Tuesday, August 29, 2017

இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக வாசகர் எஸ்.அன்பழகன் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து பல்வேறு பணியின் காரணமாக, முன்பை விட தற்போது அதிக அளவிலான மக்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், விமான நிலையத்தை இணைக்கும் வகையில் விரைவு ரயில் வசதி இல்லை. விரைவு ரயில்கள் மூலம் வருவோர் தாம்பரம் அல்லது எழும்பூர் ரயில் நிலையங்களுக்குச் சென்று பிறகு மின்சார ரயில் மூலம் விமான நிலையத்துக்கு வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சென்னை விமான நிலையம் அருகே திரிசூலம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்று அறிவித்தது. இதற்கான கட்டமைப்பு பணிகளும் நடந்து கொண்டிருந்தன. ஆனால், அத்திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது. இது, விரைவு ரயில்களில் வந்து, விமான நிலையத்துக்கு வருவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அனைத்து விரைவு ரயில்களையும் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘விரைவு ரயில்களின் புதிய நிறுத்தம் குறித்து நாங்கள் முடிவு எடுக்க முடியாது. இது தொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு ஏற்கெனவே கோரிக்கை அனுப்பியுள்ளோம்’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024