Thursday, August 31, 2017

'அரசு ,மீது, நம்பிக்கை, ஓட்டெடுப்பை ,நடத்த, கவர்னர், மறுப்பு
நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட முடியாது' என,கவர்னர் வித்யாசாகர் ராவ், திட்டவட்டமாக மறுத்து விட்டதால், ஏமாற்றமடைந்த எதிர்க் கட்சிகள், இன்று டில்லியில், ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளன.





முன்னாள் முதல்வர், ஜெ., இறப்புக்குப் பின், மூன்றணிகளாக இருந்த, அ.தி.மு.க., இப்போது, பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரண்டாக உள்ளது. ஆட்சியைப் பிடிக்க, தினகரன், தீவிரமாக முயன்று வருகிறார்.

'முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என, தினகரன் அணியைச் சேர்ந்த, 19 எம்.எல். ஏ.,க்கள், சமீபத்தில், கவர்னரிடம் கடிதம் அளித்தனர்.அதையடுத்து, 'சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., காங்., முஸ்லிம் லீக் தலைவர்கள், கவர்னர் வித்யசாகர் ராவை சந்தித்து வலியுறுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை, ராஜ்பவனில், கவர்னர் வித்யாசாகர் ராவை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்தனர். 'சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு,

முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்' என்று அவர்களும், கவர்னரிடம் வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க, கவர்னர் மறுத்து விட்டதாக, அக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

திருமாவளவன்: தினகரன் ஆதரவு, எம்.எல். ஏ.,க்கள், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத் தெரி வித்துள்ளனர். எனவே,'சட்டசபையை, உடனே கூட்ட வேண்டும்' என, வலியுறுத்தினோம்.

அதற்கு கவர்னர், 'தற்போதைய சூழலில், சட்டப்படி நடவடிக்கைஎடுக்க முடியாது. அ.தி. மு.க., இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. 19 எம்.எல்.ஏ.,க்களும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ள னரே தவிர, கட்சித் தாவலில் ஈடுபடவில்லை. 'எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரை நீக்குவதாக, கட்சி யும் அறிவிக்கவில்லை. எனவே அவர்களும், அ.தி.மு.க.,வினர் என்றே கருத வேண்டியது உள்ளது என்பதால், இதில் நான் தலையிட முடியாது' என, கூறி விட்டார்.

முத்தரசன்: இங்கே நடந்தது போல் ஒரு பிரச்னை, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி யில் நடந்திருந்தால், அங்குள்ள கவர்னர்கள், வேறு விதமாக கையாண்டிருப்பர். தமிழகத் தில், ஜனநாயகப் படுகொலை நடந்து கொண்டி ருக்கிறது. இதை, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஜவாஹிருல்லா: 'இதில், நான் தலையிட முடியாது' என, கவர்னர் கூறினார். 'நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாங்கள் கூறினோம். அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற வேண்டியது, கவர்னரின் கடமை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவர்னரின் நடவடிக்கை, அ.தி.மு.க.,வுக்கு ,தண்டனை அளிப்பது போல் இருக்கும் என்றும் அவர்களுக்குள் பிளவு வலுப்படும் என்றும் கருதி இருந்த, எதிர்க்கட்சியினர், நேற்றைய அரசியல் நகர்வால், அதிருப்தி அடைந்தன. இதையடுத்து, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், எம்.பி.,க்கள், இன்று டில்லி யில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து முறையிட முடிவு செய்து உள்ளனர்.

எம்.எல்.ஏ.,க்களுக்குபழனிசாமி திடீர் அழைப்பு!

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், முதல்வர் பழனிசாமி, திடீர் அழைப்பு விடுத்து உள்ளார்.அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனி சாமி, பன்னீர்செல்வம் அணிகள், ஒன்றாக இணைந்தன. இதற்கு, தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு, 21 எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு அளித்துள்ளனர். குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், சசிகலா, தினகரன் இருவரையும், கட்சியில் இருந்து நீக்க, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில், எதிர்பார்த்த அளவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை; 80 எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே பங்கேற்றனர். அதனால், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரையும் அழைத்து, அவர்களிடம் பேச, முதல்வர் திட்டமிட்டுள் ளார். அதற்காக, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் இன்று சென்னை வரும்படி தகவல் அனுப்பப் பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட அமைச்சர் முன் னிலையில், எம்.எல்.ஏ.,க்களிடம் ஆலோசனை நடத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், முதல்வர் முடிவுசெய்துள்ள தாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024