Monday, August 28, 2017

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சதி திட்டம் திமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்தால் சட்டப்படி சந்திப்போம்: திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு

2017-08-28@ 00:08:21




திருவாரூர்: ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக சதி திட்டம் தீட்டி திமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்தால் சட்டப்படி சந்திப்போம் என்று கொரடாச்சேரியில் நடந்த திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனின் சகோதரரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான மறைந்த பூண்டி கலைச்செல்வன் மகள் கயல்விழிக்கும், விஜய் ஆனந்துக்கும் திருமணம், கொரடாச்சேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

இங்கு ேபசியவர்கள் என்னை நாளைய முதல்வர் என்று தெரிவித்தனர். இன்னும் ஒரு மாதத்தில் நான் முதல்வர் ஆவேன் என்றும் இங்கு பேசினர். இதை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு தலைப்பு செய்தியாக போடுவார்கள். அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

சென்னையில் தமிழக ஆளுநரை திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உள்ளனர். ஆளுநரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதியையும், நீதிமன்றத்தையும் நாங்கள் அணுகுவோம். கடந்த தேர்தலில் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக வென்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த அரசு மக்கள் பணிகள் செய்வதற்கு பதில், அடித்த கொள்ளையை காப்பாற்றவும், தொடர்ந்து கொள்ளை அடிக்கவும், வருமான வரித்துறையிடமிருந்து தங்களை காத்து கொள்ளவும் மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் மானங்கெட்ட அரசாக உள்ளது. இதனால் மாநில உரிமைகள் பல பறிபோய் விட்டன. ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்று கனவுகூட காண முடியாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரிடம் தினகரன் ஆதரவாளர்களான 19 எம்எல்ஏக்கள் தனித்தனியாக மனு கொடுத்திருக்கிறார்கள். மேலும் சில எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே இந்த குதிரை பேர ஆட்சி, மெஜாரிட்டியை இழந்துள்ளது.

குட்கா என்பது ஒரு போதைப்பொருள். தடை செய்யப்பட்ட ெபாருள். புற்றுநோயை உண்டாக்க கூடிய பொருள். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானிய கோரிக்கையில் குட்கா விற்கப்படுவது பற்றி ஆதாரத்துடன் காட்டினேன். சில தி.மு.க. எம்எல்ஏக்களும் அதை காட்டினர். திருட்டுத்தனமாக இது விற்கப்படுவதால் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் குட்கா விற்பனையை தடுக்க முற்பட்டேன். இதில் தவறு இருக்கும்பட்சத்தில் 4, 5 நாட்களுக்குள் உரிமை மீறல் குழுவை கூட்டியிருந்தால் அதை நான் வரவேற்று இருப்பேன். கடந்த ஜூலை 19ம் தேதி நடந்த சம்பவத்துக்கு 40 நாள் கழித்து உரிமை மீறல் குழுவை கூட்டி பேசவுள்ளனர். அந்த குழுவில் நானும் ஒரு உறுப்பினர். முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், மதிவாணன் ஆகியோரும் உறுப்பினர்கள். அந்த 2 பேருக்கும், நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பி உள்ளனர்.

எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. தி.மு.க. எம்எல்ஏக்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் சதி திட்டத்தில் உரிமை மீறல் குழுவை கூட்டி உள்ளனர். திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு அவர் பேசினார்.இதைதொடர்ந்து காட்டூரில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு ெசன்று மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மக்கள் குறைகேட்பு

திருவாரூரில் நேற்று காலை மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். காலை 6 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதிகளை 2 முறை (6 கி.மீ. தூரம்) சுற்றி வந்தார். பின்னர் வடக்குவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தார். இதைதொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...