Tuesday, August 29, 2017

எல்லாம் ஒரு விளம்பரமே...! எம்.எல்.ஏ.க்கள் அடிக்கும் கூத்து!!!


புதுச்சேரி: புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 'கம்பு சுத்துவது, டீக்கடையில் டீ குடிப்பது,
பைக் ஓட்டுவது' போன்ற நடவடிக்கைகள், 'எல்லாம் ஒரு விளம்பரம் தான்' என்பது போன்று உள்ளது.

கொஞ்சம் ‛ஓவர்':

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், புதுச்சேரி அடுத்த, சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலர், தினமும் நடைபயிற்சி செல்வதை, வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் ஏழுமலை, கதிர்காமு, தங்கதுரை உள்ளிட்ட சிலரது நடவடிக்கைகள் கொஞ்சம், 'ஓவராக' உள்ளது.

போட்டி போட்டு 'போஸ்':

புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ஏழுமலை, தெருவோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார். 'நட்சத்திர ஓட்டலில் கிடைக்காத டீயா, வெளியில் கிடைத்து விடப்போகிறது' என, சிலர், 'கமென்ட்' அடித்தனர். இருந்தும், அவரது செயல் பத்திரிகை மற்றும் 'டிவி'க்களில் வந்ததால், மறுநாள் மேலும் சில, எம்.எல்.ஏ.,க்கள் சாலைக்கு வந்து விட்டனர். 'நாய்க்கு பிஸ்கட் போடுவது, டீ குடிப்பது, பேப்பர் படிப்பது' போன்ற நடவடிக்கையில் இறங்கி, பத்திரிகைகளுக்கு போட்டி போட்டு, 'போஸ்' கொடுத்தனர்.

'பந்தா':

சின்ன வீராம்பட்டினம் விடுதிக்கு நேற்று முன்தினம் திரும்பிய அவர்கள், மீண்டும், நடைபயிற்சி, யோகா, நீச்சல், கம்பு சுற்றுவது, பத்திரிகையாளர்களிடம் பைக் வாங்கி ஓட்டுவது என, பத்திரிகைகளுக்கு பல்வேறு கோணங்களில் போஸ் கொடுத்து அசத்தினர். துவக்கத்தில் ஓரிருவர் மட்டுமே, இந்த நடவடிக்கையில் இறங்க, தற்போது, 'பந்தா' காட்டும், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024