பாங்காக்கில் இருந்து சென்னைக்கு தங்கச்செயின் கடத்திய பெண் பயணி கைது
2017-08-21@ 00:42:50
மீனம்பாக்கம்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த பன்சாலா (39) என்ற பெண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை. ஆனாலும், சந்தேகம் தீராத அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது பன்சாலா தான் கட்டியிருந்த புடவைக்குள் கொத்துக் கொத்தாக புத்தம் புதிய தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 16 செயின்கள் இருந்தன. அதன் மொத்த எடை அரை கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.15லட்சம் ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் பன்சாலாவை கைது செய்து அரை கிலோ மதிப்புள்ள தங்க செயின்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக சிவகங்கையை சேர்ந்த கருப்பையா (44) என்பவர் வந்தார். இவர், இலங்கை வழியாக அபுதாபிக்கு செல்வதற்கான டிக்கெட் வைத்திருந்தார். சுங்க அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரது சூட்கேசில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். ரூ.10 லட்சம் மதிப்புடைய வெளி நாட்டு கரன்சிகளை அவரிடம் இருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் கருப்பையாவின் பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment