Monday, August 28, 2017

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள நிலையில், தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.





.தி.மு.க., தலைமையகத்தில், இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறிக்க, முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், தலைமை செயலகத்தில், சட்டசபை உரிமை குழு கூடி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது.

இந்த இரு கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகள், தமிழக அரசியலில் புயலை கிளப்ப லாம் என்பதால், ஆளும் கட்சி தொண்டர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும், முடிவுகளை அறிய ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தில், தற்போது குழப்பமான அரசியல் சூழல் நிலவு கிறது. அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், அவர்களால் ஒதுக்கப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்பட துவங்கி உள்ளார்.

அவருக்கு, 21 எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு அளித்துள்ளனர். அவர்களில், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவ தாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.



சந்திப்பு


எனவே, 'சட்டசபையை கூட்டி, பெரும்பான் மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தர விட வேண்டும்' என, கவர்னருக்கு எதிர்க்கட்சி கள் கடிதம் அனுப்பி உள்ளன. சட்டசபை எதிர்க் கட்சி துணைத் தலைவர், துரைமுருகன் தலைமையில், எதிர்க்கட்சி பிரதிநிதிகள், கவர்னரை நேற்று சந்தித்து, இது தொடர்பாக கடிதம் அளித்தனர்.

அதனால், கவர்னர் என்ன முடிவெடுக்கப் போகி றார் என, அனைத்து கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.அதே நேரத்தில் பழனிசாமிக்கு ஆதரவான எம்.எல்.ஏ.,க்களில்


சிலர், 'ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தலை சந்திக்கலாம்' என, வலியுறுத்த துவங்கி உள்ளனர்.



முக்கிய முடிவு


இந்த சூழ்நிலையில், இன்று காலை, 9:30 மணிக்கு, அ.தி.மு.க., - எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.இதில், தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.,க்கள் பங்கேற்பரா என, தெரியவில்லை.

இக்கூட்டத்தில், கட்சி பொதுக்குழுவை கூட்டு வது; மன்னார்குடி கும்பலை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும்வகையில், சசிகலாவின் கட்சி பதவியை பறிப்பது; கட்சியிலிருந்து அவரை நீக்குவது உட்பட, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.பின், அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்; இரட்டை இலையை மீட்க, தேர்தல் கமிஷனில் கொடுக்க வேண்டிய ஆவணங்கள் போன்றவை குறித்தும் முடிவெடுக்கப்படுகிறது.இதில், எடுக்கப்படும் முடிவை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, தினகரன் மற்றும் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே போல, சட்டசபை உரிமைக்குழு கூட்டமும், இன்று தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. தடை செய்யப்பட்ட, போதை பாக்குகளை, தி.மு.க.,வினர் சட்ட சபைக்கு எடுத்து வந்த விவகாரம், விவாதிக்கப் பட உள்ளது. இதில், எடுக்கப் போகும் முடிவும், அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு கூட்டங்களிலும், எடுக்க உள்ள முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் மாற் றத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளுங்கட்சி யினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும், கூட்ட முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.



தினகரன் வலையில் 5 மந்திரிகள்


இன்று நடக்கும், அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட் டத்தில், சசிகலா, தினகரன் இருவரையும், கட்சி யின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து


Advertisement

நீக்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதை அறிந்த தினகரன், முதல்வர் பழனிசாமி வகித்த, சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியை நேற்று பறித்துள்ளார். மேலும், தினகரன் விரித்த வலையில், ஐந்து அமைச்சர்கள் சிக்கி உள்ளனர்.

'சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி னால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்' என, அவர் கள், தினகரன் ஆதரவாளர்களிடம் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மோதல் ஏற்படும் அபாயம்


'பழனிசாமியை நீக்கிவிட்டு, சபாநாயகருக்கு, முதல்வர் பதவி வழங்கினால், சமரசத்திற்கு தயார்' என, திவாகரன் தரப்பினர் அறிவித்தி ருந்தனர். ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த, 25 எம்.எல்.ஏ.,க் களும், இந்த கோரிக்கையை வலியுறுத்தவும், சசிகலாவை நீக்கினால், எதிர்ப்பு தெரிவிக்கவும், திட்ட மிட்டுள்ளனர்.இதனால், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில்,மோதல் சம்பவங்கள் நடக்குமோ என்ற அச்சம், கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



தாவும் எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி அதிர்ச்சி


அ.தி.மு.க.,வின் அணிகளும் இணைந்த பின், தினகரன் அணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் தாவி வருவதால், முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தினகரன் அணியில், 19 எம்.எல். ஏ.,க்கள் மட்டுமே, முதலில், புதுச்சேரிக்கு சென்று தங்கினர். பின், அறந்தாங்கி ரத்ன சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும், தினகரனுக்கு ஆதரவு அளித்தனர். நேற்று, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ், தேனியில் தினகரனை சந்தித்து ஆதரவு அளித்தார். பின், 'நான் முதல்வர் பழனிசாமி அணியில்தான் இருக்கிறேன்' என, பல்டி அடித்தார்.

ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, தினகரன் அணியிலிருந்து, பழனிசாமி அணிக்கு தாவினார். தற்போது, மீண்டும் தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி, எந்த நேரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் பிடித்து விடுவரோ என்ற குழப்பம் நீடிப்பதால், முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...