ஒரிஜினல் லைசென்ஸ்:ஐகோர்ட் கண்டிப்பு!
சென்னை:'வாகனங்களை ஓட்டும்போது, 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருப்பதில், என்ன பிரச்னை உள்ளது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 'அனைவரும் அசல் உரிமம் அவசியம் வைத்திருக்க வேண்டும்' எனவும், நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், 'வாகனங்கள் ஓட்டுபவர்கள், செப்., ௧ முதல், அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும்' என கூறிஇருந்தார்.
பட்டியலிடப்படவில்லை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி மனு தாக்கல் செய்தார். மனு, விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை . மனுவை அவசரமாக விசாரிக்கும்படி,தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், ராமசாமி கோரினார். அதற்கு நீதிபதிகள், 'விசாரணைக்கென பட்டியலிடும்போது, வழக்கை விசாரிக்கிறோம். 'அசல் உரிமத்தை வைத்துக் கொள்வதில், என்ன பிரச்னை உள்ளது? அசல் உரிமம், அவசியம் வைத் திருக்க வேண்டும். இந்த விஷயத்தில், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை' என்றனர்.
இதற்கிடையில், 'அசல் உரிமம்வைத்திருக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது' என, அரசுக்கு உத்தர விடக் கோரி, அஸ்வின் என்பவர் தாக்கல் செய்த மனு:அசல் உரிமத்தை வைத்திருப்பதில், அசவுகரி யங்கள் உள்ளன. அசல் உரிமம் இல்லை என்றால் அபராதம் விதிப்பதாக, அமைச்சர் கூறியுள்ளார்.
மோட்டார் வாகன சட்டத்தில், உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தான் உள்ளது. அசல் உரிமம் பற்றி எதுவும் கூறப்படவில்லை. அசல் உரிமத்தை வைத் திருப்பதற்கும், சாலை விபத்துகள் குறைவ தற்கும், எந்த சம்பந்தமும் இல்லை.விபத்து ஏற்பட்டாலோ, போக்குவரத்து விதிகள் மீறப்பட் டாலோ, வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்யலாம்.
வாகனத்தின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், முகவரி போன்ற அனைத்து விபரங்களையும், போக்குவரத்து போலீசார்சேகரிக்க முடியும். சம்பந் தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவும்,குற்றத்தை ஒப்புக் கொண்டால், அபராதம் விதிக்கவும் முடியும்.
15 நாட்கள்:
எனவே, பயணத்தின்போது, அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை. உரிமத்தை தொலைத்து விட்டால், அதை திரும்ப பெறுவதற்குள், ஏகப்பட்ட கஷ்டங்கள்
அனுபவிக்க வேண்டி வரும். 'டூப்ளிகேட்' உரிமம் பெறுவதற்கு, 15 நாட்கள் ஆகி விடும். அமைச்சரின் அறிவிப்பு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வழி வகுக்கிறது. மாநில அரசுக்கு விதிமுறைகளை வகுக்க, மத்திய மோட்டார் வாகன சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
அதே நேரத்தில், மத்திய சட்டத்திற்கு முரணாக, விதிகளை கொண்டு வர முடியாது. அமைச்ச ரின் அறிவிப்பை அமல்படுத்தக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.அசல் ஓட்டுனர் உரிமம் தொடர்பான வழக்கு,
இந்த வார இறுதியில் விசாரணைக்கு வரும் என்றும், இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றம், எழுத்துபூர்வமான உத்தரவை பிறப்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment