Thursday, March 1, 2018

 Image result for exams images

பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்குகிறது முறைகேட்டில் ஈடுபட்டால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து

 
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 
 
சென்னை, 

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் எழுத இருக்கின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

காப்பி அடிக்கக்கூடாது, காலணி, ஷூ, பெல்ட் அணியக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் மாணவ– மாணவிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு இருக்கிறது.

இந்த தேர்வுக்காக 296 வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மைய வளாகத்துக்கு செல்போன் எடுத்து வருதல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாக கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1, பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை பெற வசதியாக தேர்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கனவே 4 தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் கூடுதலாக 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களுக்கு தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024