Monday, August 28, 2017

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தபோது விமான கழிவறையில் பதுக்கி வைத்த ரூ.48 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

2017-08-28@ 00:11:24




சென்னை:சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது, கடத்தல் தங்கத்துடன் யாரும் வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், அதிகாரிகள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து சர்வதேச விமானமாக சென்னை வந்த விமானம் நேற்று அதிகாலை, உள்நாட்டு முனையத்தில் இருந்து சென்னை, மும்பை விமானமாக செல்ல விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த விமானத்தில், மும்பை செல்ல இருந்த 149 பயணிகள் ஏற தொடங்கினர். உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த விமானத்துக்குள் ஏறி விமானத்தின் இருக்கைகள், அதன் அடிபாகங்களில் சோதனையிட்டனர். விமானத்தில் இருந்த 4 கழிவறைகளில் உயர் வகுப்பு பயணிகளுக்கான கழிவறைக்குள் தண்ணீர் தொட்டியில் பிரவுன் கலர் பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றப்பட்டு ஒரு பார்சல் இருந்தது.

இதையடுத்து அதிகாரிகள் பார்சலை பிரித்தபோது 100 கிராம் எடை கொண்ட 16 தங்க கட்டிகள் என மொத்தம் 1.6 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.48 லட்சம் ஆகும். இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மும்பை செல்ல இருந்த 149 பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் சந்தேகப்படும் விதமாக இருந்த ஒரு பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விசாரணைக்கு, அவர்களது அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விமானத்தில் திடீர் சோதனை நடத்தியபோது, இதே விமானம் மும்பைக்கு செல்லும் என்ற தகவல் கடத்தல் ஆசாமிகளுக்கு எப்படி தெரியும்? இது மிகவும் ரகசியமாக, வைக்கப்பட்டிருக்கும். எனவே, சென்னை விமான நிலையத்தில் கடத்தல் ஆசாமிகளுக்கு தகவல் கொடுக்கும் கருப்பு ஆடுகள் யார்? என்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...