Wednesday, August 30, 2017

கிழக்கு தாம்பரத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
2017-08-30@ 01:25:12




தாம்பரம் : கிழக்கு தாம்பரத்தில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம், கணபதி நகர், சுத்தானந்த பாரதி தெருவை சேர்ந்தவர் ரவி சம்பத். இவரது மகன் ஸ்ரீராம் (30). இவர், திருவான்மியூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அருண் (32). இவர், சிறுசேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீராம் தனது வீட்டை பூட்டிவிட்டு சூளைமேட்டில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அருண், நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. மேலும், மர்மநபர்கள் ராம் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்து படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024