Monday, August 28, 2017

350 ஆண்டுகளில் இல்லாத மழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் டெக்சாஸ்!

இரா. குருபிரசாத்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.




டெக்சாஸ் மாகாணத்தின் ராக்ஃபோர்ட் நகர் அருகில் கரையைக் கடந்த ஹார்வி புயலால் சுமார் 210 கி.மீ. (130 மைல்கள்) வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்தப் புயல் காரணமாக, டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. பலத்த காற்றுடன் மழைப்பொழிவும் இருந்ததால், பல இடங்களில் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், டெக்சாஸ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


குறிப்பாக, ஹூஸ்டன் நகரில் கடுமையான மழை பெய்துவருகிறது. அங்கு, சாலைகளில் இரண்டடுக்கு நீர் தேங்கியுள்ளது. இதுவரை மழை வெள்ளம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவம் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது




இதுகுறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "டெக்சாஸ் மாகாணத்தில் 350 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துவருகிறது. ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூஸ்டன் நகரில், மேலும் மூன்று நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அங்கு என்ன நடக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024