Thursday, March 1, 2018

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு இன்று முதல் கட்டாயம்

Updated : மார் 01, 2018 01:37 | Added : மார் 01, 2018 00:26



'ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள, 1.94 கோடி ரேஷன் கார்டுகளில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. 'மார்ச் முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் தான், ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்' என்று, உணவு துறை சமீபத்தில் தெரிவித்தது. அதன்படி, இன்று முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்கள் ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஸ்மார்ட் கார்டு வாங்காதவர்களின் கார்டுகள், ரேஷன் கடைகளில் உள்ளன; அவற்றை, சம்பந்தப்பட்டவர்கள் வாங்கி கொள்ளலாம். புகைப்படம் உள்ளிட்ட சரியான விபரங்களை தராதவர்கள், அதை வழங்கிய பின் அவர்களுக்கான கார்டுகள் அச்சிட்டு வழங்கப்படும்' என்றார்.

- நமது நிருபர் -

இன்று முதல் 'ஏர்செல்' சேவையில் பாதிப்பு

Added : மார் 01, 2018 00:25

சென்னை, ''இன்று முதல், 'ஏர்செல்' மொபைல் போன் சேவையில் பாதிப்பு இருக்கும்,'' என, அந்நிறுவனத்தின், தென் மாநில தலைவர், சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

'ஏர்செல்' நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியது. அதனால், அந்நிறுவனத்திற்கு, மொபைல் போன் கோபுரங்களை, வாடகைக்கு விட்ட நிறுவனத்திற்கு, சேர வேண்டிய பாக்கித் தொகையை தர முடியவில்லை. அதைத் தொடர்ந்து, கோபுர இணைப்புகளை, அந்நிறுவனம் துண்டித்தது. எனினும், ஓரளவிற்கு சேவை சீரடைய துவங்கியது. இந்நிலையில், சென்னையில் இயங்கி வந்த, குறைந்த எண்ணிக்கையிலான இணைப்புகளும், நேற்று செயலிழக்க துவங்கின. அது குறித்து, அந்நிறுவன தலைவர், சங்கரநாராயணனிடம் கேட்டபோது, ''இன்று முதல், ஏர்செல் சேவை பெரிதும் பாதிக்கப்படும்,'' என்றார்.
பாஸ்போர்ட்டை முடக்கலாமா? வழிமுறைகளை பிறப்பித்தது ஐகோர்ட்

Added : மார் 01, 2018 03:41 | 



லண்டன் செல்ல, டாக்டருக்குரிய பாஸ்போர்ட்டை வழங்கும்படி, எழும்பூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, முடநீக்கியல் மருத்துவர், சி.ரமேஷ்பாபு. இவருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீஸ், வழக்குப் பதிவு செய்தது. பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

லண்டனில் இருக்கும் மகனை பார்க்க செல்வதால், பாஸ்போர்ட் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில், டாக்டர் ரமேஷ்பாபு மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, சென்னை, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், ஆர்.சி.பால்கனகராஜ், ''புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. பாஸ்போர்ட்டை, நீதிமன்றம் முடக்கி வைக்க முடியாது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி, எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவு:

ஒருவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை, பாஸ்போர்ட் அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும். பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய, போலீசாருக்கு அதிகாரம் இருந்தாலும், அதை முடக்கும் அதிகாரம் இல்லை. பாஸ்போர்ட்டை நீதிமன்றம் முடக்கி வைக்க முடியாது. போலீசாருக்கும், கீழமை நீதிமன்றங்களுக்கும் உதவும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை பிறப்பிக்கிறேன்.

 பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த உடன், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில், காலதாமதமின்றி, போலீசார் ஒப்படைக்க வேண்டும்

 பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க, நீதிமன்றத்துக்கும் அதிகாரமில்லை. முடக்கம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, பாஸ்போர்ட் அதிகாரிக்கு தான், உத்தரவிட வேண்டும்

 பாஸ்போர்ட் யார் பெயரில் உள்ளதோ, அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்

 வழக்கின் தன்மை, சூழ்நிலையை பரிசீலித்து, எந்த முடிவையும், பாஸ்போர்ட் அதிகாரி எடுக்கலாம். அதற்கான விரிவான காரணங்களை கூற வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, எழும்பூர் நீதிமன்ற உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரிடம் உத்தரவாதம் பெற்று, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி, எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்படுகிறது.

லண்டன் சென்று திரும்பிய பின், பாஸ்போர்ட்டை ஒப்படைத்த பின், அதை, பாஸ்போர்ட் அதிகாரி வசம் வைத்திருக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
ஜெயேந்திரர் வாழ்க்கை குறிப்பு

ஜெயேந்திரர் வாழ்க்கை குறிப்பு
 
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ அய்யர். 
 
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் கோட்டூருக்கு அருகே உள்ள இருள்நீக்கி என்ற கிராமத்தில் 1935–ம் ஆண்டு ஜூலை மாதம் 18–ந்தேதி பிறந்தார்.

இவரது பெற்றோர் மகாதேவ அய்யர்–சரஸ்வதி அம்மாள். ஜெயேந்திரரின் இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ அய்யர்.

ஜெயேந்திரரின் தந்தை தெற்கு ரெயில்வேயில் பணியாற்றினார். அவர் விழுப்புரத்தில் பணியாற்றியதால் ஜெயேந்திரரின் இளமைப்பருவமும் அங்கேயே கழிந்தது. இவருக்கு வீட்டிலேயே கல்விப்பயிற்சி தொடங்கி நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பில் உள்ள பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார்.

19 வயதில் நியமனம்

சுப்பிரமணியம், பள்ளியில் முதல் மாணவராக திகழ்ந்ததால் அவரது ஆசிரியர் அவர் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்தார். ‘ஊரும், உலகும் புகழும் பிள்ளையாக பின்னாளில் வருவான்’ என அப்போதே அவர் சுப்பிரமணியத்தின் பெற்றோரிடம் கூறுவார்.

சுப்பிரமணியம் கல்வியில் புலமை பெற்றதுடன், சிறுவயதிலேயே புரோகித தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இந்து சமய பெரியவர்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார்.

எனவே இவர் 1954–ம் ஆண்டு மார்ச் 22–ந்தேதி காஞ்சி காமகோடி பீடத்தின் 69–வது ஆச்சார்யராக தனது 19–வது வயதிலேயே நியமிக்கப்பட்டார்.

மடாதிபதி ஆனார்

உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் ‘மகா பெரியவாள்’, ‘ஸ்ரீ பரமாச்சாரியாள்’ என போற்றி வணக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த நியமனத்தை செய்ததுடன், அவருக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றும் பெயர்சூட்டி இளைய மடாதிபதியாக அறிமுகம் செய்தார்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தன்னை ‘இச்சாசக்தி’ என்றும், ஜெயேந்திரரை ‘கிரியாசக்தி’ என்றும் வர்ணித்திருக்கிறார்.

1987–ம் ஆண்டு ஆகஸ்டு 22–ந்தேதி ஜெயேந்திரர் திடீரென மேற்கொண்ட ஆன்மிக பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 17 நாட்களுக்கு பிறகு அவர் மடத்திற்கு திரும்பினார். பின்னர் அவர் ஜன கல்யாண் என்ற அமைப்பை தொடங்கினார்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மறைவை தொடர்ந்து 1994–ம் ஆண்டில் ஜெயேந்திரர் காஞ்சி மடத்தின் முதன்மை மடாதிபதியாக பொறுப்பேற்றார்.

கும்பாபிஷேக பணிகள்

இவர் பீடாதிபதியாக இருந்த காலத்தில் நாடு முழுவதும் யாத்திரை செய்து பல்வேறு ஆன்மிக பணிகளையும், அறப்பணிகளையும் செய்துள்ளார். பல திருக்கோவில்களில் கும்பாபிஷேகங்களையும் நடத்தி இருக்கிறார்.

குறிப்பாக 2000–ம் ஆண்டு வங்காளதேசம் சென்றிருந்த ஜெயேந்திரர் டாக்காவில் உள்ள தகேஸ்வரி கோவிலுக்கு நுழைவாயில் அமைத்துக் கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

1998–ம் ஆண்டு கைலாய மலை மற்றும் மானசரோவருக்கு சென்றதுடன், அங்கு ஆதிசங்கரருக்கு சிலை நிறுவி வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். ஆதிசங்கரருக்கு பிறகு இந்த இடங்களுக்கு சென்ற ஒரே சங்கராச்சாரியார் என்ற பெருமையையும் ஜெயேந்திரர் பெற்றார்.

அயோத்தி பிரச்சினை தீருவதற்காக பலமுறை முயற்சிகளை மேற்கொண்டார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

சங்கரராமன் கொலை வழக்கு

ஆன்மிகப்பணிகள் தவிர கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ஜெயேந்திரர். பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி ஏழை–எளிய மக்களுக்கு பல வகைகளிலும் சேவை செய்துள்ள ஜெயேந்திரர், சேரிப்பகுதிகளில் வாழும் மக்களுக்கும் ஆன்மிக உணர்வை பரப்பியது குறிப்பிடத்தக்கது.

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த 2004–ஆம் ஆண்டு நவம்பர் 11–ந்தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2005–ம் ஆண்டு ஜனவரி 10–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இருந்து, கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் 27–ந்தேதி ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டார்.
மரணம் அடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் உடல் அடக்கம் இன்று நடைபெறுகிறது.

மார்ச் 01, 2018, 05:45 AM

காஞ்சீபுரம்,

மரணம் அடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல் இன்று அடக்கம்

2,520 வருடங்களுக்கு முன்பு ஆதி சங்கரரால் தொடங்கப்பட்டது காஞ்சி சங்கர மடம்.

காஞ்சி சங்கர மடத்தின் 69–வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள்.

82 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவ்வப்போது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற போதும் ஜெயேந்திரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஜெயேந்திரரின் அறையில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகிய இருவரையும் சந்தித்து ஆசிபெற்றார்.

பின்னர் ஜெயேந்திரர் இரவு 8 மணி அளவில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு கருவறையில் அம்மனுக்கு அவர் தீபாராதனை காட்டினார்.

அப்போது அங்கு வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு ஜெயேந்திரர் ஆசி வழங்கினார். அதன் பின்னர் ஜெயேந்திரர், காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பினார்.

நேற்று அதிகாலை ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளுக்கு திடீரென உடல் சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை, மடத்தில் இருந்தவர்கள் உடனடியாக காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆயினும் சிகிச்சை பலன் இன்றி காலை 8.10 மணி அளவில் ஜெயேந்திரர் மரணம் அடைந்தார்.

பின்னர் ஜெயேந்திரரின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து காஞ்சி சங்கரமடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மடத்தில் வழக்கமாக ஜெயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அறையில் அவரது உடல் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. அவரது நெற்றி நிறைய விபூதி பூசப்பட்டு, குங்கும பொட்டு வைக்கப்பட்டு இருந்தது.

ஜெயேந்திரரின் உடலுக்கு துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயேந்திரர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் சங்கர மடத்துக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பக்தர்கள் அவரது உடல் அருகில் நின்று விஷ்ணு சகஸ்ரநாம மந்திரத்தை பக்தி பரவசத்துடன் பாடினார்கள்.

தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஜெயேந்திரரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


ஜெயேந்திரரின் மறைவையொட்டி, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

மேலும் காஞ்சி சங்கரமடத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஞ்சீபுரம் ஏனாத்தூரில் இயங்கும் சங்கரா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஜெயேந்திரரின் உடல் இன்று (வியாழக்கிழமை) காஞ்சி சங்கர மடத்தில் உள்ள பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் சமாதியின் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஜெயேந்திரரின் விருப்பப்படியே அந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ஜெயேந்திரரின் உடல் சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் பிரம்பு கூடையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும்.

வேத முறைப்படி ‘பிருந்தாவன பிரவேச காரிய கிரமம்’ என்று அழைக்கப்படும் இறுதிச்சடங்கு காலை 8 மணிக்கு தொடங்கும் என்று காஞ்சி சங்கர மடம் அறிவித்து உள்ளது.
 Image result for exams images

பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்குகிறது முறைகேட்டில் ஈடுபட்டால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து

 
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 
 
சென்னை, 

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் எழுத இருக்கின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

காப்பி அடிக்கக்கூடாது, காலணி, ஷூ, பெல்ட் அணியக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் மாணவ– மாணவிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு இருக்கிறது.

இந்த தேர்வுக்காக 296 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மைய வளாகத்துக்கு செல்போன் எடுத்து வருதல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாக கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1, பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை பெற வசதியாக தேர்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கனவே 4 தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் கூடுதலாக 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களுக்கு தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Wednesday, February 28, 2018

Medical education panel submits report on incentive marks in Tamil Nadu
By Express News Service | Published: 28th February 2018 03:39 AM |

CHENNAI: The medical education committee, headed by P Umanath, Managing Director, Tamil Nadu Medical Services Corporation, submitted its report to the government recently.
The committee was constituted by the government to redefine or identify Primary Health Centres, hospitals located in remote and difficult areas for rewarding incentive marks to the service candidates for the admission to post-graduate degree courses for the academic year 2018-2019.

The committee observed that 100 per cent maximum permissible incentive marks are eligible for posts in government health institutions located in hilly areas. The incentive marks are eligible for all posts in government institutions in backward districts with difficult areas.

The report also said posts in all government institutions except institutions mentioned above are permissible for 40 per cent of incentive marks.

Posts not eligible for any incentive marks are all medical college hospitals, government health institutions located within municipal and corporation limits, except the above mentioned areas. Posts in Ariyalur, Cuddalore, Dharmapuri, Dindigul, Nagapattinam, Nilgiris, Perambalur, Pudukottai, Ramanathapuram, Sivagangai, Theni, Thiruvannamalai, Thiruvarur, Vellore, Villupuram and Virudhunagar districts are defined as difficult areas which are eligible for 100 per cent incentive marks..

As per MCI regulations, weightage in the marks may be given at the rate of 10 to 30 per cent of the marks obtained each for year of service in remote and difficult areas of the marks obtained in NEET-PG.
The report was uploaded on website by the Tamil Nadu Health and Family Welfare Department on Monday.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...