Tuesday, August 29, 2017

ஹார்வி புயல் பாதிப்பு 200 இந்திய மாணவர்கள் ஹூஸ்டனில் தத்தளிப்பு: 2 பேர் கவலைக்கிடம்

2017-08-29@ 01:51:52



புதுடெல்லி : அமெரிக்காவை தாக்கிய ஹார்வி புயல் பாதிப்பில் சிக்கி 200 இந்திய மாணவர்கள் தவித்து வருகின்றனர். அமெரிக்காவின் பல இடங்களில் சேதத்தை விளைவித்துள்ள ஹார்வி புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் கடுமையான மழைப்பொழிவும் காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. அமெரிக்காவின் அலபாமா, ஜார்ஜியா, கென்டக்கி உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கிய பயங்கரமான புயலாக கருதப்படும் ஹார்வி புயலால், நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி டெக்சாசில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘ஹார்வி புயலால் ஹூஸ்டனில் தொடர்மழை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹூஸ்டன் பல்கலைக் கழகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், 200 இந்திய மாணவர்கள் கழுத்தளவு வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், ஷாலினி என்ற மாணவியும், நிகில் பாட்டியா என்ற மாணவரு்ம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக தூதரக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024