Tuesday, April 18, 2017

Medical Council of India


Visit to Governor chamber



திருமங்கலம் - நேரு பூங்கா இடையே ஏப். 21-இல் மெட்ரோ ரயில் சேவை?

By ஆர்.ஜி.ஜெகதீஷ்  |   Published on : 18th April 2017 04:56 AM  |     
metro-rail
சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான 7.6 கி.மீ. தூரத்துக்கான சென்னை மாநகரின் முதல் மெட்ரோ ரயில் சுரங்க வழி சேவை வரும் 21- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2012-ஆம் ஆண்டு நேரு பூங்காவில் தொடங்கியது. இந்தப் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடந்து வந்தது.
திருமங்கலம் தொடங்கி நேரு பூங்கா வரையிலும் சுரங்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு மேற்காண்டது.
இந்த இரண்டு நாள் ஆய்வில் திருப்தி ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு ஆணையர் பொது மக்கள் போக்குவரத்துக்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சென்னையின் முதல் சுரங்க வழி மெட்ரோ ரயில் சேவையான திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான பயணிகள் சேவை வரும் வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 21) தொடங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
மாநில அரசிடம் தேதி கேட்பு: மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் சான்று பெற்ற பின்பு, திருமங்கலம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான தேதியை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் குறிப்பிட்டு அனுப்பிய தேதிக்கு மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு மாநில அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசலைக் குறைக்க....: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு ரூ 20 ஆயிரம் கோடி செலவில் இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறக்கும் பாதை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், சின்னமலை முதல் - விமான நிலையம் வரை, ஆலந்தூர் - பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையிலேயே சவாலாக இருந்தது நேரு பூங்கா - எழும்பூர் இடையிலான சுரங்கப் பாதை மட்டுமே. இந்தப் பகுதியில் அதிகமான பாறைகள் இருந்ததால் கடினமான சேதங்களை டனல் போரிங் இயந்திரம் சந்தித்தது. கிட்டத்தட்ட 2012-ஆம் ஆண்டில் சுரங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016-ஆம் ஆண்டுதான் முடிவுற்றன.
இந்தியாவிலேயே அதிகம்: இந்தியாவின் பல்வேறு மாநகரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் உயர்நிலை பாலத்தில்தான் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் மட்டும் சுமார் 25 கி.மீ. தூரம் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பிரான்ஸ், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டன. சாலைக்குக் கீழே சுமார் 20 மீட்டர் ஆழத்தில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. சாலை மட்டத்திலிருந்து 17 மீட்டருக்கு கீழே சுரங்கம் தோண்டப்படுகிறது. 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக இந்தச் சுரங்க ரயில் பாதை அமைகிறது.
மேலும், 6.2 மீட்டர் விட்டத்தில் சுரங்கப் பாதை அமைவதால், அந்தப் பாதையிலிருந்து, தரைப் பகுதி 10 அடி உயரத்துக்கு மேல்தான் இருக்கும். இதனால், குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்களுக்கு பாதிப்பு இருக்காது. ஒரு நாளைக்கு 5 முதல் 6 மீட்டர் தொலைவு வரை சுரங்கம் தோண்டப்பட்டது.

    இவர்களே ஒளிரும் இந்தியாவின் உதாரண புருஷர்கள்!

    By ஹரிணி  |   Published on : 17th April 2017 04:39 PM  |   
    better_india1

    மலை மலையாகக் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்ற வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம். இதோ மகாராஷ்டிராவில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருக்கிறது அதற்கான வழி! இங்கே அந்தப் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு தண்ணீரை தேக்கி வைத்திருக்கிறார்கள். அதெப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா? பருவ மழைக்காலங்களில் வல்னியில் இருக்கும் 30 குளங்கள் மற்றும் ஏரிகளில் தேக்கப்படும் தண்ணீரானாது, எப்போது வேண்டுமானாலும் தீர்ந்து விடலாம் எனும் நிலை தான் இங்கு நீடிக்கிறது. ஏனெனில் கோடை காலத்தில் இந்த கிராமத்தின் வறண்ட மண் வெகு சீக்கிரத்தில் தேக்கப்பட்ட தண்ணீரை உறிஞ்சி விடுகிறது. அதைத் தடுக்க என்ன செய்வது என்று யோசித்த கிராம மக்கள் கண்டறிந்த உபாயம் தான் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்துவது என்பது.
    என்ன குழப்பமாக இருக்கிறது. குழம்ப வேண்டிய அவசியமே இல்லை. அதாவது ரேப்பர்கள் மற்றும் பாலீதீன் கவர்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சுத்தப் படுத்தப் பட்டு ஒன்றாக்கி மிகப்பெரிய தார்பாய்கள் போன்ற பெரிய பெரிய ஷீட்டுகளாக தைக்கப்படுகின்றன. இந்த ஜெயண்ட் சைஸ் பாலிதீன் ஷீட்டுகள் இப்போது குளங்களின் அடிப்பகுதியில் தண்ணீர் உறிஞ்சப் படுவதை தவிர்க்கும் வண்ணம் மேலே கவர் செய்யப்படுகிறது. அவை காற்றுக்கு அகன்று பறக்காமல் இருக்க 1 அடி நீளத்திற்கு மணல் கொட்டப்பட்டு அந்த ஷீட்டுகளின் பறக்காத தன்மை உறுதி செய்யப்படுகிறது. இப்போது இந்த ஷீட்டுகள் தேக்கப்பட்ட தண்ணீரை நிலம் உறிஞ்சாமல் தடுக்கிறது. டிசம்பருக்கு முன்பே குளங்களும், ஏரிகளும் வறண்டு போவதைத் தடுக்க இதைத் தவிர வேறென்ன தான் செய்வது? இப்போது பிளாஸ்டிக் ஷீட்டுகளின் உதவியால் தேக்கப்பட்ட தண்ணீரால் மே மாதம் வரை கிராம மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
    வல்னி கிராம மக்களின் இந்த சீரிய முயற்சியை வீடியோ வடிவில் காண...


    இப்படித்தான் இந்த கிராம மக்கள் தங்களது தண்ணீர் தேவையைச் சமாளிக்கிறார்கள்... இல்லையில்லை சமாளிக்கிறார்கள் என்பதை விட சாதிக்கிறார்கள் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். 
    ஆம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கதையாக குப்பைகளை அகற்றுவதையும், தண்ணீர் சேமிப்பையும் ஒரே சமயத்தில் வெற்றிகரமாக கையாண்டு தங்களது பிரச்னையை எளிதாகத் தீர்த்துக் கொண்டுள்ளார்கள் இந்த மக்கள். இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகளான கிராம மக்களை எப்படிப் பாராட்டினாளும் தகும். நாம் வேண்டுமானால் அவர்களுக்கு உதாரண புருஷர்கள் என்ற பட்டம் தந்து விடலாம். சரி தானே?! பொருத்தமாக இருக்கும்.
    இந்தக் கிராமம் மகாராஷ்டிராவில் நாக்பூருக்கு அருகில் இருக்கிறது.

    20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்: வேலூர் 110 டிகிரி; சென்னை 108 டிகிரி

    By DIN  |   Published on : 18th April 2017 04:58 AM
    summer
    வெயிலில் இருந்து தப்ப சென்னை அண்ணாசாலையில் ஸ்கூட்டரில் செல்லும் தாயின் துப்பட்டாவுக்குள் அடைக்கலம் புகுந்த பள்ளி மாணவி.
    தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    இதுதொடர்பான எச்சரிக்கையை குறிப்பிட்ட 20 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதவிர தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பின் இயக்குநர் ஜி.லதாவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைக் குறிப்பிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளார்.
    தமிழகத்தில் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. தொடக்கம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. கடற்காற்று நுழைந்ததால் கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வந்தது.
    மழை பதிவு: அதிக வெப்பத்தின் காரணமாக உருவாகும் இடிமேகங்களால் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஈரோடு மாவட்டம் தாளவாடி, திருப்பத்தூர் மூலனூரில் 30 மி.மீ., விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சேலம் மாவட்டம் ஏற்காடில் 20 மி.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 10 மீ.மீ. மழை பெய்துள்ளது.
    20 மாவட்டங்களில் அனல் காற்று: தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வடதமிழகத்தைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர புதுச்சேரிக்கும் அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    வெளியே வரவேண்டாம்: பகலில் அனல் காற்று வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். நண்பகலில் தேவையற்ற பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டாம். மேலும் பள்ளிகளில் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளன.
    இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது: மேற்கு திசையில் ஆந்திரத்தில் இருந்து வறண்ட காற்று தமிழகத்துக்குள் நுழைவதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். வடதமிழகத்தைச் சேர்ந்த 20 மாவட்டங்களில் இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும். வெப்பம் அதிகரிக்கும் நிலை அனல் காற்று என்று குறிப்பிடப்படுகிறது.
    வறண்ட காற்று வீசுவதால், கடற்காற்று நிலத்துக்குள் நுழைவதிலும் தாமதம் ஏற்படும். இதனால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை உள்ளிட்டவற்றிலும் வெயில் அதிகரிக்கும். ஆனால் வடதமிழகத்தைக் காட்டிலும் தென்தமிழகத்தில் 2 அல்லது 3 டிகிரி வெப்பம் குறைவாகக் காணப்படும். கோடை மழைக்கு எங்கும் வாய்ப்பு இல்லை என்றார்.
    13 இடங்களில் சதம்: திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி பதிவானது. புதுச்சேரியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புதுச்சேரிக்கும் அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    திங்கள்கிழமை பதிவான வெயில் (ஃபாரன்ஹீட்டில்)
    வேலூர் 110
    சென்னை 108
    மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி 107
    பரங்கிப்பேட்டை,
    திருப்பத்தூர் 106
    தருமபுரி,கரூர் பரமத்தி,
    சேலம் 105
    புதுச்சேரி, நாகப்பட்டினம் 103
    கடலூர் 102
    தொண்டி 100
    காரைக்கால், கோவை 99

    18 மாவட்டங்களில்அனல் காற்று வீசும் !!

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் புதனன்று அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும்
    கூறியுள்ளது. மேலும், பகலில் தேவையின்றி வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனிடை‌யே, 18 மாவட்டங்களிலும் பள்ளிகளில் திறந்தவெளியில் பாடம் நடத்த கூடாது என்று மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
    வாட்ஸ் அப்பில் மெசேஜ் தப்பா அனுப்பிட்டீங்களா... இனி கவலை வேண்டாம்!!!
    வாட்ஸ் அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்களா.. ஐந்து நிமிடத்துக்குள் அது தப்பு என்றுகண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஆம்...ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பி தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி விடலாம்.

    உலகில் பல கோடி வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ள வாட்ஸ் அப்  வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது மெசேஜ் அன் சென்ட் செய்யும் புதிய வசதியை அப்டேட் செய்துள்ளது.அண்மையில் ஜிப், போட்டோ, வீடியோ போன்றவற்றை ஸ்டேட்டஸில் வைக்கும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப்.

     தற்போது மெசேஜ் அனுப்புவதிலும், எழுத்துக்களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.இந்த புதிய அப்டேடில் ஒருவருக்கு நாம் அனுப்பும் மெசேஜை தேவை இல்லையெனில் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக அன் சென்ட் மற்றும் எடிட்செய்யும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மெசேஜ்அனுப்பும் பொது அதில் சில குறிப்பிட்ட எழுத்துகளை மேற்கோள் செய்து காட்டுவதற்கு இட்டலிக் மற்றும் போல்ட் ஸ்டைலில் டைப் செய்யும் வசதியையும் அறிமுகபடுத்தபடவுள்ளது.

    தற்போது சோதனையில் உள்ள இந்தபதிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற வெர்ஷனை அப்டேட் செய்து இந்த புதிய வசதியை பெறலாம்.

    ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

    ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...