Monday, August 21, 2017

கல்லூரியில் தூய்மை : யு.ஜி.சி., உத்தரவு

பதிவு செய்த நாள்21ஆக
2017
01:10

கோவை: கல்லுாரி, பல்கலைகளில், 'ஸ்வச்தா பக்வாடா' எனும், துாய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, செப்., 1 முதல், 15ம் தேதி வரை நடத்த, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

 'துாய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, துாய்மை விழிப்புணர்வை, மாணவர்களிடம் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கும் எடுத்து செல்ல, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு, உத்தரவிட்டு உள்ளது.

இத்திட்டத்தில், மாணவர்கள், செப்., 1 முதல், கல்லுாரி மற்றும் விடுதியை சுத்தம் செய்தல், பசுமை வளாகம் பேணுதல், கிராமப்புறங்களுக்கு சென்று துாய்மையின் மகத்துவத்தை எடுத்துரைத்தல் போன்ற சேவைகளை செய்ய வேண்டும். சுவர்களில் வாசகங்கள் எழுதுதல், மருத்துவமனைகளில் சுகாதாரம், மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தும் முறைகளை பார்வையிடுதல் போன்ற நிகழ்ச்சிகளில், செப்., 15 வரை, ஆசிரியர் மற்றும் மாணவர் குழுக்கள், பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 'துாய்மை இந்தியாவை உருவாக்க, நான் என்ன செய்ய வேண்டும்' எனும் தலைப்பில், குறும்படம் மற்றும் கட்டுரை போட்டியையும், பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்கான பதிவுக்கு, செப்., 8 கடைசி நாள்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...