Monday, August 21, 2017

நாளை அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பூட்டு::போராட்டத்தை முடக்க அதிகாரிகள் முடிவு

பதிவு செய்த நாள்
ஆக 21,2017 01:16


மதுரை:மதுரை மாவட்டத்தில், 'குறைந்தபட்சம் 80 சதவீதம் அரசு பள்ளிகளை பூட்டி ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்,' என ஆசிரியர் சங்கங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பள்ளிகளை பூட்டும் திட்டத்தை முறியடிக்க கல்வி அதிகாரிகளும் களத்தில் றங்கியுள்ளனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் நாளை (ஆக.,22) வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

'போராட்டத்தில் பங்கேற்றால் ஒரு நாள் சம்பளப் பிடித்தம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என அரசு எச்சரித்துள்ளது. இதற்கிடையே 'இப்போது இல்லை; இனி எப்போதும் இல்லை' என்ற புதிய கோஷத்துடன் அனைத்து 'ஆசிரியர்களும் கட்டாயம் போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்,' என எப்போதும் இல்லாத வகையில் ஒன்றிய மற்றும் வட்டார அளவில் ஆசிரியர் சங்கங்கள் (ஜாக்டோ) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறது.இதற்கிடையே நேற்று நடந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், 'பள்ளி சாவி தலைமையாசிரியரிடம் தான் உள்ளன. அனைத்து தொடக்க, உயர்நிலை, மேல்நிலை தலைமையாசிரியர்கள் யாரும் பள்ளியை திறக்க வேண்டாம்,' என முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ஜாக்டோ ஜியோ' போராட்ட ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:மதுரை மாவட்டத்தில் நாளை நடக்கும் போராட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் என மொத்தம் 22 சங்கங்கள் பங்கேற்கின்றன. சில சங்கங்கள் தார்மீக ஆதரவு மட்டும் தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்காத முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். அதனால் பாதிப்பு ஏற்படாது. மாவட்டத்தில் குறைந்தபட்சம் 80 சதவீதம் பள்ளிகளை பூட்டுப் போட்டு பூட்டி விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகுதி காண் பருவம் முடிக்காத சில ஆசிரியர்கள் பணிக்கு செல்லலாம். அதை தவிர்த்து ஆசிரியர்கள் பெரும்பாலும் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர், என்றார்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "போராட்டங்களில் பங்கேற்கும் ஆசிரியர் விபரங்களை முதல் நாளே தெரிவிக்க வலியுறுத்தியுள்ளோம். பள்ளிக்கு தலைமையாசிரியர்கள் வராதபட்சத்தில் அடுத்த நிலையில் உள்ள ஆசிரியரிடம் அவர்கள் சாவியை ஒப்படைக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தால் ஒரு பள்ளி கூட மூடப்படும் சூழ்நிலை ஏற்படாது. உரிய மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.




Advertisement

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...