Wednesday, August 30, 2017


சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் செப். 23ல் வாக்குப்பதிவு: மலாய் இனத்தவர் மட்டுமே போட்டி
DINAKARAN


2017-08-29@ 01:52:26




சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால், அடுத்த மாதம் 23ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. சிங்கப்பூர் அதிபராக உள்ள டோனி டான் கெங்யாம் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிகிறது. புதிய அதிபருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு சுழற்சி முறையில் எல்லா பிரிவினருக்கும் அதிபர் பதவி வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, இந்நாட்டின் அடுத்த அதிபர் மலாய் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதிபர் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப், தொழிலதிபர் முகமது சல்லா மாரிகான் மற்றும் பரித்கான் கைம்கான் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

இவர்கள் அனைவருமே மலாய் இனத்தை சேர்ந்தவர்கள். இத்தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் 23ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஒரே வேட்பாளர் மட்டும் போட்டியிட்டால், வேட்புமனு தாக்கல் செய்யப்படும் செப்டம்பர் 13ம் தேதியே அவர் அதிபராக அறிவிக்கப்படுவார். இத்தேர்தலில் ஹலிமா வெற்றி பெற்றால் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார். அதேபோல், தேர்தலில் வெற்றி பெறுபவர் சிங்கப்பூரின் 2வது மலாய் இன அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024