Monday, August 28, 2017

தமிழகத்தில் பா.ஜ.க.,ஆட்சி:நயினார் நாகேந்திரன் பேச்சு

பதிவு செய்த நாள்27ஆக
2017
23:41

திருநெல்வேலி:அ.தி.மு.க.வில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் பா.ஜ.,வில் இணைந்தேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியை சேர்ந்த அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் நேற்றுமுன்தினம் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று அவர் நெல்லை மாவட்ட பா.ஜ.,அலுவலகத்திற்கு வந்தார்.அவருக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், மாநில விவசாய அணி செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். 

நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கட்சியில் எம்.ஜி.ஆர்.,காலத்தில் இருந்தே மாணவர் அணியில் பணியாற்றியுள்ளனே். ஜெ.,எனக்கு நான்கு முறை சட்டசபையில் போட்டியிடும் வாய்ப்பளித்தார். ஒரு முறை அமைச்சராக்கினார். ஜெ.,மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டது. அணிகளாக பிரிந்து தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. இ.பி.எஸ்.க்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த ஓ.பி.எஸ்.,சை மீண்டும் துணை முதல்வராக்கியுள்ளனர். எனவே ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற முழக்கத்தின்படி மத்தியில் மோடி அரசைப்போல தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளேன். 

நான் இணையும்போது ஆதரவாளர்கள் என யாரையும் அழைத்துச்செல்லவில்லை. எனக்கு அனைத்து சமூகங்களிலும் நண்பர்கள் உள்ளனர். எனவே நான் பா.ஜ.,விலும் மற்ற மதத்தினரை ஆதரித்து செயல்படுவேன். தமிழகத்தில் அ.தி.மு.க.பலவீனமடைந்துவிட்டதா என கேட்கிறீர்கள்.அ.தி.மு.க.,பலவீனம் அடைந்துவிட்டது என கூறமாட்டேன். ஆனால் பாரதிய ஜனதா பலமடைந்துவருகிறது என்பேன் என்றார்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...