாமதுரை வரை வந்து சென்னை சென்ற சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த சில மாதம் முன் அருப்புகோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாக இந்த ரயில் இயக்கப்படுவதால் இந்த மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் ஒருநாள் சுற்றுலாவாக ஸ்ரீவில்லிபுத்துார் வரத் துவங்கியுள்ளனர். இதன்படி தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்துார், சிவகங்கை, மானாமதுரை ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ராமநாதபுரம் பகுதி பக்தர்கள் சிலம்பு ரயிலில் ஏறி காலை 8 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் வந்துவிடுகின்றனர்.

ஆட்டோக்களில் ஆண்டாள் கோயில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். மதியம் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் அன்னதானத்தில் சாப்பிட்டுவிட்டு பின்னர் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேசனில் ஓய்வு எடுத்து விட்டு, மாலை 5:30 மணிக்கு வரும் சிலம்பு ரயிலில், வீடு செல்கின்றனர். பயண நேரம் குறைவு மற்றும் குறைந்த கட்டணத்தில் சிவகங்கை உட்பட சுற்று மாவட்ட பயணிகள் தற்போது ஸ்ரீவில்லிபுத்துாருக்கு ஒருநாள் சுற்றுலாவாக வந்துசெல்ல வசதியாக சிலம்பு ரயில் போக்குவரத்து உள்ளது. இதனை தினசரி இயக்கினால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு அதிகம் வருவர். ஸ்ரீவில்லிபுத்துார் சுற்றுலா மேம்படும். 

பயணிகளுக்கு தேவையான கூடுதல் அடிப்படை வசதிகள் செய்ய அறநிலையத்துறை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய வம்சாவளியினர் தேர்தலில் பிரசாரம் செய்யலாமா?
பதிவு செய்த நாள்21ஆக
2017
01:00

புதுடில்லி: 'வெளிநாடுகளில் வாழும், இந்திய வம்சாவளியினர், லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், பிரசாரம் செய்வது, 'விசா' விதிகளை மீறும் செயலா' என, வெளியுறவு அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பி உள்ளது.

சமீபத்தில், பஞ்சாப் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அப்போது, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினர், பிரசாரத்தில் ஈடுபட்டனர்; இது, விசா விதிகளை மீறும் செயலா என, தலைமை தேர்தல் கமிஷனுக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சட்ட அமைச்சகத்திடம், தலைமை தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலக உயரதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது:
பஞ்சாப் சட்டசபை தேர்தலில், வெளிநாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பிரசாரம் செய்தனர். அது பற்றி, இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், அது, விசா விதிமீறல் ஆகாதா என, விளக்கம் கேட்டு, மாநில தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விஷயத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அல்லது தேர்தல் விதிகளில் எதுவும் கூறப்படவில்லை. எனவே, வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சட்ட அமைச்சகத்திடம், வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது. சட்ட அமைச்சகம், தக்க பதிலை இன்னும் அளிக்கவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
நாளை அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பூட்டு::போராட்டத்தை முடக்க அதிகாரிகள் முடிவு

பதிவு செய்த நாள்
ஆக 21,2017 01:16


மதுரை:மதுரை மாவட்டத்தில், 'குறைந்தபட்சம் 80 சதவீதம் அரசு பள்ளிகளை பூட்டி ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்,' என ஆசிரியர் சங்கங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பள்ளிகளை பூட்டும் திட்டத்தை முறியடிக்க கல்வி அதிகாரிகளும் களத்தில் றங்கியுள்ளனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் நாளை (ஆக.,22) வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

'போராட்டத்தில் பங்கேற்றால் ஒரு நாள் சம்பளப் பிடித்தம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என அரசு எச்சரித்துள்ளது. இதற்கிடையே 'இப்போது இல்லை; இனி எப்போதும் இல்லை' என்ற புதிய கோஷத்துடன் அனைத்து 'ஆசிரியர்களும் கட்டாயம் போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்,' என எப்போதும் இல்லாத வகையில் ஒன்றிய மற்றும் வட்டார அளவில் ஆசிரியர் சங்கங்கள் (ஜாக்டோ) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறது.இதற்கிடையே நேற்று நடந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், 'பள்ளி சாவி தலைமையாசிரியரிடம் தான் உள்ளன. அனைத்து தொடக்க, உயர்நிலை, மேல்நிலை தலைமையாசிரியர்கள் யாரும் பள்ளியை திறக்க வேண்டாம்,' என முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ஜாக்டோ ஜியோ' போராட்ட ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:மதுரை மாவட்டத்தில் நாளை நடக்கும் போராட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் என மொத்தம் 22 சங்கங்கள் பங்கேற்கின்றன. சில சங்கங்கள் தார்மீக ஆதரவு மட்டும் தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்காத முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். அதனால் பாதிப்பு ஏற்படாது. மாவட்டத்தில் குறைந்தபட்சம் 80 சதவீதம் பள்ளிகளை பூட்டுப் போட்டு பூட்டி விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகுதி காண் பருவம் முடிக்காத சில ஆசிரியர்கள் பணிக்கு செல்லலாம். அதை தவிர்த்து ஆசிரியர்கள் பெரும்பாலும் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர், என்றார்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "போராட்டங்களில் பங்கேற்கும் ஆசிரியர் விபரங்களை முதல் நாளே தெரிவிக்க வலியுறுத்தியுள்ளோம். பள்ளிக்கு தலைமையாசிரியர்கள் வராதபட்சத்தில் அடுத்த நிலையில் உள்ள ஆசிரியரிடம் அவர்கள் சாவியை ஒப்படைக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தால் ஒரு பள்ளி கூட மூடப்படும் சூழ்நிலை ஏற்படாது. உரிய மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.




Advertisement
10 நாட்களில் மாணவர் சேர்க்கைமருத்துவ கவுன்சில் கெடுபிடி

'நீட்' தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில், வரும், 31க் குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, இந்திய மருத்துவ கவுன்சில், 'கெடு' விதித்து உள்ளது.





மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இந்தத் தேர்வின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும், இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.'நீட்' தேர்விலில்இருந்து தமிழகத்திற்கு விலக்கு தர, உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது. அதனால், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்டு, தமிழக அரசு புதிய அவசர சட்டம் நிறைவேற்றி, மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில்,மருத்துவ மாணவர் சேர்க்கையை தாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில், புதிய வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கில்,மத்திய - மாநில அரசுகள் பதில் தர, உச்சநீதிமன்றம் .

இதற்கிடையில், வரும், 31க்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கும்படி,தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உத்தர விட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன், அனைத்து மாநிலங்களிலும், மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதால், தமிழகத்திலும்,மாணவர் சேர்க்கையை உரியகாலக்கெடுவில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதனால், இன்னும், 10 நாட்களில் மாணவர்சேர்க்கையை முடிக்க வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'நீட்' தேர்வு வழக்கு, உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் சார்பில், கூடுதல்அவகாசம் கேட்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். - நமது நிருபர் -
சிதறும் துதிபாடிகள் தினகரன் அதிர்ச்சி
இரு அணிகள் இணைப்பு பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதால், தினகரன் அணியிலிருந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமி அணிக்கு ஓட்டம் பிடித்துள்ளதால், தினகரன் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.





சமீபத்தில், மதுரை மேலுாரில், தினகரன் அணி நடத்திய, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 20 எம்.எல்.ஏ.,க்கள், ஆறு எம்.பி.,க்கள் பங்கேற் றனர். தன்னிடம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களின் மூலம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு, நெருக்கடி தரலாம் என, தினகரன் கருதினார்.

நேற்று முன்தினம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், அவரது அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 12 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.இரண்டாவது நாளாக, நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,

எம்.எல்.ஏ.,க் களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வேலுாரில், அரசுநடத்தும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, நேற்று நடந் தது. இதில், தினகரன் அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க் கள் ஆம்பூர் பாலசுப்பிரமணி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். இதனால், தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பறிபோகிறது தினகரன் ஆதரவு மந்திரிகளின் பதவி

அ.தி.மு.க.,வின் பழனிசாமி அணியும் பன்னீர் அணியும் மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடத்தில் இன்று மாலை இணையவுள்ளன. அப்போது ஒற்று மைக்கான உறுதிமொழியும் எடுக்கப்படுகிறது. கட்சியை வழிநடத்த நியமிக்கப்பட உள்ள, வழி காட்டும் குழுவில், முதல்வர் பழனிசாமி அணி தரப் பில், அவரும், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோரும் இடம் பெற உள்ளனர்.

பன்னீர் தரப்பில், அவரும், முன்னாள் அமைச்சர்கள், முனுசாமியும், சண்முகநாதனும் இடம்பெறுகின்ற னர்.முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர உள்ள தால், பன்னீர் செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியுடன் நிதி, பொதுப்பணித்துறை இலாகாக்கள் வழங்கப்பட உள்ளன. அவரது அணியை சேர்ந்த செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு,

முக்கிய இலாகாக்களுடன் கூடிய, அமைச்சர் பதவி தரப்படுகிறது. பன்னீர் அணியினருக்கு, முக்கிய இலாக்காக்கள் தர வேண்டியுள்ளதால், தினகரன் ஆதரவு அமைச்சர்களின் இலாக்காக் களை பறிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன்படி, ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், சரோஜா, வளர்மதி ஆகியோர் மீது உள்ள அதிருப்தியால், அவர்களிடம் உள்ள இலாகாக் களை மாற்றவும் முடிவாகி உள்ளது.

இரு அணிகளிலும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும், எம்.எல்.ஏ.,க் களை திருப்திபடுத்த, தலா, 10 பேருக்கு, வாரிய தலைவர் பதவியும் வழங்கப்பட உள்ளது.நீண்ட இழு பறிக்குப்பின், இரு அணிகளின் இணைப்பு உறுதியாகி விட்டதால், தினகரன் ஆதரவாளர் கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். - நமது நிருபர் -

AIDMK MERGER

இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சில், சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளதால், அமாவாசை தின மான இன்று, முதல்வர் பழனிசாமி திட்டப்படி, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைகின் றன. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு, அமைச்சரவையில் முக்கிய இலாகா தர திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்காக, தினகரன் ஆதரவு அமைச்சர்கள் சிலரின் இலாகாக்களை பறிக்க, பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.




இணைப்பிற்கு முன், கட்சியின் மாநில நிர்வாகி கள் கூடி, சசிகலாவை பொதுச்செயலர் பதவி யில் இருந்து நீக்கும் தீர்மானத்தை நிறை வேற்ற உள்ளனர்.ஜெ., மறைவுக்குப் பின், முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட் டது. இரு அணிகளையும், இணைக்கும் முயற்சிகள் பல மாதங்களாக தொடர்ந்தன.

ஆனாலும், பன்னீர் தரப்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளால், இணைப்பில் இழுபறி நீடித் தது. சமீபத்தில், பன்னீர் விதித்த நிபந்தனை களை நிறைவேற்ற, முதல்வர் பழனிசாமி தரப்பு சம்மதித்தது; அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.இதையடுத்து, 18ம் தேதி, இரு அணியினரும் முக்கிய ஆலோசனை நடத்தி னர்.சென்னை, மெரினாவில் உள்ள, ஜெ., நினை விடத்தில், இரண்டு அணிகளின் இணைப்பு நடக்கும் என்ற, தகவலும் பரவியது.ஆனால்,


அணிகள் இணைப்புக்கு பின், கட்சியை வழி நடத்தும் குழுவுக்கு யார் தலைவர் என்ப தில், அதிகார போட்டி நிலவி யதால், இணைப்பு தடைபட்டது.

இருப்பினும், இரண்டு தரப்பிலும் ரகசிய பேச்சு நீடித்தது. இதில், 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், ஜெயலலிதாவால் நியமிக் கப்பட்ட ஐவர் குழு போல, கட்சியை வழி நடந்த, இரண்டு அணிகள் சார்பிலும், ஏழு பேர் குழு அமைப்பது என்றும், குழுவின் தலைவர் பொறுப்பை, பன்னீ ர் செல்வத்துக்கு தருவது என்றும் தீர் மானிக்கப் பட்டது. அத்துடன், பன்னீர் ஆதரவாளர்களுக்கு, அமைச்சரவையில், முக்கிய இலாகாக்கள் தரவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இரு அணிகளும் ஒன்றுபட்டு, அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததும், உட் கட்சி தேர்தலை நடத்தி, பொதுச்செயலர் உள் ளிட்ட நிர்வாகி களை தேர்ந்தெடுக்கவும் திட்ட மிடப்பட்டது. இப்படி பேச்சில், சுமுக முடிவு எட்டப்பட்டதால், அமாவாசை தினமான இன்று, 'கிளைமாக்ஸ்' காட்சியாக, பழனிசாமி திட்டப் படி, இரு அணிகளும் இணைகின்றன.

சசிகலாவுக்கு 'கல்தா'

அதற்கு முன், இன்று காலை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள்கூட்டம் நடக்கிறது. அதில், தற்காலிக பொதுச் செயலர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந் தும், சசிகலாவை நீக்கும் தீர்மானம் நிறை வேற் றப்படுகிறது.அதன்பின், மாலையில், மெரினா வில் உள்ள, ஜெ., நினைவிடத்தில், இரு அணி களின் இணைப்பு நடக்கிறது. அப்போது,ஒற்று மைக்கான உறுதி மொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக, கட்சி வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன.கட்சியை வழிநடத்த நியமிக்கப்பட உள்ள, வழிகாட்டும் குழுவில், முதல்வர் பழனிசாமி அணி தரப் பில், அவரும், அமைச்சர்கள் செங்கோட்டை யன், சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோ ரும் இடம் பெற உள்ளனர். பன்னீர் தரப்பில், அவரும், முன்னாள் அமைச்சர்கள், முனுசாமி யும், சண்முக நாதனும் இடம் பெறுகின்றனர்.

முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர உள்ள தால், பன்னீர் செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியுடன் நிதி, பொதுப்பணித்துறை இலா காக்கள் வழங்கப்பட உள்ளன.அவரது அணியை சேர்ந்த செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு, முக்கிய இலாகாக்களுடன் கூடிய, அமைச்சர் பதவி தரப்படுகிறது.

இலாகா பறிப்பு

பன்னீர் அணியினருக்கு, முக்கிய இலாக்காக் கள் தர வேண்டியுள்ளதால், தினகரன் ஆதரவுஅமைச்சர்களின் இலாக்காக்களை பறிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன்படி, ராதா கிருஷ்ணன், விஜயபாஸ்கர், சரோஜா, வளர் மதி ஆகியோர் மீது உள்ள அதிருப்தியால், அவர்களிடம் உள்ள இலாகாக்களை மாற்றவும் முடிவாகி உள்ளது.இரு அணிகளிலும், அமைச் சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடை யும், எம்.எல்.ஏ.,க்களை திருப்திபடுத்த, தலா, 10 பேருக்கு, வாரியத் தலைவர் பதவியும் வழங்கப்பட உள்ளது.

நீண்ட இழுபறிக்குப்பின், இரு அணிகளின் இணைப்பு உறுதியாகி விட்டதால், தினகரன்ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள னர். தினகரனுக்கும், இது பெரும் பின்னடை வதாக அமையும் என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -

Sunday, August 20, 2017

Lost a low-end mobile phone? No one will probably go looking for it

Cost of probe is often many times the cost of phone

If your mobile phone is stolen, chances are unless it is a high-end device, the police are not going to be in a hurry to catch the thief. Tracking down low-priced mobile phones is the last priority for the police, for two reasons.
More often than not, the cost incurred and manpower diverted to recover the phone — especially if it’s found operational several hundred kilometres away from the city — is often 10 times the actual price of the device in the market. Secondly, police officers say, most of the victims usually just want an acknowledgement on the lost phone so that they can get a duplicate SIM.
“At the jurisdictional level, we work on priority basis. With limited resources, it comes down to prioritising crime and focussing on serious cases. More often than not, tracking down a mobile phone needs as many men as a murder or house break-in case,” a police officer said.
Rise in thefts
And while ignoring such complaints has reduced the workload on the police, it has resulted in a rise in mobile phone thefts in the city. The lethargic attitude of the police is giving a carte blanche to thieves who find that they are getting away with stealing inexpensive phones that can easily be disposed of later.
“With technological advancement, it is not that we can’t track down a stolen phone. It is just a matter of feasibility,” another police officer said. A lot also depends on whether the complainant pursues the case actively with the police.
However, the police feel service providers should have technology in place to deactivate a handset if it is stolen or being misused.
Only Allopaths can prescribe Modern Medicines – Allahabad High Court  “Medical Practitioners enrolled in one branch, not allowed to practice in other Branch..

” A Decision that may be welcomed by Allopathic Practitioners, but not by Homeopaths… The Division Bench of Allahabad high Court in its recently reported judgment in AIR 2017 ALL 105, while dismissing the Petition filed by Homeopathic Surgeon Associ...

Read more at Medical Dialogues: Only Allopaths can prescribe Modern Medicines – Allahabad High Court http://medicaldialogues.in/only-allopaths-can-prescribe-modern-medicines-allahabad-high-court/
Copyright 2017@ Medical Dialogues
Now, doctors cannot eat PAAN during duty hours

 Uttar Pradesh: Doctors will not eat paan during duty hours. Yes, This is a latest of the directives issued by the UP government for its medical practitioners. The directive comes after the state health minister, Siddharth Nath Singh was utterly disgusted by one of the chief medical officers, chewing pan and simultaneously talking ...

Read more at Medical Dialogues: Now, doctors cannot eat PAAN during duty hours http://medicaldialogues.in/now-doctors-cannot-eat-paan-during-duty-hours/
Copyright 2017@ Medical Dialogues

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...